32°C

மருத்துவ குணங்கள்

கண்டங்கத்திரியின் நன்மைகள் மருத்துவ குணங்கள்

கண்டங்கத்திரியின் நன்மைகள்

கண்டங்கத்திரி ஒரு பழங்கால விரும்பத்தக்க தாவரமாகும். பழங்காலத்தில் இதை சமையல் செய்வதற்கு அதிகமாக பயன்படுத்தினர். கண்டங்கத்திரியின் தாவரவியல் பெயர் சொலானம் சரடென்ஸ் என்பதாகும். இந்த தாவரம் முழுவதும் முட்களால் சூழப்பட்டிருக்கும். இது  எளிதாக கிடைக்கும் ஒரு தாவரம் ஆகும். இதன் அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுகிறது. கண்டங்கத்திரி முக்கியமாக இருமல், சளி மற்றும் குளிரினால் வரும் காய்ச்சல் போன்ற அனைத்து சுவாச நோய்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. கண்டங்கத்திரியின் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு: கண்டங்கத்திரியில் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு அதிகமாக உள்ளது. […]

October 6, 2015 Editor
வெந்தய இலையின் பயன்கள் மருத்துவ குணங்கள்

வெந்தய இலையின் பயன்கள்

வெந்தயம் பொதுவாக தெற்கு ஐரோப்பாவின் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் காணப்படுகிறது. தற்போது வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் இலைகள் மற்றும் விதைகள் இரண்டையும் நறுமண பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். வெந்தய விதை ஒரு ஊட்டச்சத்து பொருளாக பயன்படுகிறது. பல சுகாதார நலன்கள் காரணமாக இந்த வெந்தயத்தை மூலிகை பிரியர்கள் அனைவரும் விரும்புகின்றனர். குடல் பிரச்சனைகள்: இந்த இலை மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் அஜீரண சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. […]

October 5, 2015 Editor
பிளாக் முஸ்லியின் மருத்துவக் குணம் !     மருத்துவ குணங்கள்

பிளாக் முஸ்லியின் மருத்துவக் குணம் !    

பிளாக்  முஸ்லி தாவரத்தில் நிறைய மூலிகை நன்மைகள் உள்ளன.இந்த தாவரம் இந்தியாவில் உள்ள சோட்டா நாக்பூர் பீடபூமி மற்றும் தக்காண பீடபூமி போன்ற மலைப் பிரதேசங்களில் வளரக்  கூடியவை. இது யுனானி முறையில் பல மருத்துவ பயன்பாட்டிற்கு ஒரு  முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது. மூலிகைக்காக இந்த மருந்து மிகவும் அதிகமாக பயன்படுகிறது. இந்த தாவரத்தினுடைய வேர் தான் மருத்துவ பயன்பாட்டிற்கு அதிகமாக பயன்படுகிறது. பிளாக் முஸ்லியின் சுகாதார நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்:   ஆயுர்வேதப் படி : […]

October 2, 2015 Editor
அரோ  கிழங்கில் உள்ள  ஊட்டச்சத்து! மருத்துவ குணங்கள்

அரோ  கிழங்கில் உள்ள  ஊட்டச்சத்து!

அரோ கிழங்கில் அதிகமான  ஸ்டார்ச்  நிறைந்துள்ளது. இந்த வகை கிழங்கை அதிகமாக பிலிப்பைன்ஸ்,  கரீபியன் தீவுகள், மற்றும் தென் அமெரிக்கா  போன்ற இடங்களில் பயிரிடுகின்றனர். அரோ கிழங்கு பொடியில் அதிக கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளது.  ஒவ்வொரு கிழங்கும்  சுமார் 30 கிராம் முதல் 50கிராம் வரை  எடையுள்ளதாக இருக்கிறது. அரோ கிழங்கின்  நன்மைகள்: இந்த கிழங்கில் கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கிறது.  100  கிழங்கில்   65 கலோரிகள் மட்டுமே அடங்கியுள்ளன. உருளைக்கிழங்கு, மரவள்ளி, போன்ற கிழங்குகளில் உள்ள […]

October 2, 2015 Editor
மாகா வேரின் நன்மைகள்! மருத்துவ குணங்கள்

மாகா வேரின் நன்மைகள்!

மாகா வேரில் நிறைய சுகாதார நன்மைகள் உள்ளன. இயற்கை வைத்தியத்திற்கு மாகா வேரை பயன்படுத்துகிறார்கள். இந்த மாகா வேர் ஆண்டிஸ் மலைத்தொடர் , முக்கியமாக பெருவில் தான் காணப்படுகிறது. இந்த வேர் அதிகமாக மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. கடும் வெப்பநிலை மற்றும் பனி இருந்தபோதும் செழித்து வளரும் தன்மை வாய்ந்தது. இந்த மாகா தாவரம் கடுகு தாவரத்தை தொடர்புடையது. மாகா வேரில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த மாகா தாவரத்தின் ரூட் அல்லது கிழங்கில் அதிகமாக  புரதம், இயற்கை […]

October 1, 2015 Editor
முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்! செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்!

