32°C

பயிர் வகைகள்

மலைவேம்பு பயிர் வகைகள்

மலைவேம்பு

மலைக்காடுகள், ஓடைக்கரைகளில் தன்னிச்சையாக உயரமாக வளரக்கூடிய மரமிது. சாதாரண வேப்பிலையில் காணக்கூடிய அறுவாய் தோற்றம், இம்மரத்து இலைகளில் இருக்காது. பூக்கள் கொத்து கொத்தாகவும் வெண்மை நிறத்துடனும் இருக்கும். காய் உருண்டையாகவும் கெட்டியாகவும் இருக்கும். தோற்றத்தில் இதை ஒத்திருக்கும் துளுக்க வேம்பை, மலைவேம்பு எனக் கருதுவதுண்டு. ஆனால், துளுக்க வேம்பில் நீல நிறப் பூக்கள் பூப்பதை வைத்து எளிதாக இனம் காணலாம். இது இஸ்லாமிய நாடுகளில் இருந்து வந்தமையால், துளுக்க வேம்பு என அழைக்கப்படுகிறது. மலைவேம்பு வணிக ரீதியாக […]

July 8, 2017 senthamil
கறிவேம்பு! பயிர் வகைகள்

கறிவேம்பு!

இது அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புத மூலிகை. நாம் நறுமணத்துக்காக மட்டும் பயன்படுத்தி, பிறகு தூக்கி எறியும் கறிவேப்பிலை தான் இது. இதில் வைட்டமின் ஏ, இரும்பு சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இதைத் தாளிக்க மட்டுமே பயன்படுத்தினால் முழுப்பயன் கிடைக்காது. அதனால், உணவுத்தட்டில் இருந்து இதைத் தூக்கி எறியாமல் கண்டிப்பாக உண்ண வேண்டும். அப்போதுதான் முழுப்பலன் கிடைக்கும். முன்பு குழந்தைகளைக் குளிப்பாட்டிய உடன் ‘உரப்பு மருந்து’ எனும் மருந்தை குழந்தைகளின் நாக்கில் தடவி விடுவார்கள். சிறிது […]

July 8, 2017 Editor
பட்டுப்புழு வளர்ப்பில் மர மல்பெரியின் முக்கியத்துவம்! பயிர் வகைகள்

பட்டுப்புழு வளர்ப்பில் மர மல்பெரியின் முக்கியத்துவம்!

ஒரு காலத்தில் மல்பெரி ஒரு பழ மரமாகவே கருதப்பட்டது. மல்பெரி வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரம் ஆகும். மல்பெரி மரம் வறட்சியாலும் தரமான, அதிகளவு  இலையை தரக்கூடியது.  தோட்டத்தின் எல்லை பகுதிகளிலும் வரப்பு ஓரங்களிலும் 8-10 அடி இடைவெளியில் மல்பெரி மரங்களை வளர்ந்து பராமரித்து நல்ல தரமான சத்துள்ள மல்பெரி இலைகளை புழுக்களுக்கு உணவளிப்பதன் மூலம் தரமான பட்டுக்கூடுகளை அறுவடை செய்து அங்காடியில் நல்ல விலை பெறலாம். நன்கு வளர்ந்த ஒரு மரத்தில் கிடைக்கும் சுமார் 9 […]

July 3, 2017 பிரியதர்ஷினி
திராட்சை சாகுபடி! பயிர் வகைகள்

திராட்சை சாகுபடி!

தமிழ்நாட்டில் திராட்சை விவசாயத்தில் முதலிடத்தில் உள்ளது தேனி மாவட்டம். எல்லா காலங்களிலும் திராட்சை விளையக்கூடிய சீதோஷ்ணநிலையை தமிழகத்திலேயே தேனியில் மட்டும்தான் காணமுடியும். இங்கு திராட்சை அதிகளவு பயிரிட்ப்படுவதைத் தொடர்ந்து அதை ஊக்குவிக்கும் வகையில் திராட்சை ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைத்துள்ளனர். இதில் 120 புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.   தமிழகத்தில் 2800 ஹெக்டேரில் கோவை, திண்டுக்கல், தெனி திருநெல்வேலி மாவட்டங்களில் திராட்சை விவசாயம் செய்யப்பட்டாலும் தேனியில் மட்டும் 2,300 ஹெக்டேரில் திராட்சை விவசாயம் செய்யப்படுகிறது.   தேனியில் […]

July 3, 2017 Editor
கருங்குறுவை சாகுபடி..! இயற்கை விவசாயம்

கருங்குறுவை சாகுபடி..!

நாற்பது சென்ட் நிலத்தில் கருங்குறுவை நெல் சாகுபடி.. கருங்குறுவை ரகத்தின் வயது 110 நாட்கள். இது, மோட்டா ரகம். நாற்பது சென்ட் நிலத்தில் சாகுபடி செய்ய 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலுக்கான நிலத்தில் 2 சால் சேற்றுழவு செய்து எருக்கன், ஆடாதொடை, புங்கன், வேம்பு நொச்சி இலைகள் ஆகியவற்றைக் கலந்து 50 கிலோ அளவில் போட்டு காலால் மிதிக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து, 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி நிலத்தைச் சமப்படுத்த […]

March 18, 2017 Editor
குதிரைவாலி தோற்றமும் பண்பும்..! செய்திகள்

குதிரைவாலி தோற்றமும் பண்பும்..!

