செய்திகள்

பயிர் பாதுகாப்பிற்கு துளசி – தேங்காய் தண்ணீர் கூட்டணி!

அரை கிலோ துளசியைப் பறித்து, ஐந்து லிட்டர் தேங்காய் தண்ணீரில் நான்கு நாட்கள் ஊற வைக்க வேண்டும். இடையில் தினம் ஒரு முறை கலக்கிவிடுவது நல்லது. நான்காவது நாளில் பாத்திரத்தில் உள்ள துளசி மட்கி, தேங்காய்த் தண்ணீருடன் கலந்து, ஒருவித காரவாசனையுடன் இருக்கும். சுத்தமான துணியில் வடிகட்டி, துணியில் தங்கியிருக்கும் அழுகிய துளசி இலைகளை துணியோடு சேர்த்து பிழியும் போது வடியும் சாறையும் கலவையில் சேர்க்கலாம். ஐந்து லிட்டர் துளசி-தேங்காய்  தண்ணீருடன் கலந்து கைதெளிப்பான் கொண்டு, காலை வேளையில் பூவெடுத்து நிற்கும் செடிகள் மீது தெளிக்கலாம். பூச்சிகள் ஒழிவதுடன், மலர்ந்த பூக்கள் உதிராமல் பிஞ்சுகளாகவும் மாறும்.

காய்ப் பருவத்தில் புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும். பச்சைப்புழு, காய்த் துளைப்பான், பொறிவண்டு போன்ற பூச்சிகள் காய்களைத் துளையிட்டு சேதாரப்படுத்தும். வேம்புக் கரைசலை  செடிகளின் மீது தெளித்து இதைக் கட்டுப்படுத்தலாம்.

2 கிலோ வேப்பிலையை 5 லிட்டர் பசு மாட்டுச் சிறுநீரில் 4 நாட்கள் ஊறவைத்து, வடிகட்டி 5 லிட்டர் தண்ணீர் கலந்து புகைப்போல செடிகள் மீது தெளிக்க, காய்ப் புழுக்கள் காணாமல் போய்விடும். 10 லிட்டர் தண்ணீருக்கு 25 மில்லி வேம்பு மருந்து என்கிற வகையில் கடையில் வாங்கியும் தெளிக்கலாம்.

                                                                                       நன்றி

                                                                                பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

2 Comments

2 Comments

  1. m.manikandaprabu

    April 11, 2016 at 1:43 pm

    thenku for informeshn

  2. anbarasu

    May 15, 2016 at 1:07 am

    k

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

To Top