Skip to content

அதிக மகசூல் கொடுக்கும் நிலக்கடலை, பருத்தி மற்றும் கரும்பு !

நிலக்கடலை [வி.ஆர்.ஐ]

105-110 நாட்கள் வயது கொண்ட இப்பயிர், ஏ.எல்.ஆர்-3, ஏ.கே-303 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. மானாவாரியாகப் பயிரிட ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர் மாதங்கள் ஏற்றவை. இறவைக்கு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே மாதங்கள் ஏற்றவை. ஒரு ஹெக்டேருக்கு மானாவாரியில், 2,130 கிலோவும் இறவையில் 2,700 கிலோவும் மகசூல் கிடைக்கும். வி.ஆர்.ஐ-6 ரகத்தை விட அதிக மகசூல் கொடுக்கக்கூடியது. நிலக்கடலை விளையும் அனைத்துப் பகுதிகளும் சாகுபடி செய்ய ஏற்றவை. டிக்கா இலைப்புள்ளி நோய் மற்றும் துரு நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. உடைப்புத் திறன் 70% கொண்டது. எண்ணெய்ச்சத்து 49% கொண்டது.

பருத்தி [கோ-14]

150 நாட்கள் வயது கொண்ட இப்பயிர், எம்.சி.யு-5 டி.சி.எச்-92-7, எம்.சி.யு-5 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் பயிரிட ஏற்றவை. ஹெக்டேருக்கு 1,768 கிலோ மகசூல் கொடுக்கக்கூடியது. தமிழ்நாட்டின் குளிர்கால இறவைப் பகுதிகளான கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு ஏற்றது. மிக நீண்ட இழைப்பருத்தி வலிமை (35.0மி.மீ) கொண்டது. 34.8% அரவைத்திறன் கொண்டது (Ginning out turn)

டெக்ஸ் 70-ம் நம்பர் நூல் நூற்புத்திறன் கொண்டது.

கரும்பு [கோ-021]

ஓர் ஆண்டு வயது கொண்ட இந்த ரகம், கோ-7201, ஐ.எஸ்.எஸ்-106 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் பயிரிட ஏற்றவை. ஒரு ஹெக்டேருக்கு 150.56 டன் மகசூல் கொடுக்கக்கூடியது. 12.8% வாணிபச் சர்க்கரை அளவு கொண்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பயிரிட ஏற்றது. இது கோ-86032 ரகத்தை விட கூடுதல் கரும்பு மற்றும் சர்க்கரை மகசூல் கொடுக்கும். அதிக தூர்களுடன் நேராக வளரும் தன்மை கொண்டது. உயர்தரமான வெல்லம் கிடைக்கும். கட்டைப் பயிருக்கு ஏற்ற ரகம். வறட்சி மற்றும் உப்புத்தன்மையைத் தாங்கி வளரக்கூடியது.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj