Skip to content

தக்காளிச் செடிகளில் உள்ள பூச்சிகளை விரட்ட…

வேம்பு, புங்கன் கரைசல்!

வேப்பெண்ணெய் 4 லிட்டர், புங்கன் எண்ணெய் 1 லிட்டர் ஆகியவற்றுடன் 500 மில்லி காதி சோப்புக்கரைசலைச் சேர்த்து… நன்றாகக் கலக்கி, அக்கரைசலில் இருந்து, 100 மில்லியை எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து காலவேளைகளில், கைத்தெளிப்பான கொண்டு, புகைபோல் தெளிக்க வேண்டும். 20, 40 மற்றும் 60-ம் நாட்களில், தக்காளியில் பூச்சிகளை விரட்ட இக்கரைசலை தெளிப்பு அவசியம்.

பூச்சிகளை விரட்ட வேம்புக் கரைசல்!

நடவு செய்த 50 முதல் 65-ம் நாளில், செடிகள் பூத்துக் குலுங்கும். இந்த வேளையில், சாறு உறிஞ்சும் பூச்சிகள், அஸ்வினி ஆகியவை தாக்குவதோடு, வாடல் நோயும் எட்டிப்பார்க்கும். இதை, விரட்ட வேம்பு, புங்கன் எண்ணெய் கரைசலைத் தெளிக்கலாம்.

நன்றி

பசுமை விகடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj