32°C

பயிர் பாதுகாப்பு

பயிர் பாதுகாப்பு

பப்பாளியில் வேர் அழுகலைத் தடுக்க சுண்ணாம்பு துத்தநாகக் கரைசல்! பயிர் பாதுகாப்பு

பப்பாளியில் வேர் அழுகலைத் தடுக்க சுண்ணாம்பு துத்தநாகக் கரைசல்!

சில கன்றுகளின் வேர்ப்பகுதியில் பாக்டீரியாக்கள் தாக்குவதால், கன்றுகள் சரிந்து விடும். இலைகள் பழுப்பு நிறமாகி, கன்று வாடலாகக் காணப்பட்டால், தூர்ப்பகுதியில் லேசாக குழிதோண்டிப் பார்த்தால் வேர் அழுகல் தெரியும். இதைத் தடுக்க 10 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் சுண்ணாம்பு, 200 கிராம் மயில்துத்தம் ஆகியவற்றைக் கலக்க வேண்டும். மயில்துத்தத்தை நேரடியாகத் தூவினால் பொங்கி, முகத்தில் தெறித்துவிடும். அதனால் ஓரமாகத் தூவி, மெதுவாகக் கலக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மயில்துத்தக் கரைசலைக் கலந்து, […]

September 22, 2016 Editor
பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு மூன்று எண்ணெய் கரைசல் இயற்கை உரம்

பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு மூன்று எண்ணெய் கரைசல்

பப்பாளி சாகுபடியில் இரண்டாவது மாதத்தில் இருந்தே உற்று கவனிக்க வேண்டும். இலைக்கு மேல்புறம், இலைக்கு பின்புறம் என வெள்ளை நிறத்தில் மாவுப்பூச்சி தென்படும். மாவுப்பூச்சி எப்போது தென்பட்டாலும் தண்ணீரை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். தண்ணீர் தெளித்த இரண்டு மணி நேரத்துக்குள், 10 லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் 50 மில்லி, புங்கன் எண்ணெய் 50 மில்லி, இலுப்பை எண்ணெய் 50 மில்லி ஆகியவற்றைக் கலந்து, இதோடு சிறிதளவு காதி சோப் சேர்த்து கைத்தெளிப்பானால் தெளித்துவிட வேண்டும். நன்றி […]

September 6, 2016 Editor
வெள்ளைப் பொன்னி ரகநெல் சாகுபடி செய்யும் முறை! இயற்கை உரம்

வெள்ளைப் பொன்னி ரகநெல் சாகுபடி செய்யும் முறை!

ஒரு ஏக்கர் நிலத்தில் வெள்ளைப் பொன்னி ரக நெல்லை எப்படி சாகுபடி செய்வது என்று பார்ப்போம். மண்ணை வளமாக்க தக்கைப்பூண்டு..! மண்வளம் குறைந்த நிலத்திலும் பாரம்பர்ய ரக நெல் வகைகள் வளரும் தன்மை கொண்டவை. வெள்ளைப் பொன்னிக்கு ஆடிப் பட்டமும், மாசிப் பட்டமும் ஏற்றவை. இதன் வயது 135 முதல் 150 நாட்கள். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு சால் உழவு ஓட்டி மூன்று நாட்கள் காயவிட்டு.. 15 கிலோ தக்கைப்பூண்டு விதையை விதைத்து, […]

August 18, 2016 Editor
பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை பயிர் பாதுகாப்பு

பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை

ஆவாரை, புங்கன், வேம்பு, எருக்கன், நொச்சி, நித்யகல்யாணி ஆகியவற்றின் இலைகளை தலா 3 கிலோ எடுத்து ஒன்றாகச் சேர்த்து நன்கு இடித்து, இவை மூழ்கும் அளவுக்கு மாட்டுச் சிறுநீர் ஊற்றி மூடி வைத்து 20 நாட்கள் தினமும் கலக்கி வர வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் வாசனையுடைய 5 கிலோ வேப்பம் பிண்ணாக்குடன் 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரைக் கலந்து 20 நாட்களுக்கு ஊற வைக்கவேண்டும். பிறகு இரண்டு கரைசல்களையும் ஒன்றாகக் கலந்து.. 100 லிட்டர் தண்ணீருக்கு […]

August 16, 2016 Editor
நெற்பயிரைத் தாக்கும் நத்தைக்குத் தீர்வு ! பயிர் பாதுகாப்பு

நெற்பயிரைத் தாக்கும் நத்தைக்குத் தீர்வு !

