Skip to content

தாவர உணவை வீட்டிலேயே தயாரிக்கலாம்

தாவரத்திற்கு தேவையான உணவை சரியாக கொடுக்காத காரணத்தினால்தான் நிறைய தாவரங்கள் நோய் தாக்கி அழிந்து விடுகின்றன. உண்மையில் நாம் வாங்கும் அனைத்து தாவர உரங்களும் தரமானதாக இருப்பதில்லை. உள்ளூர் தாவர தோட்ட நாற்றங்காலில் இருந்து வாங்கும் தாவர உரங்களில் நிறைய இரசாயனப்பொருட்கள் இருப்பதால் தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன. அதனால் பல தோட்டக்காரர்கள் கரிம தாவர உணவுப்பொருட்களை பயன்படுத்தி தாவர உரங்களை வீட்டிலேயே தயார் செய்கிறார்கள்.

3(1)

தாவரங்கள் தனக்கு தேவையான உணவை மண், நீர் மற்றும் காற்று போன்றவற்றிலிருந்து எடுத்துக் கொள்கின்றன. தோட்டத்தில் மண்ணில் சத்துக்கள் குறையும் போது தான் உரங்களை பயன்படுத்துகிறோம்.

வீட்டில் தாவர உணவு தயாரிப்பது எப்படி:

  • 4 பகுதி விதை மாவு(seed meal)
  • ¼ பகுதி வேளாண்மை சுண்ணாம்பு
  • 1/4 பகுதி ஜிப்சம் (அல்லது இரட்டை வேளாண்மை சுண்ணாம்பு)

4(1)

  • 1/2 பகுதி டோலோமிட்டிக் சுண்ணாம்பு

5(1)

இத்துடன் மேலும் சேர்க்கவேண்டியவை.

1 பகுதி எலும்பு எரு, ராக் பாஸ்பேட் அல்லது கடற் பறவைகளின் எச்சத்தில் உள்ள உயர் பாஸ்பேட்.

6(1)

½ – 1 பகுதி கடற்பாசி உணவு (அல்லது 1 பகுதி கருங்கல் தூசி)

இவை அனைத்தையும் சேர்த்து கலந்து தாவர உரமாக பயன்படுத்தலாம்.

இதே போன்று பல்வேறு வழிமுறைகளில் தாவர உரங்களை வீட்டிலேயே தயார் செய்யலாம்.

தாவர உரங்களை முதலில் ஒரு தாவரத்திற்கு மட்டும் பயன்படுத்தி பார்க்க வேண்டும் பிறகு அனைத்து தாவரங்களுக்கும் பயன்படுத்தலாம்.

வீட்டில் தயார் செய்யும் இந்த தாவர உரங்களை வெயில் இருக்கும் போது தாவரங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. மேலும் இதை பயன்படுத்தும் போது சோப்பு மற்றும் சலவைத் தூள் போன்றவை போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj