இயற்கை விவசாயம்
அரைக் கீரையின் பயன்பாடுகளும் அதன் சாகுபடியும்!
மனித உடலுக்குத் தேவையான அத்தனைச் சத்துக்களும் கீரைகளில் அடங்கியுள்ளன. வந்த நோயை விரட்டி, வரும் நோயைத் தடுத்து, உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் கீரைகளை நாம் கொண்டாடத் தவறியதன் விளைவுதான். . . இன்று மருத்துவமனை வாசலில் நாம் வரிசை கட்டி சிகிச்சைக்காக நிற்பது. கீரைகளில் இருப்பது இலைகள் அல்ல. . . மனித ஆரோக்கியத்துக்கான அருமருந்து. ஆம்ராந்தஸ் குடும்ப வகைகளில் முக்கியமானவை தண்டுக்கீரை, சிவப்புக்கீரை மற்றும் அரைக்கீரை ஆகியவையாகும். இவற்றில் குறைந்த விலையில், எளிதில் கிடைக்கும் […]