Skip to content

ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி..!

இயற்கை வேளாண்மையில் அனைத்துக் காய்களுக்குமே பராமரிப்பு ஒன்றுதான். ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 8 டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைக்க வேண்டும். பிறகு, ஒரு உழவு செய்து நிலத்தின் அமைப்புக்குத் தகுந்த அளவில் பாத்திகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துத் தேவைப்படும் விதையை ஊன்ற வேண்டும்.… ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி..!

டி.கே.எம் – 13 ரக நெல்லின் நாற்று உற்பத்தி முறை

டி.கே.எம் – 13 ரக நெல்லின் வயது 130 முதல் 140 நாட்கள். வறட்சியைத் தாங்குவதோடு வேகமான காற்றுக்கும் தாங்கும். அனைத்து மண்வகைகளிலும் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க, 3 சென்ட் நிலத்தில் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைக்க வேண்டும். ஆட்டு எரு, மாட்டு எரு, வேப்பம்… டி.கே.எம் – 13 ரக நெல்லின் நாற்று உற்பத்தி முறை

ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி..!

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு சால் உழவு ஓட்டி, 100 கிலோ இலுப்பங்கொட்டைத் தூள் தூவிவிட்டு, மீண்டும் ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு மாட்டு ஏர் ஓட்டி, நிலக்கடலை விதையை முக்கால் அடி இடைவெளியில் விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 36… ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி..!

நோனி பழ சாகுபடி..!

நோனியை விதை மற்றும் விண்பதியன் மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யலாம். பெரிய பழங்கள் கொடுக்கும் மரங்களிலிருந்து பழங்களைச் சேகரித்து விதைகளைப் பிரித்து, அவற்றை ஈரம் காய்வதற்குள் விதைக்க வேண்டும். இப்படி வளரும் நாற்றுகளை எடுத்து பிளாஸ்டிக் பைகளில் நட்டு, 2 மாதங்கள் வரை வளர்த்து, பிறகுதான் நிலத்தில் நடவுசெய்ய வேண்டும்.… நோனி பழ சாகுபடி..!

மண்பானை பாசனம்..!

தனது பண்ணையில் ஏராளமான மரங்களை நட்டு வைத்துள்ள கண்ணன், அவற்றுக்கு மண் பானை பாசனம் அமைத்துள்ளார். இதைப்பற்றிப் பேசிய கண்ணன், “வேலி ஓரமா இருக்கிற மரங்களுக்கு அடிக்கடி பாசனம் செய்ய முடியாது. அதனால் ஒவ்வொரு செடி பக்கத்திலேயும் அஞ்சு லிட்டர் கொள்ளளவுள்ள மண்பானையைப் புதைத்து வைத்திருக்கிறோம்.. பானையை புதைப்பதற்கு… மண்பானை பாசனம்..!

புதினா சாகுபடி செய்யும் முறை..!

வடிகால் வசதியுடைய செம்மண், மணல் கலந்த செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். தண்ணீர் தேங்கி நிற்கும் நிலம் மற்றும் களிமண் நிலங்களில் இதை சாகுபடி செய்வதைத் தவிர்க்கலாம். இதற்குத் தனியாக பட்டம் இல்லை. அனைத்துப் பட்டங்களிலும் நடவு செய்யலாம். ஒரு முறை நடவு செய்தால், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள்… புதினா சாகுபடி செய்யும் முறை..!

இ.எம். பயன்பாடுகள்..!

சாக்கடைகள், துர்நாற்றம் வீசும் இடங்கள், கழிவறைகள், கழிவறைத்தொட்டிகள், சமயலறை என அனைத்து இடங்களிலும் இ.எம் திரவத்தைப் பயன்படுத்தலாம். வேளாண்மை, மனிதர்கள், கால்நடைகள், திடக்கழிவு மேலாண்மை, கழிநீர்ச் சுத்திகரிப்பு, இயற்கை உரம் தயாரிப்பு, சுகாதார மேலாண்மை, சுற்றுச்சூழல் சமன்செய்தல், மாசடைந்த மண், நீரைச் சீர்படுத்துதல் ஆகிய பல்வேறு வகையான பயன்பாட்டுக்கு.… இ.எம். பயன்பாடுகள்..!

சுழற்சி முறையில் கீரை சாகுபடி..!

”பொதுவாக கீரை சாகுபடிக்குப் பட்டம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம். அதிக மழைப் பொழியும் சமயத்தில் விதைப்பைத் தவிர்க்க வேண்டும். விதைக்கப்போகும் நிலத்தின் அளவை முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை நன்கு உழுது, 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். ஒரு பாத்திக்கு… சுழற்சி முறையில் கீரை சாகுபடி..!

செம்பருத்தி சாகுபடி..!

ஒரு ஏக்கர் பரப்பில் இயற்கை முறையில் செம்பருத்தி சாகுபடி செய்வது குறித்து ஆஸ்டின் கிருபாகரன் சொன்ன தகவல்கள்.. செம்பருத்தி நடவுக்கு ஆனி, ஆடி பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் நன்கு உழுது, இரண்டு நாள்கள் காயவிட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம்… செம்பருத்தி சாகுபடி..!

சொட்டு நீர் மானியம் பெறுவது எப்படி ?

நான்காம் உலகப்போரே இனி தண்ணீரால்தான் என்று உலகநாடுகள் எல்லாம் கணித்துக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையைப்போக்கத்தான் சொட்டு நீ்ர் மேலாண்மை ஒரு வரப்பிரசதமாக அமைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் சமீபத்திய ஆய்வு அறிக்கையில் சொட்டுநீர் பாசனத்திற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதும், அதற்காகத்தான் அரசாங்கம் விவசாயி்களுக்கு… சொட்டு நீர் மானியம் பெறுவது எப்படி ?