இது புஞ்சை, நஞ்சை நிலங்களில் வளரும் சொரசொரப்புத் தன்மையுடைய ஓராண்டு புல்லினப் பயிராகும். இதன் பூர்விகம் தெளிவாகக் கூறப்படாவிட்டாலும், இது வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகள், சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள், சாலையோகரங்கள், வெப்பமான மலைப்பகுதிகள், வெப்பம் அதிகமாகக் காணப்படும் உலகின் பல பகுதிகளிலும் வளரக்கூடியது என்பதால் ஐரோப்பா மற்றும் ஆசியாவினுடைய பகுதியைச் சார்ந்ததாகக் கூறப்படுகிறது. உலகளவில் Echinochloa தாவரத்தை உள்ளடக்கிய பிறவியில் (Genus) சுமார் 49 தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவைகளில் 38 மட்டும் தாவரவியல் […]

February 13, 2017 Editor
கம்பு செடியின் பண்புகள் மற்றும் பயன்கள்.. செய்திகள்

கம்பு செடியின் பண்புகள் மற்றும் பயன்கள்..

வளரியல்பு ஆண்டுதோறும் வளரக்கூடியவை. கழைகள் கழைகள் திடமானது, 3 மீட்டர் உயரமானது, நெருக்கமானது. கணுக்கள் மொசுமொசுப்பானது, மஞ்சரி கீழ்ப்புறத்தில் இருக்கும். இலைகள் இலை உறைகள் தளர்வானது, வழவழப்பானது; ஏறத்தாழ 20-100X2-5 செ.மீ நீளமானது, இரு மேற்பரப்புகள் மற்றும் விளிம்புகள் சுணையுடையது; அடிப்பகுதி இதய வடிவமானது; இலை உறைச்செதில் சுமார் 2-3 மி.மீ நீளமுடையது. மஞ்சரி நேரானது முதல் அகலமானது, நீள்வட்ட வடிவமானது, நெருக்கமானது, ஏறக்குறைய 40-50X1.5-2.5 செ.மீ நீளமுடையது; அச்சு நெருக்கமானது. மொசுமொசுப்பானது, பூவடிச் செதிலின் மேலுறை […]

February 11, 2017 Editor
கம்பில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகள்..! செய்திகள்

கம்பில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகள்..!

கம்பு ஏற்றுமதி சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு கூட்டாட்சியில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 100 கிராம் கம்பில் உள்ள சத்துகள் ஈரப்பதம் – Moisture – 12.4 புரத சத்து – Protein – 10.6 கிராம் நார்ச்சத்து – Fiber – 1.3 கிராம் கொழுப்பு (எளிதில் ஆவியாக மாறக் கூடியசத்து)-Fat (ether extr) – 5 தாதுப்பொருள் – Mineral – 2.7% சுண்ணாம்பு சத்து – Calcium – 50 மில்லி […]

February 10, 2017 Editor
குள்ளகார் சாகுபடி நுட்பங்கள் இயற்கை விவசாயம்

குள்ளகார் சாகுபடி நுட்பங்கள்

ஒரு ஏக்கர் நிலத்தில் குள்ளகார் சாகுபடி செய்யும் முறை பற்றி காண்போம். குள்ளகார் 100 நாள் பயிர். அனைத்து வகையான மண்ணிலும் விளையும். இது குறுவை பட்டத்துக்கு ஏற்றது. மோட்டா ரகம். பயிர் 4 அடி உயரம் வளரும். ஒரு ஏக்கர் நிலத்தில், ஒற்றை நாற்று முறையில் குள்ளகார் சாகுபடி செய்ய 8 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலில் மண் தெரியாத அளவுக்கு உளுந்து, பச்சைப்பயறு சக்கைகள், வேம்பு, புங்கன் இலைகள் ஆகியவற்றை பரவலாகப் […]

September 1, 2016 Editor
இலவச பயிற்சி வகுப்பு: மானாவாரி பயிர் சாகுபடி ! செய்திகள்

இலவச பயிற்சி வகுப்பு: மானாவாரி பயிர் சாகுபடி !

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, புலிப்பாறைப்பட்டியில் தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பு மற்றும் புலிப்பாறைப்பட்டி இளைஞர்கள் இணைந்து வருகிற ஜூலை 23-ம் தேதி ‘மானாவாரி பயிர்களுக்கான விதைப்பு முதல் மதிப்புக்கூட்டல் வரை அனுபவ விவசாயிகளின் பயிற்சி’, ‘இயற்கை உரங்கள் தயாரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்னோடி இயற்கை விவசாயிகளும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும். தொடர்புக்கு, செல்போன் : 94435-75431 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 13, 2016 Editor