32°C

நோயின் அறிகுறிகள்

முறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் ஏற்படும்  உபாதைகளும் அதன் தீர்வுகளும் (பகுதி -1) தொடர்

முறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் ஏற்படும் உபாதைகளும் அதன் தீர்வுகளும் (பகுதி -1)

கால்நடை வளர்ப்பில்  தீவன  மேலாண்மை என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.  முறையான தீவன  மேலாண்மை கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன், கால்நடை வளர்ப்போர் அதிக லாபம் ஈட்டவும் துணைபுரிகிறது.  முறையற்ற தீவன மேலாண்மை கால்நடைகளுக்கு சில உபாதைகளை ஏற்படுத்துவதுடன், கால்நடை வளர்ப்போருக்கு மிகுந்த பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திவிடும்.  இவற்றில்  பின்வரும் சில முக்கிய உபாதைகளை குறிப்பிட்டுச்  சொல்லலாம். பால்சுரம் (Milk Fever) பால்சுரமானது அதிக அளவு பால் உற்பத்தி செய்யக்கூடிய பசுமாடுகளில் கன்று ஈன்ற முதல் இரண்டு […]

November 19, 2020 editor news
கரும்பில் கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

கரும்பில் கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

கரும்பைத் தாக்கும் நோய்களில் கரிப்பூட்டை நோயும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஜாவா, பார்மோசா, பிலிப்பைன்ஸ், தென் ஆப்ரிக்கா, மொரிசியஸ், ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தியா போன்ற கரும்பு அதிகம் பயிரிடப்படும் நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் இந்நோய் 1906 – ம் ஆண்டில் தோன்றியது. இந்நோய் எல்லாக் கரும்பு இரகங்களையும் தாக்கக் கூடியது. கரும்பைத் தவிர கான்ஸ் புல் போன்ற சில புற்களையும் தாக்கக் கூடியது. நோய்க்காரணி இந்நோயானது யுஸ்டிலாகோ சிகடாமினியே என்ற பூஞ்சையால் உண்டாக்கப்படுகிறது. இப்பூசணத்தின் இழைகள் […]

November 9, 2020 editor news
நெல்லில் மஞ்சள் குட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

நெல்லில் மஞ்சள் குட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

            நெல் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உணவுப் பயிராகும். நெல் பயிரானது பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் போன்ற பல்வேறு நோய்க்காரணிகளால் தாக்கப்பட்டு பல நோய்க்களுக்குள்ளாகி விளைச்சல் பாதிக்கப் படுகிறது. அவற்றுள் ஒன்று தான் மஞ்சள் குட்டை நோய். இந்தியாவில் 1967-ம் ஆண்டில் தோன்றிய இந்நோய், புதுக்கோட்டை, மதுரை போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஒரு ஸ்போராடிக் வகை நோய். இந்நோய் பற்றியும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம். நோய்க்காரணி […]

October 23, 2020 editor news
பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

பருத்தி ஒரு பணப் பயிராகும். பருத்தி இழைகள் மட்டுமல்லாமல் அதன் முழுச் செடியும்  பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது. பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோய் மிக முக்கியமானது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படும் இந்நோய், இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பரவலாகக் காணப்படுகிறது. இந்நோயினால் பருத்தி மகசூல் குறைவதோடு, பருத்தி இழைகளின் தரமும், பலமும் குறைகிறது. தீவிர நிலையில் இந்நோய் 100 சதவீத உற்பத்தியையும் பாதிக்கக்கூடியது. பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோயும் […]

September 16, 2020 editor news
அவரையில் துரு நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும் பயிர் பாதுகாப்பு

அவரையில் துரு நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

அவரைக்காய் உண்ணச் சுவையாகவும், மிகுந்தச்  சத்துள்ளதாகவும் இருக்கிறது. இதில் புரதச் சத்தும், நார்ச்சத்தும் அதிகமாகக் காணப்படுகிறது. இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். அவரையில் பல வகைகள் உண்டு. இச்செடி இந்தியாவில் இருந்தே பிற நாடுகளுக்குப் பரவியதாகக் கருத்தப்படுகிறது. அவரையில் பல வித நோய்கள் தோன்றினாலும் துரு நோயால் 3 – 36 சதம் வரையில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. அவரையை தாக்கும் துரு நோயை பற்றியும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் […]

September 16, 2020 editor news
கத்தரியில் நாற்றழுகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

கத்தரியில் நாற்றழுகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கத்தரி இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் பெருமளவில் பயிரிடப்படும் காய்கறியாகும். கத்தரி உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.இந்தியாவில் ஆண்டுக்குத் தோராயமாக 128.13 லட்சம் டன்கள் கத்தரி உற்பத்தி செய்யப்படுகிறது. கத்தரியில் பல்வேறு வகையான நோய்கள் தோன்றினாலும் நாற்றழுகல் நோய் மிக முக்கியமான ஒன்றாகும். இந்நோயானது பலவகை காய்கறிப் பயிர்கள், தோட்டப் பயிர்கள், அலங்காரச் செடிகள், காட்டுவகை மரங்கள் போன்றவற்றின் நாற்றாங்கால்களில், இளம் நாற்றுகளைத் தாக்கி, அதிக சேதம் விளைவிக்கக்கூடியது. கத்தரியில் […]

August 31, 2020 editor news