முள்ளங்கி வெள்ளை, சிவப்பு, ஊதா அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் இருக்கின்றன. மற்றும் இது வடிவம் வகையில்,  நீண்ட மற்றும் உருளை அல்லது வட்ட வடிவிலும் இருக்கிறது. முள்ளங்கி விதைகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் பொருட்கள் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். முள்ளங்கியின் அறிவியல் பெயர் ரபானஸ் சடைவஸ் என்பதாகும். இது பிராசிகாசியா தாவர குடும்பத்தை சேர்ந்தது.  பல வியாதிகளை தடுக்கும் சிகிச்சைக்காகவும் முள்ளங்கி பயன்படுகிறது. மஞ்சள் காமாலை: முள்ளங்கி கல்லீரல் மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது. இது […]

October 1, 2015 Editor
தாமரை விதையின் நன்மைகள் மருத்துவ குணங்கள்

தாமரை விதையின் நன்மைகள்

தாமரை விதைகளை சமைத்தும் சாப்பிடலாம் சமைக்காமலும் சாப்பிடலாம். தமரையை பயிரிடுபவர்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அறுவடை செய்வார்கள், பின்னர் அதை வெயிலில் காயவைப்பார்கள். தாமரை விதைகள் சீன மருத்துவத்தில் ஊட்டச்சத்து மிக்கதாகவும் குணப்படுத்தும் பண்பு மிக்கதாகவும் உள்ளது. மேலும் மூலிகைகள் தயார் செய்யவும் தாமரை விதைகள் பயன்படுகிறது. தாமரை விதையில் புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற நல்ல வளமான ஆதாரங்கள் இருக்கிறது. மேலும் இதில் கொழுப்பு குறைவாகவும் நிறைவுற்றதாகவும் இருக்கும். தாமரை […]

September 29, 2015 Editor
மண் சூழலை மாற்ற வெட்டிவேர்!.. செய்திகள்

மண் சூழலை மாற்ற வெட்டிவேர்!..

வெட்டிவேர் சமூகம் காக்கும் அற்புதமான தவரமாகும். இதற்கு “குருவேர்” என்று மறுபெயரும் உள்ளது. தாவர வகைகளில் பல்வகையைச் சார்ந்த அற்புதம் நிகழ்த்தும் வெட்டிவேர் ஒரு தனி அதிகாரம் பெற்ற வாசனை புல்லாகும். தீப்பிடித்தாலும், மழை பெய்தாலும் இந்த தாவரத்தினுடைய வேர் உயிருடன் இருந்து நீண்ட காலம் வாழும் திறனுடையது. இந்த வெட்டிவேர் எல்லா பயிருடனும் கூட்டணி வைத்து, மேடுபள்ளம் நிறைந்த காடு மற்றும் கரடு முரடான பகுதிகளில் கூட கிடுகிடுவென்று வளர்ந்துவிடும் தன்மை கொண்டது. எவ்வித உரமோ, […]

September 29, 2015 Editor
பர்ட்டாக் வேரின் நன்மைகள்! மருத்துவ குணங்கள்

பர்ட்டாக் வேரின் நன்மைகள்!

பர்ட்டாக் வேர் நிலத்தடி கிழங்கு வகையை சார்ந்தது. இந்த வேர் காய்கறி மற்றும் மருத்துவ மூலிகையாக பயன்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் இந்த தாவரத்தினுடைய வேர் மூலிகைக்காக சாகுபடி செய்து வந்தார்கள். அனைத்து பகுதிகளிலும் இந்த தாவரம் எளிதாக வளரக்கூடிய தன்மை வாய்ந்தது. பர்ட்டாக் தாவரம் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். இந்த தாவரத்தின் இலைகள் பரந்த, இதய வடிவில் இருக்கும். பூ சிவப்பு ஊதா நிறத்தில் இருக்கும். தண்டின் நீளம் 2 – […]

September 28, 2015 Editor
கொத்தமல்லி விதையின் (செலரி) மருத்துவக் குணம் மருத்துவ குணங்கள்

கொத்தமல்லி விதையின் (செலரி) மருத்துவக் குணம்

கொத்தமல்லி விதையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். பண்டைய காலங்களில், இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில்  கொத்தமல்லி விதையை சளி, ஃப்ளூ,  செரிமானம், கீழ்வாதம் , கல்லீரல் போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுத்தினர். கொத்தமல்லி  விதை கொசுக்களை விரட்டவும் உபயோகமாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொத்தமல்லி இலை மெலிதாகவும் 2 முதல் 3 அடி உயரம் வளரும். இந்த பூக்களில் காணப்படும் கொத்தமல்லி விதை மிகவும் சிறியதாக இருக்கும் . இந்த கொத்தமல்லி விதையில் லினோலிக் அமிலம், […]

September 24, 2015 Editor