ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

1
2229

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுக்காப்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மருந்துகள், உழவியல் முறைகள், பௌதீக முறைகள், உயிரியல் முறைகள் மற்றும் மரங்களைக் கட்டுப்படுத்தி நடும் முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

உயிரியல் முறை

உயிரியல் முறையில் பாலூட்டும் பிராணிகள், பறவைகள் குளவி இனங்கள், சார்ந்துண்ணும் பூச்சியினங்கள் மற்றும் பூச்சிகளுக்கு நோயுண்டாக்கும் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் சுமார் 150 பூச்சியினங்களைத் தாக்குகின்றன. பெரும்பாலும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வனப்பயிர்களைத் தாக்கும் 30 பூச்சிகளை இவை தாக்குகின்றன. என்.பி.வி. வைரஸ்தான் இவ் விதப்புழுவினங்களை மிகவும் நல்ல முறையில் தாக்குகின்றன.

மரக்கன்றுகளைக் கட்டுப்படுத்தி நடும் முறை

பொதுவாக விரைவாக வளரும் மரங்களை குறைந்த அளவே பூச்சிகள் தாக்குகின்றன. ஆகவே மனிதனால் உருவாக்கப்படும் வனங்களில் செழிப்பான மரங்களை உற்பத்தி செய்ய சிறந்த மணவளம் கொண்ட இடத்தைத் தேர்வு செய்தல், மண்வளம் பாதுகாத்தல், நீர்வளத்தைக் காத்தல், சிறந்த இரகத்தைத் தேர்ந்தெடுத்து, நன்கு வளர்ந்த மரக்கன்றுகளை நட்டுப் பலனடைதல் போன்ற முறைகளைக் கையாள வேண்டும், பண்ணைக் காடுகள் ஏற்படுத்தும் போது ஒரு குறிப்பிட்ட பூச்சியின் தாக்குதலுக்கு உட்படும் பல்வேறு மரவகைகளை ஓரிடத்திலேயே நடவு  செய்வதைத் தவிர்ப்பதன் மூலம் பூச்சிகளின் தீவிரத் தாக்குதலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தலாம். உதாரணமாகக் கிலிரோடென்ட்ரான் மரங்கள் தேக்கு இலைத் தேமல் சேதமிழைக்கும் புழுக்களை அதிக அளவில் கவர்வதால் தேக்குமரப் பயிரை இம்மரங்களுக்கு அருகில் நடுவதைத் தவிர்க்கவேண்டும். வேல மரங்கள் மற்றும் செலோஸ்டெர்னா மரங்கள் இருக்குமிடங்களில் தைலமரங்கள  நடுவதைத் தவிர்க்க வேண்டும். குமிழ் மரங்களையும் தேக்கு இலைத் தேமல் நோயுண்டாக்கும் புழுக்கள் தாக்குவதால் இம்மரங்களையும் தேக்கு மரத்தின் அருகில் நடக்கூடாது.

தாவர மரபியல் முறை

பூச்சிகளை எதிர்த்து வளரும் தன்மை கொண்ட மரபியல் ரீதியைப் பயன்படுத்தும் முறை ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பில் ஒரு  வரப்பிரசாதமாகும். தேக்கு, அயிலை மற்றும் சவுக்கு போன்ற பண்ணைக் காட்டு மரங்களை இத்தகைய ஆராய்ச்சியை தமிழ்நாடு வேளண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் மேற்கொண்டுள்ளது.

பூச்சிக்கொல்லி முறை

அங்கக பாஸ்பரஸ் மற்றும் கார்பமேட் பூச்சிக்கொல்லிகளான மாலத்தியான்; பாஸ்போமிடான், எண்டோசல்பான் மற்றும் செவின் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தேர்வு செய்து நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும்.

பல்வேறு பூச்சிகளின் அளவு, அதன் தீவிரத்தை உணர்ந்து அதற்கேற்ப பல்வேறு பயிர்ப் பாதுகாப்பு முறைகளை ஒருங்கிணைந்த முறையில் கையாளுவதன் மூலம் பூச்சிகள் சேதத்தை வெகுவாகக் குறைத்து வேளாண் காடுகளில் நல்ல பலனைப் பெறலாம்.

                                                                                                  நன்றி

                                                                                       வேளாண் காடுகள்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here