32°C

வைக்கோல்

நாட்டுக்கோழி தீவனத்திற்குக் கரையான்(Termite) உற்பத்தி செய்தல் கால்நடை

நாட்டுக்கோழி தீவனத்திற்குக் கரையான்(Termite) உற்பத்தி செய்தல்

கரையானின் தீமைகள் குறித்து அறிந்த பலருக்கும் கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக்கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகின்றது. கோழிகளுக்கு கரையான் சிறந்த புரதச்சத்து மிக்க உணவாகும். உடல் வளர்ச்சிதை மாற்றத்துக்கு புரதச்சத்து அவசியம் தேவை. கரையான் உற்பத்தி செய்வது செலவே இல்லாத ஒரு    தொழில்நுட்பச் செயலாகும். 100கி கரையானில் அடங்கியுள்ள சத்துக்கள்; 1.புரதம் – 36% 2.கொழுப்பு – 44.4% சக்தி (Energy) – 560 கலோரி இத்துடன் சிலவகை கரையான்களில் […]

August 17, 2020 editor news
கேரள மழையால் காவரி டெல்டாவில் வைக்கோல் தேக்கம் செய்திகள்

கேரள மழையால் காவரி டெல்டாவில் வைக்கோல் தேக்கம்

கேரளாவில் பெய்த கனமழை எதிரொலியால் டெல்டா மாவட்டங்களில் வைக்கோல் வாங்குவதற்கு கேரளாவில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதனால் வைக்கோல் வாங்க யாரும் வராததல் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.கேரளாவில் உள்ள கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல், தமிழகத்தில் இருந்து கேரளவியாபாரிகள் கொண்டு செல்வது வாடிக்கையாகும். கேரளாவுக்கு வைக்கோல் அனுப்பி வைக்கும் வியாபாரிகள், அறுவடை நடைபெறும் வயலுக்கு சென்று ஒரு ஏக்கர் வயலில் உள்ள வைக்கோலை எடுத்து கொள்ள ₹1,500 கொடுத்து விட்டு இயந்திரம் உதவியுடன் வைக்கோலை சேகரித்து லாரியில் […]

September 6, 2018 Editor
வீட்டுக் கூரையாக வரகு வைக்கோல் செய்திகள்

வீட்டுக் கூரையாக வரகு வைக்கோல்

வரகு வைக்கோல்கள் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. மக்கிய பிறகு உரமாகவும் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக அமிலத்தன்மை உள்ள நிலங்களுக்கு உரமாகப் பயன்படுத்துவார்கள். இதன் வைக்கோல் தண்ணீர் பட்டாலும் நீண்ட நாட்களுக்கு மக்காமல் இருக்கும். கிராமப்புறங்களில் பொருட்களைப் பானையில் சேமித்து வைப்பதற்காகக் கீழ் அடுக்கு நகராமல் இருப்பதற்காகப் பிரிமணை (பிரியாலை) செய்து வைப்பார். இது நெடுநாட்கள் வரை மக்காமல் இருக்கும். பழங்காலத்தில் கிராமப்புறங்களில் செங்கற்களை அடுக்கிக் கிணறு தோண்டும் போது வெளிப்புறமாக செங்கற்களைச் சுற்றி வரகு வைக்கோலைக் கயிறாகத் திரித்து […]

April 23, 2017 Editor
ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை..! கால்நடை

ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை..!

கடுமையான வறட்சிக் காலத்தில் கால்நடைகளுக்குக் கொடுப்பதற்காகப் பதப்படுத்தி வைக்கப்படும் தீவனம்தான் ஊறுகாய்ப் புல், தீவனச்சோளம், கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ-5, கோ-6, கினியா புல், கொழுக்கட்டைப் புல், தீவனத்தட்டை, குதிரை மசால், வேலிமசால், முயல்மசால் ஆகியவற்றில் கிடைப்பவற்றை ஊறுகாய்ப் புல்லாகப் பதப்படுத்தி வைக்கலாம். 6X6 அடி தூரம், 3 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுத்துக்கொள்ள வேண்டும். குழி மேடான இடத்தில் இருக்க வேண்டும். குழிக்குள் கால் அடி உயரத்துக்கு மணலைப் பரப்பி, அதன் […]

February 23, 2017 Editor
மதிப்புக் கூட்டப்பட்ட வைக்கோல் கால்நடை

மதிப்புக் கூட்டப்பட்ட வைக்கோல்

உலர் தீவனத்தில் முதன்மையானதாக இருப்பது வைக்கோல். வைக்கோலை மதிப்புக்கூட்டிக் கொடுத்தால் முழுமையான பலன் கிடைக்கும். 10 கிலோ கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் பை முழுவதும் வைக்கோலால் நிரப்ப வேண்டும். ஒரு கிலோ கல் உப்பை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கோல்மீது கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிக்க வேண்டும். அடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ வெல்லத்தைக் கரைத்துத் தெளித்துப் பிளாஸ்டிக் பையை இறுக்கமாகக் கட்டி, நிழலில் 12 நாட்கள் வைத்து, பிறகு மாடுகளுக்குக் கொடுக்கலாம். இப்படி […]

February 22, 2017 Editor