மழை பெய்து முடிந்த சமயத்தில் நத்தைகள் அதிகமாக வயலுக்குள் வரும். அவை நெற்பயிரின் அடிப்பகுதியைத் துண்டித்து அதிக பாதிப்பை ஏற்படுத்தும். நத்தைகளைத் தடுக்க.. கல்உப்பை வயலின் ஓரத்தில் தூவி விட்டால், அதில் சிறப்பான பலன் கிடைக்கும். நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

August 9, 2016 Editor
தக்காளி பயிருக்கு சோதனை அவசியம் செய்திகள்

தக்காளி பயிருக்கு சோதனை அவசியம்

தக்காளி ஊசிப்புழு மேலாண்மையில் இனக்கவர்ச்சிப்பொறிகளைப் பயன்படுத்துவது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இனக்கவர்ச்சிப்பொறிகள் ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கான ஆண் அந்துப்பூச்சிகளைக் கூட கவர்ந்து கொன்று விடுகின்றன. இருப்பினும், இதனால் தக்காளியில் ஏற்படும் ஊசிப்புழுக்களின் சேதாரம் குறைவதில்லை. ஒருவேளை, இனக்கவர்ச்சிப்பொறிகளில் கவரப்படும் ஆண் அந்துப்பூச்சிகள் ஏற்கனவே கலவியை முடித்தவையாகக் கூட இருக்கலாம். அதனால்தான் சேதம் குறைவதில்லை. ஆனாலும், இன்னொன்றையும் இந்த இடத்தில் கருத்தில் கொள்ளவேண்டும், இனக்கவர்ச்சிப் பொறிகளின் செயல்திறன், அங்குள்ள தட்பவெப்பநிலை, பருவகாலம், பயிரிடும் முறைகள் ஆகியவற்றைப் […]

July 20, 2016 Editor
நெற்பயிருக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தும் முறை இயற்கை உரம்

நெற்பயிருக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தும் முறை

10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்கிற விதத்தில் கலந்து விதைநேர்த்தி, நாற்றங்கால், நடவு, என ஒவ்வொரு பருவத்திலும் மற்ற இயற்கை இடுபொருட்களுடன் சேர்த்து 15 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா தெளித்து வரவேண்டும். கதிர் பிடித்தவுடன், பஞ்சகவ்யா தெளிக்கக் கூடாது. அப்படி தெளித்தால், சன்ன ரக நெல், மோட்டா ரக நெல்லாக கடினமாகிவிடும். பஞ்சகவ்யா பயன்படுத்துவதால், அதிக தூர்கள், அதிக கிளைகள், அதிக கதிர்கள் கிடைக்கும். ஒவ்வொரு கதிரிலும் அதிக நெல்மணிகள் பிடிப்பதுடன் நோய்த்தாக்குதலும் […]

July 8, 2016 Editor
முட்டை , வெங்காயக் கரைசல் தயாரிப்பு முறை! இயற்கை உரம்

முட்டை , வெங்காயக் கரைசல் தயாரிப்பு முறை!

தோலுரித்த ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை, ஓர் இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெங்காயத்தை எடுத்து அம்மியில் வைத்து நசுக்கி.. லேசான சணல் சாக்கு அல்லது வெள்ளைத்துணியில் வைத்து நன்கு முறுக்கினால், சாறு கிடைக்கும். 10 முட்டைகளை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் பிரித்து, அதில் வெங்காயச் சாற்றைச் சேர்த்துக் கலக்கினால்… கரைசல் தயார். இது ஒரு ஏக்கருக்கு போதுமானதாக இருக்கும். இதை ஒரு டேங்குக்கு (10 லிட்டர்) 50 மில்லி […]

July 5, 2016 Editor
மழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் ! இயற்கை உரம்

மழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் !

மழைக்காலம், பூச்சிகளின் பெருக்கத்துக்கு ஏற்ற உகந்த சூழ்நிலையாக உள்ளது. இந்நிலையில் நெல்லில் இலைச்சுருட்டுப்புழு, இளம் நெற்பயிர், தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களில், இலைகளில் உள்பக்கமாகச் சுருட்டி, உள்ளிருந்து பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். இதனால், பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் தண்டுத் துளைப்பான் தாக்கப்பட்ட பயிர்களில் தண்டுப் பகுதி பல இடங்களில் காய்ந்து காணப்படும். ஒற்றை நாற்று நடவு செய்த நிலங்களில், போதுமான அளவுக்குக் காற்று, சூரிய ஒளி கிடைப்பதால், புகையான் தாக்குதல் குறைவாகவே இருக்கும். ஆனால், […]

July 4, 2016 Editor
சுவைக்கூட்டும் தேமோர் கரைசல்! இயற்கை உரம்

சுவைக்கூட்டும் தேமோர் கரைசல்!

தேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாகப் பூக்கும் இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும். தயாரிப்பு முறை : ஒரு லிட்டர் புளித்த மோர், ஒரு லிட்டர் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைத்து, தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும். ஏழு நாட்கள் இவ்வாறு செய்தால், தேமோர்க் கரைசல் […]

July 2, 2016 Editor