Skip to content

வாழைப்பழத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி

வாழை உலகின் மிக முக்கியமான பழப்பயிர்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 106 மில்லியன் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. வாழைப்பழ உற்பத்தி பெரும்பாலும் ஆசியாவில் (57%) அமெரிக்காவில் (26%) அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வாழை வெப்பமண்டல பயிராகும். பெரும்பாலும் வாழையில் குட்டைச் செடிகள் அதிக மகசூலை கொடுக்கிறது.

இந்த குட்டை வாழைக்குடும்பத்திற்கு Musaceae என்று பெயர். வாழைமரம் மிகச்சிறந்த உயிரி சக்தி பொருளாகும். இது மண்ணினை வளமாக்குகிறது. இந்த வாழை மரங்களின் கழிவுகளிலிருந்து டிமாட்ரிட் வேளாண் பல்கலைக் கழக politeecnaica குழும (UPM) ஆராய்ச்சியாளர்கள் மின்சாரம் தயாரிக்க சோதனை செய்து வெற்றி கண்டுள்ளனர். மேலும் வாழைமரத்தின் இலைகள் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது. வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தது.

அதிக அளவு வாழைப்பழ ஏற்றுமதி எக்குவடோர் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாழைப்பழங்களிலிருந்து bioethanol உற்பத்தி முறையில் இரண்டு மின்சார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இரண்டு தொழிற்சாலைகளிலிருந்தும் சுமார் 18 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வாழை மரங்கள் கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

https://www.sciencedaily.com/releases/2016/05/160519082430.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

2 thoughts on “வாழைப்பழத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj