32°C

அறுவடை

மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை சாகுபடி குறிப்புகள் மருத்துவ குணங்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை சாகுபடி குறிப்புகள்

பிரண்டை ஒரு படரக்ககூடிய கொடி மற்றும் சதைப்பற்றுள்ள மருத்துவ வகைப் பயிராகும். இப்பயிர் விட்டேசியே (Vitaceae) குடும்பத்தைச் சார்ந்ததாகும். இதன் தாவரவியல்  பெயர் சிசஸ் குவாட்ராங்குளாரிஸ் (Cissus quadrangularis) பிரண்டை இந்திய நாட்டை தாயகமாக கொண்டது. பயன்கள் இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு முக்கிய மருந்தாகும். எலும்பு முறிவிற்க்கு இதன் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. வீட்டின் பின்புறத்தில் வளர்க்கப்பட்டு நாம் இதனை அன்றாட உணவில் துவையல், ஊறுக்காய், தொக்கு, குழம்பு செய்து பயன்படுத்தலாம். கொழுப்பபுச்சத்து […]

November 13, 2020 editor news
கண்வலிக்கிழங்கு சாகுபடி மருத்துவ குணங்கள்

கண்வலிக்கிழங்கு சாகுபடி

கண்வலிக்கிழங்கு என்னும் கிழங்கு வகை செங்காந்தள் மலர்ச் செடியிலுருந்து பெறப்படுகிறது. இச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும். இது கலப்பைக்கிழங்கு, கார்த்திகைக்கிழங்கு, வெண்தோன்றிகிழங்கு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது இந்திய மற்றும் ஆப்பிரிக்க மருத்துவத்தில் பயன்படுகின்றன. இதன் கிழங்குகள் உழவுக்கலப்பை போன்ற அமைப்பைப் பெற்றிருப்பதால் கலப்பைக்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு கொடி வகை மருத்துவப்பயிராகும். இவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் பயிர் மேம்பாட்டு ஆராய்ச்சியில் சடுதி மாற்றத்திக்காக பயன்படுகின்றன. வாதம், மூட்டுவலி, தொழுநோய் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகின்றன. […]

November 11, 2020 editor news
திருந்திய மிளகு சாகுபடி தொழில்நுட்பங்கள் தொழில்நுட்பம்

திருந்திய மிளகு சாகுபடி தொழில்நுட்பங்கள்

மிளகு ஒரு வாசனை பயிராகும். இது வாசனைப் பயிர்களின் ராஜா என்று அழைக்கப் படுகிறது. பைபர் நைகிரம் என்பது அதன் தாவரவியல் பெயராகவும் மற்றும் பைபரேசியே அதன் குடும்பமாகவும் கருதப்படுகிறது. மேலும் மிளகானது ஒரு மூலிகை குணம் நிறைந்த பயிராகும். இதில் உள்ள பிபேரின் மூலிகைத்துவம் கொண்டது. எனவே இக்கட்டுரையில் மிளகின் சாகுபடி தொழில்நுட்பங்களை பற்றி பார்க்கலாம். மண் மற்றும் தட்பவெப்பநிலை: மிளகு பொதுவாக மானாவாரிப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. 150-250 செ.மீ. அளவிலான மழையும், அதிக […]

October 22, 2020 editor news
நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி பயிர் வகைகள்

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி (எஸ்.எஸ்.ஐ) என்பது கரும்பு சாகுபடியில் ஒரு புதிய முறை,” குறைவான முதலீட்டில் அதிக லாபம் ” என்பது இதன் முக்கிய கருதுகோள். குறைந்த அளவிலான விதைகள்,   நீர் மற்றும் உரங்களை உகந்த முறையில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற இந்த முறை வழிவகை செய்கிறது. எஸ்.எஸ்.ஐ வழக்கமான விதை, நீர் மற்றும் அடர் கரும்பு சாகுபடிக்கு மாற்றாகும். எஸ் எஸ் ஐ இன் முக்கிய கொள்கைகள் ஒரு பரு சீவலை கொண்டு […]

September 16, 2020 editor news
இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்யும் முறை!! இயற்கை விவசாயம்

இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்யும் முறை!!

தக்காளி ஒரு முக்கிய காய்கறிப் பயிராக பயிரிடப்படுகிறது. தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் தக்காளி சாகுபடி செய்வதில் ஒரு முதன்மை பயிராக உள்ளது. இயற்கை வழி வேளாண் முறையில் தக்காளி சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம். பருவம் மற்றும் விதை அளவு ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச், மாதங்கள் தக்காளி சாகுபடிக்கு ஏற்ற பருவங்கள் ஆகும். வண்டல் மண்ணில் நல்ல மகசூலை தரும். […]

August 31, 2020 editor news
சேறு இல்லாத நெல் நடவு – நெல் சாகுபடியில் ஒரு புதிய முன்னேற்றம் தொழில்நுட்பம்

சேறு இல்லாத நெல் நடவு – நெல் சாகுபடியில் ஒரு புதிய முன்னேற்றம்

தமிழ்நாட்டில் நெல் 2.04 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் 9.98 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நெல் ஒரு முக்கிய உணவுப் பயிராக பயிரிடப்படுகிறது. மேலும் அரிசி தமிழ் நாட்டின் ஒரு பிரதான உணவு. நெல் வளர்ப்பிற்கு மழைபொழிவே  முக்கியமான நீர் ஆதாரமாக விளங்குகிறது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்லும் மழைபொழிவால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தே உள்ளது. மேலும் பயிருக்கு பிந்தைய வறட்சி காரணமாக பயிர் பாதியிலேயே கருகும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் பருவ நிலை […]

August 31, 2020 editor news
கோலியஸ் சாகுபடி தொழில்நுட்பங்கள் மருத்துவ குணங்கள்

கோலியஸ் சாகுபடி தொழில்நுட்பங்கள்

கோலியஸ் பயிரானது இரண்டு அல்லது இரண்டரை அடி உயரம் வரை வளரக்கூடிய சிறு மூலிகைச் செடியாகும் ஆகும். இதன் அறிவியல் பெயர் கோலியஸ் போர்ஸ்கோலி (Coleus forskohlii) மற்றும் லில்லியேசியே (Liliaceae) குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். மேலும் கூர்க்கன் கிழங்கு, மருந்து கிழங்கு, மருந்து கூர்க்கன் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் இலை மற்றும் வேர் கிழங்குகளிலிருந்து போர்ஸ்கோலின் (Forskolin) என்ற மருத்துவ மூலப்பொருள் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர் செய்யக்கூடிய வல்லமை கொண்டது. மேலும் […]

July 30, 2020 editor news