பயிர் பாதுகாப்பு
பூச்சிகளை விரட்டுவதில் வேம்பின் பங்கு
பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக மரப்பயிர்களுக்கு ஊடுபயிராக வேம்பை வளர்த்து பூச்சிகளை விரட்டுவது மட்டுமல்லாமல் வேப்பங்கொட்டை மூலம் பூச்சிவிரட்டிகளையும் கிருமிநாசினிகளையும் தயாரிக்கலாம். வேம்பு நேரடியாக பூச்சிக்கொல்லி மற்றும் பூச்சிவிரட்டியாக செயல்படுகிறது. வேம்பின் இலை,பூ,விதை,இலை,பட்டை, ஆகிய ஒவ்வொன்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. அந்துப்பூச்சி, கூன்வண்டு,காண்டாமிருக வண்டு போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பூச்சிவகைகளை வேம்பு கட்டுப்படுத்துகிறது. இதன்மூலம் பூச்சி தாக்குதலால் பயிர்களுக்கு பரவும் நோய்களை முன்கூட்டியே தடுக்க முடியும். வேம்பில் உள்ள அசாடிராக்டின் என்ற அமிலப்பொருளே பூச்சிக்கொல்லி தன்மைக்கும் வேம்பின் […]