இயற்கை விவசாயம்

15 சென்ட் நிலத்தில் சொட்டுநீர் பாசனத்தில் தக்காளி…

தக்காளி சாகுபடி குறித்துக் கூறிய அஜய், ”நிலத்தை நன்றாக உழவு செய்து, அதற்கு மேலே அரையடி உயரத்துக்குத் தென்னைநார் கழிவைப் பரப்பி, ரெண்டரை அடிக்கு ஒரு லேட்ரல் குழாய் அமைச்சோம். சொட்டுநீர்க் குழாயில் துளையிருக்கிற இடத்திற்கு நேராக இரண்டு பக்கமும் விதையை ஊன்றினோம். சொட்டுநீர் மூலமாக பாசனம் செய்யும்போதெல்லாம் ஜீவாமிர்தம் கலந்து கொடுத்தோம். 15 நாளைக்கு ஒருமுறை பஞ்சகவ்யா கொடுத்தோம்.

காய் பிடிச்ச பிறகு மூணு முறை மீன் அமினோ அமிலம் தெளிச்சோம். செடிகள் காய்ச்சு தள்ளிடுச்சு. ஒரு நாள் விட்டு ஒருநாள், 150 கிலோவில் இருந்து 250 கிலோ வரை காய் கிடைச்சது. எனக்கு மகசூல் வந்த நேரத்தில் பக்கத்து விவசாயிகள் தக்காளியை, கிலோ ரெண்டு ரூபாய்க்கும் மூன்று ரூபாய்க்கும் விற்றுக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இது இயற்கை என்பதனால் ஒரு நண்பர் என் தக்காளியை கிலோ 30 ரூபாய்க்கு எடுத்துக்கொண்டார். அது மூலமாக எனக்கு 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. இப்பொழுது தக்காளி உள்பட எல்லாக் காயும் மகசூல் முடிஞ்சிருக்கு. முள்ளங்கியும், கேழ்வரகு மட்டும் வயலில் இருக்கு. வழக்கமாக முள்ளங்கியை விரும்பிச் சாப்பிடமாட்டாங்க. ஆனா, இயற்கையில்  விளைந்த இந்த முள்ளங்கியோட சுவைக்காக இதைச் சாப்பிட்டவங்க கேட்டுக்கேட்டு வாங்கிக்கொள்கின்றனர்.” என்றார்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

To Top