32°C

விவசாய கட்டுரைகள்

கடலுார்மாவட்டத்தில் விலை வீழ்ச்சியால், விவசாயிகளுக்கு நஷ்டம் விவசாய கட்டுரைகள்

கடலுார்மாவட்டத்தில் விலை வீழ்ச்சியால், விவசாயிகளுக்கு நஷ்டம்

கடலுார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறி மற்றும் விளைபொருட்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடலுார் மாவட்டத்தில் விருத்தாசலம், சிதம்பரம், கடலுார், பண்ருட்டி பகுதிகளில் அதிகளவில் காய்கறி மற்றும் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த 3 மாதங்களாக காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. அதேபோன்று, விவசாய உற்பத்தி பொருட்களான நெல், மணிலா, உளுந்து போன்றவையும் 50 சதவீதம் அளவில் விலை குறைந்துள்ளன. இந்த விலை வீழ்ச்சி கடந்த 3 மாதங்களாக நீடித்து வருவதால் விவசாயிகள் […]

March 2, 2018 Editor
‘விதை செயலி’ விளக்க பயிற்சி விவசாய கட்டுரைகள்

‘விதை செயலி’ விளக்க பயிற்சி

வேளாண்மை துறை சார்பில், விதை செயலி (சீட்ஸ் ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனையாளருக்கு, விதை செயலி குறித்த விளக்க பயற்சி திருவள்ளூரில் நேற்று நடந்தது. விதை ஆய்வு துணை இயக்குனர் உத்தரவின் படி நடந்த இந்த நிகழ்ச்சியில், விதை ஆய்வாளர்கள் அனிதா, உமா மகேஸ்வரி மறறும் வேழவேந்தன் ஆகியோர் பயிற்சிஅளித்தனர். விதை செயலி பயன்பாடு, விதை இருப்பு, விற்பனை விபர அறிக்கை ஆகியவற்றை, விதை செயலி மூலம் வாரம்தோறும் சமர்ப்பிக்க வேண்டும் […]

March 2, 2018 Editor
கிருஷ்ணகிரி மாவட்டதில் யானைகளால் வீணாகும் தக்காளியும், மாமரங்களும் விவசாய கட்டுரைகள்

கிருஷ்ணகிரி மாவட்டதில் யானைகளால் வீணாகும் தக்காளியும், மாமரங்களும்

தேன்கனிக்கோட்டை பகுதியில் அட்டகாசம் செய்து வரும் யானைகள், மாமரங்களை முறித்து போட்டு துவம்சம் செய்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள், பல பிரிவுகாளக பிரிந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதி மரகட்டா, ஆலள்ளி, வட்டவடிவுபாறை, ஊடேதுர்கம், சானமாவு உள்ளிட்ட வனப்பகுதியில் முகாமிட்டு கடந்த 4 மாதங்களாக அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், ஆலள்ளி காட்டில் முகாமிட்டுள்ள யானை கூட்டம், நேற்று முன்தினம் இரவு இருதுக்கோட்டை அருகே […]

February 27, 2018 Editor
விலை வீழ்ச்சியால் தோட்டத்திலேயே வீணாகும் கொத்தமல்லி விவசாய கட்டுரைகள்

விலை வீழ்ச்சியால் தோட்டத்திலேயே வீணாகும் கொத்தமல்லி

விளைச்சல் அதிகரிப்பால், ஓசூரில் கொத்தமல்லி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், பறிக்காமல் விடுவதால் தோட்டத்திலேயே வீணாகி வருகிறது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதிகளில் அதிகளவில் கொத்தமல்லி பயிரிடப்படுகிறது. ஒரு ஏக்கரில் பயிரிட ரூ.25 ஆயிரம் வரை செலவாகிறது. இது 40 நாட்களில் விளைச்சல் கொடுக்கக்கூடிய பயிர் என்பதால், விவசாயிகள் அதிகளவில் கொத்தமல்லி பயிரிடுகின்றனர். இந்த பகுதியிலிருந்து கோவை, திருச்சி, சென்னை, சேலம்  உள்ளிட்ட நகரங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தினமும் கொத்தமல்லி அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது, […]

February 27, 2018 Editor
புலியூரை மையமாக கொண்டு தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்க வேண்டுகோள் விவசாய கட்டுரைகள்

புலியூரை மையமாக கொண்டு தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்க வேண்டுகோள்

கிருஷ்ணகிரி கலெக்டரிடம், கோட்டப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு,. கிருஷ்ணன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று படுகை பகுதிகளில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், நெடுங்கல், அகரம், மருதேரி, செல்லம்பட்டி, பாரூர், மஞ்சமேடு, புங்கம்பட்டி, கீழ்குப்பம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இங்கு, உற்பத்தி செய்யப்படும் தேங்காய்க்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட் மட்டுமின்றி […]

