32°C

சாகுபடி

வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..! இயற்கை உரம்

வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..!

மிகுந்த மனவேதனையுடன் இந்த பதிவு, இனி ஒரு விவசாயியும் சாகக்கூடாது என உணவுண்ணும் அனைவரும் உறுதி ஏற்க்கவேண்டும். இதை படிக்கும் ஒவ்வொரு நண்பர்களும் தயவுசெய்து பத்து இணையதள வசதியில்லாத நபரிடம் வாய்வழியாக இதை கூறினால் மட்டுமே சாவின் விளிம்பில் இருக்கும் விவசாயிடம் இந்த செய்தி சென்றுசேரும், உங்கள் பங்களிப்பு மிகவும் தேவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தயாரிக்கும் ஒரு நுண்ணுயிர் கலவை பயிர்கள் தற்காலிகமாக வறட்சியை தாங்கி 7 முதல் 10 நாட்கள் தாக்குப்பிடிக்க உதவும் , […]

January 7, 2017 Editor
பூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை. இயற்கை உரம்

பூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை.

தேவையானவை கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ, பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ, துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ, கொய்யா இலை 1/2 கிலோ, கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ செய்முறை இலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க வேண்டும். 1/2 கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி தண்ணீரில் கரைத்து மேற்கண்ட கரைசலுடன் சேர்த்து தயாரிக்க வேண்டும். நிழலான இடத்தில் வைக்க வேண்டும். மூடி வைக்க […]

January 7, 2017 Editor
இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள் இயற்கை உரம்

இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள்

வேம்பு இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 வைரஸ் கிருமிகள் மற்றும் 2 வகையான நத்தைகளையும் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுவதால் இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் […]

January 6, 2017 Editor
பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் தண்ணீர்! இயற்கை விவசாயம்

பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் தண்ணீர்!

சொட்டுநீர்ப் பாசனத்தினால் உண்டாகும் நன்மைகள் குறித்து, திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் ஸ்ரீராம் சுரேஷ் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே.. “மனிதர்களுக்கு எப்படி உயிர் வாழ தண்ணீர் அவசியமோ, அதே மாதிரி பயிர்களுக்கும் தினமும் தண்ணீர் அவசியம். ஆனா அதுக்கும் அளவு உண்டு. தினமும் தேவையான அளவு தண்ணீர் கொடுக்காமல் வாரம் ஒரு தடவையோ, நாலு நாளைக்கு ஒரு தடவையோ அதிகத் தண்ணீரை சிலர் பாய்ச்சுவாங்க. எவ்வளவு தண்ணீர் கொடுத்தாலும் அன்றைக்குத் தேவையான அளவைத்தான் செடி […]

January 6, 2017 Editor
விதை நேர்த்தி செய்யும் முறை இயற்கை விவசாயம்

விதை நேர்த்தி செய்யும் முறை

நல்ல தரமான விதைகளை தரமற்ற விதைகளிலிருந்து பிரித்தெடுக்க, முதலில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். உயிரற்ற விதைகள் தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும். இந்த மிதக்கும். இந்த மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு. தண்ணீரின் அடியில் மூழ்கியிருக்கும் விதைகளை விதைப்பதற்கு உபயோகிக்கவும். இந்த முறை மூலம் சேதமடைந்த விதைகளை அப்புறப்படுத்தலாம். அடியில் மூழ்கியிருக்கும் விதைகள்தான் நன்கு முளைப்புத்திறன் கொண்டவை. 15 கிலோ விதைக்கு தலா 600 கிராம் அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம், ட்ரைக்கோடெர்மா விரிடி, 100 மில்லி பஞ்சகவ்யா […]

January 5, 2017 Editor
காலை நேரக் கரிசாலை பானம் தயாரிப்பு முறை மருத்துவ குணங்கள்

காலை நேரக் கரிசாலை பானம் தயாரிப்பு முறை

காலையில் பல் துலக்கிய பின்னர் மஞ்சள் கரிசாலை இலைகளை நன்கு மென்று தின்றுவிட்டு, அதன் சாரம் உள்ளே போகும்படி பல்லில் தேய்க்கவும். பிறகு வாய் கழுவ வேண்டும். இது சித்தர்கள் கடைப்பிடித்த வழலை வாங்கும் முறை (உடலில் படிந்துள்ள நச்சுகளை வெளியேற்றும் முறை). இதை வடலூர் அருட்பிரகாச வள்ளலார்தான் உலகுக்கு அறிவித்தார். சித்தர்களுக்கு இதெல்லாம் முடியும், நம்மால் செய்ய முடியுமா என்று மலைப்பவர்கள், பின்வரும் காலை பானத்தை செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். உலர்ந்த மஞ்சள் கரிசாலை இலை […]

January 4, 2017 Editor
மாமரம் கவாத்து செய்யும் போது கீழ்ப் பக்கமாக வெட்ட வேண்டும்.! பயிர் பாதுகாப்பு

மாமரம் கவாத்து செய்யும் போது கீழ்ப் பக்கமாக வெட்ட வேண்டும்.!

