32°C

விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை

உழவு- ஒன்பதாம் அதிகாரம் தொடர்

உழவு- ஒன்பதாம் அதிகாரம்

“கொம்பால் உழுது , குண்டியால் மாமடி.” “புல்லற உழாதே.” நல்ல விதைப் பதத்துக்கு நிலத்தை தயாராக்குவதற்கு உழுதல் பிரதான தொழில் என்று இதுவரையில் விவரித்தோம். இவ்வுழவால் விதைப்பு நிலத்தை ஆழமாயும் மிருதுவாகவும் ஈரம் தாங்கும்படிக்கும் கூடியமட்டில் துப்புரவாயிருக்கும் படிக்கும் செய்யலாம். ஆயினும் நிலத்தை அக்காலத்தில் உழுதாலும் காலநிலை அனுகூலமாய் இல்லாமலிருந்தாலும் மிருதுவான நிலைமைக்குக் கொண்டுவர முடியாது. நிலத்தை விதைபதத்திற்குச் சுலபமாக்கும் பொருட்டும் விதைக்கப்படும். விதை பூமியில் ஒரே ஆழத்தில் சுலபமாய் பதியும் பொருட்டும் மேல்தரை போதுமான வரை […]

February 13, 2018 Editor
விவசாய நூல் – நான்காம் அதிகாரம். தொடர்

விவசாய நூல் – நான்காம் அதிகாரம்.

பயிரின் வளர்ச்சியும் ஊட்டமும்.     விவசாயி தொழில்களை நிர்ணயிக்கின்ற பொதுவான நிலைமைகளை முன் அதிகாரத்தில் விவரித்தோம். ஆயினும் விவசாயத் தொழிலுக்குரிய அநேக சங்கதிகளின் முகாந்தரங்களைத் தீர அறிந்துகொள்ளுவதற்குப் பயிர்வகைகள் எவ்விதமாய் வளர்கின்றன என்றும் அவைகளின் மூலப்பொருள்கள் யாவை என்றும் கொஞ்சம் தெரிந்துகொள்ளுவது அவசியம்.      குடியானவன் நிலத்தில் விதை விதைத்தபிறகு தானியத்தையும் இதர மகசூலையும் தகுந்த பிரதிபலனாக ஏரளாமாய் அடையும்பொருட்டு, பூமியில் முளைக்கிற பயிர்கள் மிக்க வீரியத்துடனும் செழிப்பாயும் வளரச்செய்வது அவன் கருத்தாயிருக்கிறது. இவ்வெண்ணம் […]

September 20, 2017 editor news
விவசாய நூல் – மூன்றாம் அதிகாரம் தொடர்

விவசாய நூல் – மூன்றாம் அதிகாரம்

விவசாயத்திற்குரிய காலதேச நிலைமைகள்: ’மாரியல்லது காரியமில்லை.’ விவசாயி தொழில்களை நிர்ணயிக்கின்ற முக்கியமான நிலைமைகள் மூன்று. அவை மண்ணின் குணாகுணம், சீதோஷ்ணஸ்திதி, நிலத்தின் ஸ்தானம். அதாவது தானியங்கள் வெகுவாய் விற்பனையாகும் சந்தையைநோக்கி எவ்வாறு நிலம் இருக்கின்றது என்பது. ஆயினும், இவ்வதிகாரத்தின் தலைப்பிற கூறிய பழமொழிபோன்ற மற்ற பழமொழி வசனங்களால் மழையின் பெருமையும் தெளிவாகும். பண்ணை இருக்கும் இடத்தைக் குறித்துச் சொல்லுங்கால் ஏற்கனவே முகவுரையில் விவரித்தபடி பெரிய நகர்களின் அருகே தோட்டக் விவசாயமும் பாற் விவசாயமும் சாதாரணமாய் லாபகரமானவை, ஜனத்தொகை […]

September 13, 2017 editor news
விவசாய நூல் – இரண்டாம் அதிகாரம்! தொடர்

விவசாய நூல் – இரண்டாம் அதிகாரம்!

பண்ணைநிலமும் சாகுபடிக்குரிய முயற்சியும். (1)அண்டை நிலத்தையும் அயல் மனையையும் கைவிடாதே. (2)கச்ச நிலமானாலும் கை சேர்க்கை. (3)புன்செயிற் புதிது நன்செயிற் பழையது. (4)அடைப்பில்லாக் காடும் விடுப்பில்லா ஏரும்.      ஒரு குடியானவன் அநுபவித்துவரும் பூமியின் விஸ்தீரணம் பண்ணை நிலமென்று சொல்லப்படும். அவனுக்குச் சொந்தமான நிலம் முழுவதும் ஒரே அடைப்பில் இருப்பது மிக அநுகூலம். எவ்வளவுக்கெவ்வளவு அவன் வீடு தன் நிலத்துக்கருகில் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவனுக்கு நலந்தான். இந்நாட்டில் வசிக்கும் குடிகள் கிராமாந்தரங்களில் ஒருமிக்கக் கும்பலாகக் குடியிருப்பதைவிட, […]

September 6, 2017 editor news
விவசாய  நூல் – முதல் அதிகாரம் தொடர்

விவசாய நூல் – முதல் அதிகாரம்

முகவுரை. வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும் ஒதுவா ரெல்லாரு முழுவார் தந் தலைக்கடைக்கே கோதைவேன் மன்னவர்தங் குடைவளமுங் கொழுவளமே ஆதலால் இவர்பெருமை யார்உரைக்க வல்லாரே. (கம்பர்)     கிருஷி(விவசாயம்) என்கிற பதத்திற்குப் பூமியைப் பண்படுத்திப் பயிரிடுதலென்பதே சரியான பொருள். ஆயினும், சாதாரணமாய் அப்பதம் பிராணி சம்பந்தமாயும், தாவர சம்பந்தமாயும், நிலத்திலிருந்து நேராகவோ வேறு எவ்விதமாகவோ நாம் அடையக்கூடிய பொருள்களை உண்டாக்குவதற்கு அவசியமான சாதனங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதாகவே வழங்கப்படுகிறது. நிலத்திலே வளரும் பயிர் வகைகளும் […]

August 30, 2017 editor news
தமிழக விவசாயம் – தேவையும் தீர்வும் – 1 தொடர்

தமிழக விவசாயம் – தேவையும் தீர்வும் – 1

இந்தப்பகுதியில் இதுவரை நாளிதழ்கள் மற்றும் விவசாயம் சார்ந்த இதழ்களில் வந்த கட்டுரைகளின் தொகுப்புடன் நமது கருத்துக்களும் இக்கட்டுரையில் இடம்பெறும்… காவிரியில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, கர்நாடக மாநிலம் தர மறுத்ததாலும் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைகள் கைவிரித்ததாலும் டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் ஆரம்ப நிலையிலேயே கருகிக் கொண்டிருக்கின்றன. இது, ‘விவசாயி அதிர்ச்சி மரணம் ‘ மற்றும் ‘ விவசாயிதற்கொலை’ என்று அதிர வைக்கும் செய்திகளாகப் படபடக்கின்றன! மத்திய, மாநில அரசுகளுக்குத் தொடர் போராட்டங்கள் […]

June 28, 2017 Editor