February 27, 2018 Editor
200 ஏக்கரில் இலவச தோட்டம் அமைக்க ஏற்பாடு:விவசாயிகளுக்கு வாய்ப்பு விவசாய கட்டுரைகள்

200 ஏக்கரில் இலவச தோட்டம் அமைக்க ஏற்பாடு:விவசாயிகளுக்கு வாய்ப்பு

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 200 எக்டேரில் தோட்டம் அமைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. விவசாயத்திற்கு தேவையான விதைகள், உரங்கள், இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது.இந்நிலையில் ஊரக வளர்ச்சி துறை மூலம், ஒன்றியங்களில் இடம் வைத்திருக்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவசமாக தோட்டம் அமைத்து கொடுக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. இலவச தோட்டம் திண்டுக்கல் ஒன்றியத்தில் 40 […]

February 27, 2018 Editor
கருகும் நெற்பயிர்: விவசாயிகள் கவலை விவசாய கட்டுரைகள்

கருகும் நெற்பயிர்: விவசாயிகள் கவலை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் சுற்றுப்பற பகுதிகளில் கிணற்றின் நீர்மட்டம் குறைந்துவருவதால், நெற்பயிர் கருகி வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கிணற்று நீரை நம்பி விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்தனர். தற்போது கிணற்றின் நீர் மட்டம் குறைந்து, போதிய அளவில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல், நெற்பயிர் கருகும் சூழ்நிலையில் உள்ளது. செலவு செய்த பணமும், உழைப்பும் வீணாகிறது என, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்

February 27, 2018 Editor
தரமில்லாத விதை உளுந்தால் 4 ஏக்கரில் உளுந்து முளைப்பில்லை விவசாய கட்டுரைகள்

தரமில்லாத விதை உளுந்தால் 4 ஏக்கரில் உளுந்து முளைப்பில்லை

காஞ்சிபுரம் மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம், சிறுக்கரணையில் விவசாயி ஒருவர், தனக்கு சொந்தமான நிலத்தில், 4 ஏக்கரில் நடத்தும் தனியார் விதை உளுந்து வாங்கி பயிர் செய்தார். ஆனால் உளுந்து விதையில் போதிய முளைப்பு தன்மை இல்லை. இதனால் தன்னுடைய உழைப்பு வீணாகியுள்ளதாக அவரும், அதே போன்று தரமில்லாத தனியார் நிறுவனங்களிடம் வாங்கிய பிற விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். வேளாண் துறையில், ‘வம்பன் -8’ உளுந்து விதைக்கு தட்டுப்பாடு இருந்ததால், ‘அக்ரோ சென்டர்’ நடத்தும் தனியார் விதை வியாபாரிகளிடம் […]

February 26, 2018 Editor
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான “இ- நாம்’ அறிமுகம் விவசாய கட்டுரைகள்

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான “இ- நாம்’ அறிமுகம்

திருப்பூர் : விவசாயிகளின் விளைபொருட்களை, தேசிய சந்தைகளில் விற்பனை செய்ய, “இ -நாம்’ திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு சார்பில், 15 இடங்களில் ஒழுங்குமுறை விற் பனைக்கூடங்கள் செயல்படுகின்றன. திருப்பூர், அவிநாசி, உடுமலை, சேவூர், பல்லடம், பொங்கலூர், பெதப்பம்பட்டி, மடத்துக்குளம், காங்கயம், குன்னத்தூர், வெள்ளக் கோவில், தாராபுரம், மூலனூர், முத்தூர், அலங்கியம் ஆகிய இடங்களில், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் உள்ளன. “ஒரே நாடு ஒரே […]

February 25, 2018 Editor
புவி வெப்பமடைதல்-  தெரிஞ்சுக்கலாமா? விவசாய கட்டுரைகள்

புவி வெப்பமடைதல்- தெரிஞ்சுக்கலாமா?

குளோபல் வார்மிங், கிளைமேட் சேஞ்ச் என்பது போன்ற வார்த்தைகள் நமக்கு செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. முதலில் நாம் கேட்டது ஓசோன் படலம் ஓட்டை என்பதைத்தான், ஆனால் இன்றோ உலகம் அழிவின் விளிம்பை நோக்கிச் செல்கிறது. புயல், வெள்ளம் தாறுமாறாக அதிகரித்திருப்பதற்கும், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் இவைதான் காரணம் என்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்த உலகுக்கே ஆபத்தை உருவாக்கும் குளோபல் வார்மிங், கிளைமேட் சேஞ்ச் என்றால் என்ன? சிக்கலான அறிவியல், சுற்றுச்சூழல் விஷயங்களாகக் கருதப்படும் புவிவெப்பமடைதல், பருவநிலை மாற்றம் […]

January 24, 2018 Editor