Skip to content

ஆட்டுப்பால் . . . மலேசியா மக்களின் மருந்து!

”அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் கொடுக்கும் ஆட்டுப்பால்”. என்று ரஜினி ஒரு படத்தில் பாடி நடித்திருப்பார் ஆனால் இன்று, ஆட்டுப்பால் குடிக்கிற பழக்கம் தமிழ்நாட்டில் அறவே இல்லாமல் போய்விட்டது. ஆனால், வடநாட்டில் ஆடுகளை, பாலுக்காகவே வளர்க்கிற பழக்கம் இருக்கின்றது. உத்திரப் பிரதேசத்தில், ஜமுனாபாரி ஆட்டு பாலைக் கறந்து விற்கிற காட்சியைப் பார்த்திருக்கேன். ஆட்டுப்பால் என்று சொன்னா, நம்ம கண்ணு முன்னாடி காந்தி தாத்தாதான் வந்து போவாரு. காந்தி பெரிய அரசியல் தலைவர் மட்டுமல்ல. நல்ல இயற்கை வாழ்வியல் வல்லுநரும் கூட, அதனால்தான், ஆட்டுப்பாலையும், நிலக்கடலையும் சாப்பிட்டு வெள்ளைக்காரனை வெரட்டி அடிச்சாரு.

போன வருஷம், டெங்கு காய்ச்சல் வந்த சமயத்துல, நம்ம சித்த மருத்துவத்தில், நிலவேம்புக் குடிநீரைக் குடிக்கச் சொல்லி, நம்ம மக்களைக் காப்பாத்துனாங்க ஏன்னா, டெங்கு காய்ச்சல் இங்கீலிஷ்காரன் கண்டுபுடிச்ச மருந்துக்குக் கட்டுப்படவில்லை. அதனால், நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு இயற்கை மருத்துவம் பக்கம் திரும்பினார்கள்.

அந்த சமயத்துல டெல்லியிலும் கூட, டெங்கு ஆபத்து அதிகமா இருந்திருக்கு. அதாவது டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் சக்தி, ஆட்டுப்பாலுக்கு இருக்கின்றது என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தத் தகவல் தனக்கு கிடைச்ச மறுநிமிஷம், இப்ப டெல்லியில் முதல்வராக இருக்கின்ற அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்டுப்பாலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மருத்துவ குணம் உள்ளது. இதனால், இந்தப் பாலை அருந்தினால், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும். பப்பாளி இலையும் டெங்கு காய்ச்சலை குணமாக்கும் என்று வீதிக்கு வீதி பிரசாரம் செய்தார்கள். இதற்கு முக்கிய காரணம் ரொம்ப வருஷம் தும்மல், சுவாசக்கோளாறு, பிரச்சனைகளுக்கு மப்ளரு கட்டிக்கிட்டு, சிரமப்பட்ட கெஜ்ரிவால். டெல்லி முதல்வர் பதவிக்கு வந்த பின்னால்தான், பெங்களூரில் இருக்கின்ற இயற்கை மருத்துவ மையத்துல சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகுதான் குணமானாரு. அதனால்தான், இயற்கை  மருத்துவம் மேல் அவருக்கு அலாதி பிரியம்.

2

டெல்லி மக்களும் மூக்கைப் பிடிச்சுக்கிட்டு ஆட்டுப்பாலைக் குடிச்சாங்க. ஏனென்றால் ஆட்டுப்பாலில் ஒரு விதமான நெடி வீசும். வெண்ணெய்ச் சத்தை எல்லாம் எடுத்து, வாசம் இல்லாத பாக்கெட்டு பாலைக் குடிச்சவங்களுக்கு ஆட்டுப்பால் நெடி கஷ்டமாகத்தான் இருக்கும். டெங்கு பாதிப்பு இருந்த காலக்கட்டத்தில் ஆட்டுப்பால் ஒரு லிட்டர் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை.

டெல்லி சுற்று வட்டாரத்தில் இருக்கின்ற விவசாயிகள் இப்போது, இறைசிக்காக ஆட்டை வளர்க்கிறதை விட பாலுக்காகத்தான் அதிகமாக வளர்க்கிறார்களாம்.

இப்போதெல்லாம் ஆட்டுப்பால் அருமை மக்களுக்குத் தெரியாது ஆனால் சித்த மருத்துவத்தில் ஆட்டுப்பால் முக்கியமான மருந்தாக உள்ளது. நாம்தான் சித்த மருத்துவத்தை மறந்துவிட்டோம். அதனால் ஆட்டுப்பாலின் மகிமை தெரியவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் ஆட்டுப்பாலை அணு, அணுவாக ஆராய்ச்சி செய்து அதன் பலனைச் சொல்லியிருக்கிறார்கள்.

”ஆட்டுப்பாலில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகள் மாட்டுப்பாலை விட மிதமாக இருப்பதால் எளிதில் ஜீரணமாகிறது. ஆட்டுப்பால் குடிப்பதால், இரும்புச் சத்து எளிதாக கிடைக்கிறது. ஆட்டுப்பாலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மருத்துவ குணம் உள்ளது. தொடர்ந்து ஆட்டுப்பால் குடித்து வந்தால் ஜீரணிக்கும் திறன் அதிகமாகி நல்ல பசி எடுக்கும். நாள்பட்ட வயிற்றுப்புண்களை ஆற்றுவதற்கும் ஆட்டுப்பால் உதவுகிறது. பச்சிளம் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் வயிற்று வலி, வாந்தி, பேதி மலச்சிக்கல் போன்ற உபாதைகளை ஆட்டுப்பால் குடிப்பதால் பெருமளவில் கட்டுப்படுத்தலாம். தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்தும் உயிரி வினைப்பொருட்கள் தாய்ப்பாலில் உள்ளது போலவே, ஆட்டுப்பாலிலும் அதிகம் காணப்படுவதால் ஆட்டுப்பால் அருந்துபவர்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. ஆட்டுப்பாலில் மாட்டுபாலைவிட அதிக அளவு செலினியம் இருக்கின்றது. இதனால் பச்சக் குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த தாய்ப்பாலுக்குச் சிறந்த மாற்றாக ஆட்டுப்பாலைப் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் பரிந்துரை செய்கிறார்கள்.

மலேசியா நாட்டில் இருக்கிற சீன வம்சாவளி மக்கள், ஐஸ் கீரிம் சாப்பிடுவதைப் போல் ஆட்டுப்பாலை விரும்பிக் குடிக்கிறார்கள். இத்தனைக்கும் 250 மில்லி பாலை 7 வெள்ளி  (ரூ112)க்கு விற்பனை செய்கிறார்கள். “ஆட்டுப்பால் ஒரு வித வாசம் வரவில்லையா என்று கேட்டேன்.

அந்த  சீன விவசாயி ”கண்ட கண்ட மருந்தை எல்லாம் இங்கீலிஷ் மருந்து என்று சொல்லி வாங்கி குடிக்கின்றோம். ஆனால், ஆடுகள், மனிதர்களை விட புத்திசாலிகள், தோட்டத்தில் உள்ள  மூலிகைச் செடிகளைப் பார்த்து மேய்ந்து, அதன் பாலை நமக்கு மருந்தாகக் கொடுக்கிறது. சுருக்கமாக சொன்னால் ஒவ்வொரு ஆடும் நடமாடும் மருந்து தொழிற்சாலை. ஒரு பொருளை விரும்பினால், அதில் இருக்கின்ற குறை தெரியாது. நிறைதான் தெரியும். எங்களைப் பொறுத்தவரை ஆட்டுப்பாலில் நெடி அடிக்கவில்லை. வாசம்தான் வீசுது என்று நெத்தியில அடிச்ச மாதிரி பதில் சொன்னார்.

                                                                                           நன்றி

                                                                               பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

2 thoughts on “ஆட்டுப்பால் . . . மலேசியா மக்களின் மருந்து!”

  1. ஆட்டுபால் மிகவும் சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி உல்லது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj