32°C

தொடர்

தொடர்

தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 4 தொடர்

தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 4

குடிநீர் தேவை அதிகரிப்பு:- மேலும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில், 5,000 ஏக்கர் பாசன வசதியும் பெறுகிறது. மேலும், 88 ஏரிகளில் தேக்கி வைக்கப்படும் நீரால், 5,100 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. திருவண்ணாமலை நகரம்,தானிப்படி, சாத்தனுர் மற்றும் வாணாபுரம் ஆகிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, 322 மில்லியன் கன அடி நீரும் பயன்படுத்தப்படுகிறது. இது போக, நீர் இருப்பை பொறுத்து, பாசனத்திற்க்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வெள்ள காலங்களில் அணை நிரம்பினால், அங்கிருந்து […]

September 25, 2017 editor news
தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும்- பகுதி 3 தொடர்

தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும்- பகுதி 3

2015ல் வீணான 32 டி.எம். சி:- எச்.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து கீழ் செங்கம்பாடி வரை, தென்பெண்ணையாற்றின் குறுக்கே குமாரம்பட்டி, தாம்பல் ஆகிய இடங்களில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் தலா, 115,99 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. தென்பெண்ணையாற்றின் குறுக்கே தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த, எம். வெளாம்பட்டி, செனக்கல் என்ற பெயரில் தடுப்பணை கட்ட வேண்டும் என, அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும், 40 ஆண்டுகளுக்கு மேலாக, கோரிக்கை விடுத்து வருகின்றனர். இங்கு தடுப்பணை கட்டப்பட்டால், அரூர், […]

September 22, 2017 editor news
தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 2 தொடர்

தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 2

5 மாவட்டங்களுக்கு அபாயம்:- இந்நிலையில், வலதுபுற கால்வாயை, தர்மபுரி மாவட்டத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 2006ல் ஜெகதாப்பில் இருந்து, 13 கி.மீ.,க்கு கால்வாய் வெட்டி, காரிமங்கலம், திண்டல், சாதிநாயக்கன்பட்டி ஏரிகளுக்கு தண்ணீர் விடப்படுகிறது. இதேபோல், 14.2 கி.மீ., உள்ள இடதுபுற கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர், பாளேகுளி வரை செல்கிறது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, தண்ணீர் வீணாக செல்வதால், பாளேகுளி ஏரியில் இருந்து, சந்தூர் ஏரி வரை, புதிய […]

September 21, 2017 editor news
விவசாய நூல் – நான்காம் அதிகாரம். தொடர்

விவசாய நூல் – நான்காம் அதிகாரம்.

பயிரின் வளர்ச்சியும் ஊட்டமும்.     விவசாயி தொழில்களை நிர்ணயிக்கின்ற பொதுவான நிலைமைகளை முன் அதிகாரத்தில் விவரித்தோம். ஆயினும் விவசாயத் தொழிலுக்குரிய அநேக சங்கதிகளின் முகாந்தரங்களைத் தீர அறிந்துகொள்ளுவதற்குப் பயிர்வகைகள் எவ்விதமாய் வளர்கின்றன என்றும் அவைகளின் மூலப்பொருள்கள் யாவை என்றும் கொஞ்சம் தெரிந்துகொள்ளுவது அவசியம்.      குடியானவன் நிலத்தில் விதை விதைத்தபிறகு தானியத்தையும் இதர மகசூலையும் தகுந்த பிரதிபலனாக ஏரளாமாய் அடையும்பொருட்டு, பூமியில் முளைக்கிற பயிர்கள் மிக்க வீரியத்துடனும் செழிப்பாயும் வளரச்செய்வது அவன் கருத்தாயிருக்கிறது. இவ்வெண்ணம் […]

September 20, 2017 editor news
தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 1 தொடர்

தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 1

       தென் மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் முக்கியமானது தென்பெண்ணை. இது, கர்நாடக மாநிலம், சிக்கபல்லபூர் மாவட்டம் நந்தி மலையில் உற்பத்தியாகிறது. 112 கி.மீ., பயணம் செய்து, சிங்க சாதனப்பள்ளி வழியாக, தமிழக எல்லைக்குள் நுழைகிறது. பின், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில், 320 கி.மீ., பயணித்து, கடலூரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.         இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 கி.மீ2 ஆகும்.       […]

