32°C

கிருஷ்ணகிரி

விவசாயிகளே கொட்டப்போகுது மழை,  முன்கூட்டியே தொடங்குது தென்மேற்குப் பருவமழை! உழவுக்கு தயாராகுங்க, மழை நீரை சேகரியுங்கள் இயற்கை விவசாயம்

விவசாயிகளே கொட்டப்போகுது மழை, முன்கூட்டியே தொடங்குது தென்மேற்குப் பருவமழை! உழவுக்கு தயாராகுங்க, மழை நீரை சேகரியுங்கள்

கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்டப் பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆராய்ச்சி ஆய்வாளர் செல்வகுமார் கூறுகையில், “கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விருதுநகர், மதுரை, நெல்லை உள்ளிட்டப் பகுதிகளில் இன்று இரவு நல்ல மழை பெய்யும். அந்தமானில் வருகின்ற 19 அல்லது 20-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ளது. கேரளாவில் வருகின்ற 22-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும். குறிப்பாக, […]

May 9, 2018 Editor
கிருஷ்ணகிரி மாவட்டதில் யானைகளால் வீணாகும் தக்காளியும், மாமரங்களும் விவசாய கட்டுரைகள்

கிருஷ்ணகிரி மாவட்டதில் யானைகளால் வீணாகும் தக்காளியும், மாமரங்களும்

தேன்கனிக்கோட்டை பகுதியில் அட்டகாசம் செய்து வரும் யானைகள், மாமரங்களை முறித்து போட்டு துவம்சம் செய்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள், பல பிரிவுகாளக பிரிந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதி மரகட்டா, ஆலள்ளி, வட்டவடிவுபாறை, ஊடேதுர்கம், சானமாவு உள்ளிட்ட வனப்பகுதியில் முகாமிட்டு கடந்த 4 மாதங்களாக அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், ஆலள்ளி காட்டில் முகாமிட்டுள்ள யானை கூட்டம், நேற்று முன்தினம் இரவு இருதுக்கோட்டை அருகே […]

February 27, 2018 Editor
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்படவேண்டியது விவசாயிகளா? யானைகளா? கருத்துக்களம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்படவேண்டியது விவசாயிகளா? யானைகளா?

ஓசூர் வனச்சரக பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், பயிர்களை நாசம் வீணாக்குவதால் , விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஓசூர் வனச்சரக பகுதியில், 15 க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் காலை, சானமாவு அருகே மீசைகாரன்கொட்டாய் கிராமத்தில், துரைசாமி என்பவருக்கு சொந்தமான மாட்டை யானைகள் தாக்கின. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள், பாத்தக்கோட்டா பகுதிக்கு சென்றன. அங்கு […]

February 23, 2018 Editor
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காரசார விவாதம் : கிருஷ்ணகிரி செய்திகள்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காரசார விவாதம் : கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. விவசாயிகளின் கேள்விகளுக்கு, அதிகாரிகள் பதிலளித்த விபரம்: ராமகவுண்டர்: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், 40 அடி தண்ணீர் உள்ளது. கால்வாயில் தற்போது, 153 கன அடிநீர் மட்டுமே செல்கிறது. ஏரிகளில் தண்ணீரை நிரப்ப, 195 கனஅடி நீர் திறக்க வேண்டும். கலெக்டர்: 195 கனஅடி நீர் திறக்கப்படும். சென்னையநாயுடு: குள்ளம்பட்டி ஏரியில் இருந்து, களர்பதி வரை, ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு […]

January 27, 2018 Editor
கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்! சந்தை

கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்!

  ஒவ்வொரு பயணமும் விலைமதிப்பில்லாத விஷயங்களைக் கற்றுக்கொடுக்குது. ஒருமுறை கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு பன்னாட்டுப் பயிலரங்குக்குப் போயிருந்தபோது, சாயங்கால நேரத்தை உபயோகமாகக் கழிக்க, கர்நாடக நண்பர்கிட்ட ஆலோசனை கேட்டேன். ‘நிலக்கடலைத் திருவிழாவுக்குப் போகலாம் வாங்க’னு கூப்பிட்டாரு. நம்ம ஊர்ல நெல் திருவிழா, சிறுதானியத் திருவிழாவைத்தான் பார்த்திருக்கோம். ஆனா, நிலக்கடலைத் திருவிழா சங்கதி புதுசா தெரியவே, உடனே வண்டி ஏறி நிலக்கடலைத் திருவிழா நடந்த இடத்துக்குப் போனோம். பெங்களூரு, பசவனகுடியில் கவிகங்காதேஸ்வர சுவாமி கோயில் வாசல்ல திருவிழா களைகட்டியிருந்தது. […]

September 15, 2017 editor news