கவாத்து செய்வதற்கான கத்தரிக்கோல்கள் கடைகளில் கிடைக்கின்றன. அந்தக் கத்தரியியில்தான் கவாத்துச் செய்ய வேண்டும். அரிவாளைப் பயன்படுத்தக் கூடாது. கவாத்துச் செய்யும்போது, வெட்டுப்பாகம் கிளைகளின் கீழ்ப்பக்கத்தில் இருப்பது போல் கவாத்துச் செய்ய வேண்டும். அப்போதுதான் மழைநீர் உள்ளே இறங்காது. கவாத்து செய்து முடித்தவுடன், வெட்டுப்பாகத்தில் குப்பைமேனிக் கலவை அல்லது பசுஞ்சாணத்தைத் தடவி வைக்க வேண்டும். முறையான கவாத்து இல்லாத மரங்களில் பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும். குறிப்பாக மா மரங்களின் வில்லனான தண்டுத் துளைப்பான் தாக்குதல் அதிகமாக இருக்கும். […]

January 3, 2017 Editor
கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்..! கால்நடை

கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்..!

கால்நடை வளர்ப்பில் கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்துப் பேசிய தேசிங்கு ராஜா, “பெரிய ஆடுகளுக்கு 250 கிராம் முதல் 400 கிராம் வரை தவிடு கொடுத்தாலே போதும். ஆடுகளுக்கு அதிகளவு அதிகளவு தவிடு கொடுப்பது ஆபத்தில் முடிந்துவிடும். ஆடுகளைத் தாக்கும் நோய்களில், துள்ளுமாரி நோய், ஆட்டு அம்மை, ஆட்டுக்கொல்லி நோய், அடைப்பான், நீலநாக்கு நோய் போன்றவை முக்கியமானவை. ஆடுகளுக்கு ஜூன் மாதத்தில் ஆட்டுக்கொல்லி எனப்படும் பிபிஆர் நோய்க்கான தடுப்பூசியும்; ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் துள்ளுமாரி நோய்க்கான தடுப்பூசியும்; […]

January 2, 2017 Editor
மாமரத்தில் தண்டு துளைப்பானை தடுப்பது எப்படி? இயற்கை உரம்

மாமரத்தில் தண்டு துளைப்பானை தடுப்பது எப்படி?

மா  மரங்களைப் பொறுத்தவரை, தண்டுத் துளைப்பான் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்த வழி. அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் முறையாகக் கவாத்துச் செய்வதுதான். மரத்துக்குக் கீழே, தாழ்வான கிளைகள் இல்லாமலிருக்க வேண்டும். மா மரத்தில் தரையை நோக்கி வளரும் கிளைகளை அனுமதிக்கவே கூடாது. தரையில் படர்ந்துள்ள அல்லது தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் கிளைகள் உள்ள மரங்களின் தண்டுகள்தான் தண்டுத் துளைப்பானின் குடியிருப்புகள். அதே போல, மா மரங்களின் அடியில் […]

December 31, 2016 Editor
குறைந்து வரும் விவசாய நிலங்கள்..! செய்திகள்

குறைந்து வரும் விவசாய நிலங்கள்..!

இந்தியா என்றாலே விவசாய நாடு என்றுதான் பெயர் பெற்றது. ஆனால் தற்போது இந்தியாவில் விவசாயம் செய்வது குறைந்து வருகிறது என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்தியாவில் விவசாயம் செய்யும் நிலங்கள் குறைந்துவருவது அதிர்ச்சியளிக்கிறது,. இதற்கு பல்வேறு காரணங்கள் ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டாலும் உண்மையான காரணம் கிராமப்புறங்களில் மக்கள் தொகை அதிகரித்ததே ஆகும். அதிகமாகும் மக்கள் தொகையால் விளை நிலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டுவருகிறது. 2010-11 விவசாயம் செய்து வரும் மக்களின் கணக்கெடுப்பில் […]

December 27, 2016 Editor