தொழில்நுட்பம்
கரும்புத் தோகையில் ஊறுகாய்ப் புல் தயாரித்தல்
கரும்புத் தோகை என்பது கரும்பு அறுவடையின் போது கிடைக்கும் உபப்பொருளாகும். இதில் கரும்பின் பச்சை இலை, இலைக் கற்றை, முதிர்ச்சியடையாத கரும்பும் அடங்கும். கரும்புத் தோகையில் பீனால், அமினோ அமிலம் மற்றும் பாலிசாக்கரைடுகளும் உள்ளன. இது கரும்பு சர்க்கரை படிகமாதலின் போது விரும்பத்தகாத நிறத்தினை கொடுக்கும். எனவே முதல் உபப்பொருளான கரும்புத் தோகை சர்க்கரை உற்பத்தியின் போது நிலத்திலேயே விடப்படுகின்றன.மேலும் இது நிலத்திலேயே எரியூட்டப்பட்டு உரமாக்கப்படுகின்றன. மொத்தம் 15 சதவீத கரும்புத் தோகை மட்டுமே கால்நடைகளுக்கு உணவாக்கப்படுகின்றன. […]