32°C

நாற்றுகள்

டி.கே.எம் – 13 ரக நெல்லின் நாற்று உற்பத்தி முறை விவசாய கட்டுரைகள்

டி.கே.எம் – 13 ரக நெல்லின் நாற்று உற்பத்தி முறை

டி.கே.எம் – 13 ரக நெல்லின் வயது 130 முதல் 140 நாட்கள். வறட்சியைத் தாங்குவதோடு வேகமான காற்றுக்கும் தாங்கும். அனைத்து மண்வகைகளிலும் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க, 3 சென்ட் நிலத்தில் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைக்க வேண்டும். ஆட்டு எரு, மாட்டு எரு, வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைச் சம அளவில் எடுத்துக் கலந்து பாத்தி முழுவதும் தூவி, விதைநேர்த்தி செய்யப்பட்ட 2 கிலோ விதைநெல்லை தூவி விதைக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் […]

March 9, 2017 Editor
குறைந்த விலையில் மூலிகை நாற்றுகள் கிடைக்கும்..! செய்திகள்

குறைந்த விலையில் மூலிகை நாற்றுகள் கிடைக்கும்..!

சேலம் மாவட்டம், மேட்டூரில் மத்திய அரசின் சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சி மையம் மற்றும் ஆராய்ச்சி தோட்டம் உள்ளது. அங்கு ஐந்நூறு வகையான பாரம்பர்ய மருத்துவ மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மூலிகைகள் குறித்த ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. இம்மையத்தின் மூலமாக, மூலிகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வீட்டுத் தொட்டிகளில் வளர்க்கக்கூடிய துளசி, கற்பூரவல்லி, நிலவேம்பு, தூதுவளை, சித்தரத்தை, திப்பிலி, திருநீற்றுப்பச்சிலை.. போன்ற முப்பது வகையான மூலிகை நாற்றுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு, […]

February 22, 2017 Editor
மேட்டுப்பாத்தி நாற்றங்கால் உற்பத்தி ! இயற்கை விவசாயம்

மேட்டுப்பாத்தி நாற்றங்கால் உற்பத்தி !

தேர்வு செய்த நிலத்தில் சேற்றுழவு செய்து 12 நாட்கள் ஆறவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்து 3 நாட்கள் ஆறவிட வேண்டும் பிறகு 72 அடி நீளம், மூன்றரையடி அகலம், 3 அங்குல உயரத்தில் மேட்டுப்பத்தி அமைத்து அதில் 50 கிலோ கனஜீவாமிர்தத்தை (பவுடர் வடிவில் இருக்கும்) தூவ வேண்டும். பின்னர், 15 கிலோ கிச்சலிச்சம்பா விதையைப் பாத்தியில் பரவலாகத் தூவ வேண்டும். பிறகு 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி வைக்கோலைப் பரப்பி விதைகளை மூட வேண்டும். […]

December 22, 2016 Editor
செடிமுருங்கை நாற்று உற்பத்தி! செய்திகள்

செடிமுருங்கை நாற்று உற்பத்தி!

பிகேஎம்-1 செடிமுருங்கை விதை வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் கிடைக்கும். அதை வாங்கி நாற்றாக உற்பத்தி செய்துதான் நடவு செய்ய வேண்டும். 25 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 250 கிராம் எரு, 2 கிராம் சூடோமோனஸோடு 500 கிராம் வளமான மண்ணைக் கலந்து பாலிதீன் பையில் இட்டு முருங்கை விதையை ஊன்ற வேண்டும். தினமும் காலை, மாலை வேளைகளில் தண்ணீர் வந்தால், 7-ம் நாளுக்கு மேல் முளைத்து வரும் 40-ம் நாளுக்கு மேல் நடவு செய்யலாம். நன்றி பசுமை […]

October 21, 2016 Editor