செய்திகள்
தென்னை மரம் ஏற உதவும் கருவி..!
”தென்னை விவசாயிகளுக்குக் காய்கள் பறிப்பது முக்கியமான வேலை. தென்னை மரங்கள் உயரமாக வளர்ந்தால், காய் பறிக்க ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் நஷ்டம் ஏற்படும். சில விவசாயிகள் உயரமான மரங்களை அழித்துவிட்டு, குட்டை ரகக் கன்றுகளை நடுகிறார்கள். ஆனால், உயரமான மரங்களை அறுத்து எறிய வேண்டாம். இதற்கு எளிய தீர்வு உண்டு. தென்னை மரத்துடன் இணைத்துக்கொண்டு ஏறும் கருவியை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இதன் மூலம், 60 அடி உயரம் கொண்ட மரத்தில்கூட ஐந்து நிமிடத்தில் ஏறிவிட முடியும். […]