மரங்கள்
தேக்கு:மரவேலைப்பாட்டுக்கான தாவரம்
இதன் தாவரப் பெயர் டெக்டோனா கிரான்டிஸ். இது வெர்பினேசி குடும்பத்தைச் சார்ந்தது. இது மரமாக நெடிதுயர்ந்து வளரும் இலையுதிர் தாவரமாகும். செல் பூச்சிகளின் தாக்குதலை எதிர்த்து நிற்கக்கூடியது. அதாவது செல் பூச்சியினால் இதன் மரக்கட்டை அரிக்கப்படுவதில்லை. சாற்றுக்கட்டை வெண்மையானது, மையக்கட்டை அல்லது வைரக்கட்டை பசுமையானது; மணமுடையது. இத்தாவரத்தின் கட்டை நீண்ட நாட்களுக்கு மணத்துடன் உள்ளது. இது உறுதியானது; நீண்ட காலம் உழைக்கக்கூடியது; மெருகேற்கும் தன்மைபெற்று. இந்தியாவில் தேக்குமரம் நாற்காலி, மேசை, கட்டில் போன்ற பொருட்கள், கட்டிடப் பொருட்கள், […]