Skip to content

முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்!

முள்ளங்கி வெள்ளை, சிவப்பு, ஊதா அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் இருக்கின்றன. மற்றும் இது வடிவம் வகையில்,  நீண்ட மற்றும் உருளை அல்லது வட்ட வடிவிலும் இருக்கிறது. முள்ளங்கி விதைகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் பொருட்கள் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். முள்ளங்கியின் அறிவியல் பெயர் ரபானஸ் சடைவஸ் என்பதாகும். இது பிராசிகாசியா தாவர குடும்பத்தை சேர்ந்தது.

 பல வியாதிகளை தடுக்கும் சிகிச்சைக்காகவும் முள்ளங்கி பயன்படுகிறது.

மஞ்சள் காமாலை:

முள்ளங்கி கல்லீரல் மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்கிறது. இது மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரத்தத்திலிருந்து புதிய ஆக்சிஜன் பரிமாற்றத்தை அதிகரித்து அதன் மூலம் இரத்த சிவப்பணுக்கள் அழிவை குறைக்கிறது. இதனால் மக்கள் மஞ்சள் காமாலை நோயிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். கருப்பு முள்ளங்கி மற்றும் முள்ளங்கி இலைகள் இந்த மஞ்சள் காமாலை சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

9(1)

மூல வியாதி:

முள்ளங்கி சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட் நன்றாக செரிமானம் ஆகிறது. முள்ளங்கி மூல வியாதியின் அறிகுறிகளை விரைவில் போக்குகிறது. மேலும் இதன் சாற்றை குடிப்பதால் செரிமான உறுப்புகளையும் கழிவுறுப்புகளையும் சரி செய்து மூல வியாதி குணமடைகிறது.

எடை இழப்பு :

முள்ளங்கி சாப்பிட்டால் உங்கள் கலோரி எண்ணிக்கையை நிறைவு செய்து எளிதில் பசியை நிறைவு செய்கிறது. முள்ளங்கியில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால் இது எடையை இழக்கச் செய்கிறது.  மற்றும் அனைத்து உடல் செயல்முறைகளின் வளர்சிதை மாற்ற திறன்களை அதிகரிக்கிறது.

முள்ளங்கியில் அந்தொசியனின்கள் இருப்பதால் இருதய நோய்களை குறைக்கின்றன.

புற்றுநோய்:

முள்ளங்கியில் வைட்டமின்-சி, போலிக் அமிலம் மற்றும் அந்தொசியனின்கள் நிறைந்து இருப்பதால் பெருங்குடல், சிறுநீரகம், குடல், வயிறு மற்றும் வாய் புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய் சிகிச்சைக்கு இது பயன்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் செல்களை நீக்கி, அப்போப்டொசிஸினால் புற்றுநோய் செல்களை இறக்க செய்கின்றன. உண்மையில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வெண்நோய்:

முள்ளங்கியில் உள்ள கார்சினோஜனிக் எதிப்பு பண்புகள் இருப்பதால் வெண்நோய் சிகிச்சைக்கு பயனுள்ளதாக உள்ளது.

மலச்சிக்கல்:

முள்ளங்கியில் நார்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் விளைவுகளை எளிதில் தீர்க்கிறது. மேலும் இது தளர்வான குடலை உறுதிபடுத்துவதற்கு உதவுகிறது. கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியவற்றிற்கு உதவுகிறது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

1 thought on “முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj