Skip to content

பிரேசில் மக்கள் விரும்பும் இந்திய மாடுகள்

நம் மக்கள் மட்டும் தான் வெளிநாட்டு கலப்பின மாடுகளை விரும்புகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா.? வெளிநாட்டினரும் அதே மோகத்தில் தான் உள்ளனர். அதிலும் குறிப்பாக அதிக பால், நல்ல இறைச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக நம் இந்திய நாட்டு மாடுகளின் கலப்பினங்களை அதிகளவில் விரும்புகின்றனர். அப்படிப்பட்ட ஆர்வத்தில்… பிரேசில் மக்கள் விரும்பும் இந்திய மாடுகள்

செம்மறி ஆட்டுக்குட்டிகளை போன்று தோற்றமளிக்கும் பெட்லிங்டன் டெரியர் நாய்கள்

வடகிழக்கு இங்கிலாந்தின் நார்த்அம்பர்லான்ட் நகரத்திலுள்ள, பெட்லிங்டன் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட நாய்கள் இவை. இதன் காரணமாகவே இவற்றை பெட்லிங்டன் டெரியர் (Bedlington Terrier) என்று அழைக்கின்றனர். அப்பகுதியிலுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் இந்நாய்களை விரும்பி வளர்த்து வந்துள்ளனர். முதன் முதலில் இந் நாய்களை ஜிப்ஸி நாய்கள் என்றே அழைத்துள்ளனர். அதன் பின்னர்… செம்மறி ஆட்டுக்குட்டிகளை போன்று தோற்றமளிக்கும் பெட்லிங்டன் டெரியர் நாய்கள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பிரம்மன் மாடுகள்

அமெரிக்காவில் 1885 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கலப்பின மாடுகள் இவை. இந்தியாவை சேர்ந்த கிர், குசரெத், நெல்லூர் மற்றும் கிருஷ்ணா பள்ளத்தாக்கு நாட்டு மாடுகளை, அமெரிக்க மாடுகளோடு இணைத்து இந்த கலப்பின மாடுகளை உருவாக்கியுள்ளனர். இப்பொழுதும் அமெரிக்க ஹியர்போர்டு மற்றும் குட்டை கொம்பு மாடுகளோடு கலப்பினம் செய்தே அதிக… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பிரம்மன் மாடுகள்

நியாபாலிடன் மஸ்டீஃப்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் வாழ்ந்த காவல் நாய்களின் வழித்தோன்றல்கள் இவை. இந்நாய்களுக்கு மஸ்டினோ நெப்போலிடனோ (Mastino Nepalitano) என்றொரு பெயரும் உண்டு. செல்லமாக மஸ்டினோ அல்லது நியோ மஸ்டீஃப் என்று அழைக்கின்றனர். பேரரசர் அலெக்ஸாண்டரின் செல்ல நாயான பெரிற்றா, நியாபாலிடன் மஸ்டீஃப்  (Neapolitan Mastiff) இனத்தை சார்ந்தது… நியாபாலிடன் மஸ்டீஃப்

ஸ்காட்டிஷ் மடிப்பு பூனைகள் உருவான சுவாரஸ்ய வரலாறு

இன்று உலகிலுள்ள அனைத்து ஸ்காட்டிஷ் மடிப்பு பூனைகளும் (Scottish Fold Cat), சூசி என்னும் ஒரே பூனையின் வழித்தோன்றல்கள் தான். 1961 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் ராஸ் என்பவர், தன்னுடைய அண்டை வீட்டுக்காரரின் பண்ணையிலிருந்து மடிந்த காதுடன் கூடிய வித்தியாசமான ஒரு பூனையை கண்டுபிடித்தார்.… ஸ்காட்டிஷ் மடிப்பு பூனைகள் உருவான சுவாரஸ்ய வரலாறு

பிராய்லர் கோழியை போன்று வேகமாக வளரும் சபோல்க் செம்மறியாடுகள்

பிரிட்டனைச் சேர்ந்த கருப்பு முகத்துடன் கூடிய நார்போல்க் ஹார்ன் (Norfolk Horn) பெண் செம்மறியாட்டினையும், சிறிய பிரிட்டிஷ் வகை சௌத்டௌன் (SouthDown) ஆண் செம்மறியாட்டினையும் இணைத்து உருவாக்கப்பட்ட கலப்பின ஆடுகள் தான் இவை.18 ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதியில் இங்கிலாந்தின் சபோல்க் பகுதியில் இந்த செம்மறியாடுகள் உருவாக்கப்பட்டன. 1810… பிராய்லர் கோழியை போன்று வேகமாக வளரும் சபோல்க் செம்மறியாடுகள்

தமிழக நாட்டு நாய்கள் இனத்தைச் சேர்ந்த அயர்லாந்து நாய் – ஐரிஷ் வுல்ஃப் ஹௌண்ட்

அயர்லாந்து நாட்டை பூர்வீகமாகக் கொண்ட நாய் இனம் இது. அங்குள்ள மக்கள் ஓநாய், மான், கரடி போன்றவற்றை வேட்டையாடுவதற்காக ஐரிஷ் வுல்ஃப் ஹௌண்ட் நாய்களை (Irish wolf Hound) பயன்படுத்தியுள்ளனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு வரை அயர்லாந்து ராணுவத்தில் 300 ஐரிஷ் வுல்ஃப் ஹௌண்ட்… தமிழக நாட்டு நாய்கள் இனத்தைச் சேர்ந்த அயர்லாந்து நாய் – ஐரிஷ் வுல்ஃப் ஹௌண்ட்

ஐரோப்பிய காடுகளில் அன்னிய ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ள வளையவால் கோட்டிகள்

ரக்கூன் குடும்பத்தை சார்ந்த இந்த விலங்குகளை தென் அமெரிக்க கோட்டிகள் என்றும் அழைக்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் நேசுவா நேசுவா (Nasua nasua). இவை தென் அமெரிக்க கண்டத்திலுள்ள நாடுகளான கொலம்பியா, கயானா, உருகுவே, அர்ஜென்டினா, ஈக்வடார், பொலிவியா, பராகுவே, பெரு, சூரினேம் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில்… ஐரோப்பிய காடுகளில் அன்னிய ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ள வளையவால் கோட்டிகள்

மாலுமிகளுடன் உலகம் சுற்றிய பொம்மை நாய்கள்

பஞ்சுப் பொதி போன்றிருக்கும் இந்த அழகிய குட்டி நாய்கள், பிஷான் வகையைச் சேர்ந்தவை. இவை 13ம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளிலுள்ள ராஜகுடும்பத்தினரின் செல்லப்பிராணியாக இருந்து வந்துள்ளன. அத்துடன் ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை இவை மிகவும் பிரபலமான சர்க்கஸ் நாய்களாகும்.              … மாலுமிகளுடன் உலகம் சுற்றிய பொம்மை நாய்கள்

நான்கு கொம்புகளை கொண்ட செம்மறியாடுகள்

கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் வெள்ளை நிற திட்டுக்களுடன், கண்ணைக்கவரும் அழகோடு காணப்படும் இந்த செம்மறியாடுகள் பிரிட்டனை பூர்வீகமாகக் கொண்டவை. 350 ஆண்டுகளுக்கும் மேலாக இவை அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன. ஜேக்கப் செம்மறியாடுகள் பெரும்பாலும் நான்கு கொம்புகளை கொண்டவையாக இருக்கும். ஆண் பெண் இரு ஆடுகளுக்கும் கொம்புகள் உண்டு.… நான்கு கொம்புகளை கொண்ட செம்மறியாடுகள்