September 19, 2017 editor news
விவசாய நூல் – மூன்றாம் அதிகாரம் தொடர்

விவசாய நூல் – மூன்றாம் அதிகாரம்

விவசாயத்திற்குரிய காலதேச நிலைமைகள்: ’மாரியல்லது காரியமில்லை.’ விவசாயி தொழில்களை நிர்ணயிக்கின்ற முக்கியமான நிலைமைகள் மூன்று. அவை மண்ணின் குணாகுணம், சீதோஷ்ணஸ்திதி, நிலத்தின் ஸ்தானம். அதாவது தானியங்கள் வெகுவாய் விற்பனையாகும் சந்தையைநோக்கி எவ்வாறு நிலம் இருக்கின்றது என்பது. ஆயினும், இவ்வதிகாரத்தின் தலைப்பிற கூறிய பழமொழிபோன்ற மற்ற பழமொழி வசனங்களால் மழையின் பெருமையும் தெளிவாகும். பண்ணை இருக்கும் இடத்தைக் குறித்துச் சொல்லுங்கால் ஏற்கனவே முகவுரையில் விவரித்தபடி பெரிய நகர்களின் அருகே தோட்டக் விவசாயமும் பாற் விவசாயமும் சாதாரணமாய் லாபகரமானவை, ஜனத்தொகை […]

September 13, 2017 editor news
விவசாய நூல் – இரண்டாம் அதிகாரம்! தொடர்

விவசாய நூல் – இரண்டாம் அதிகாரம்!

பண்ணைநிலமும் சாகுபடிக்குரிய முயற்சியும். (1)அண்டை நிலத்தையும் அயல் மனையையும் கைவிடாதே. (2)கச்ச நிலமானாலும் கை சேர்க்கை. (3)புன்செயிற் புதிது நன்செயிற் பழையது. (4)அடைப்பில்லாக் காடும் விடுப்பில்லா ஏரும்.      ஒரு குடியானவன் அநுபவித்துவரும் பூமியின் விஸ்தீரணம் பண்ணை நிலமென்று சொல்லப்படும். அவனுக்குச் சொந்தமான நிலம் முழுவதும் ஒரே அடைப்பில் இருப்பது மிக அநுகூலம். எவ்வளவுக்கெவ்வளவு அவன் வீடு தன் நிலத்துக்கருகில் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவனுக்கு நலந்தான். இந்நாட்டில் வசிக்கும் குடிகள் கிராமாந்தரங்களில் ஒருமிக்கக் கும்பலாகக் குடியிருப்பதைவிட, […]

September 6, 2017 editor news
விவசாய  நூல் – முதல் அதிகாரம் தொடர்

விவசாய நூல் – முதல் அதிகாரம்

முகவுரை. வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும் ஒதுவா ரெல்லாரு முழுவார் தந் தலைக்கடைக்கே கோதைவேன் மன்னவர்தங் குடைவளமுங் கொழுவளமே ஆதலால் இவர்பெருமை யார்உரைக்க வல்லாரே. (கம்பர்)     கிருஷி(விவசாயம்) என்கிற பதத்திற்குப் பூமியைப் பண்படுத்திப் பயிரிடுதலென்பதே சரியான பொருள். ஆயினும், சாதாரணமாய் அப்பதம் பிராணி சம்பந்தமாயும், தாவர சம்பந்தமாயும், நிலத்திலிருந்து நேராகவோ வேறு எவ்விதமாகவோ நாம் அடையக்கூடிய பொருள்களை உண்டாக்குவதற்கு அவசியமான சாதனங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதாகவே வழங்கப்படுகிறது. நிலத்திலே வளரும் பயிர் வகைகளும் […]

August 30, 2017 editor news
அக்ரிசக்தி – விவசாயம் வாசகர்களுக்கு புதிய பரிசு தொடர்

அக்ரிசக்தி – விவசாயம் வாசகர்களுக்கு புதிய பரிசு

1907 ல் பென்சன் துரை என்பவர் எழுதி அதை தமிழுக்கு இராமசுவாமி அய்யர் என்பவரால் மொழி மாற்றம் செய்யப்பட்டு அச்சிடப்பட்ட விவசாய நூல் எனும் இந்த நூல் வரும் புதன் அன்று அக்ரிசக்தி – விவசாயம் தளத்தில் தொடராக வெளிவருகிறது. இந்தப் பகுதியில் உங்கள் சந்தேகங்களை எவ்வப்போது கேட்கலாம்

August 28, 2017 Editor
ஹைட்ரோகார்பன்  திட்டம் சாதகம்/பாதகம் – 01 தொடர்

ஹைட்ரோகார்பன் திட்டம் சாதகம்/பாதகம் – 01

ஹைட்ரோகார்பன் என்பது தீப்பற்றி எரியக்கூடிய தன்மை கொண்ட நீரகக்கரிமங்களே. இயற்கை எரிபொருட்களான பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவற்றில் காணப்படும் முதன்மைக்கூறு ஹைட்ரோகார்பனே. திரவநிலையில் பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரோகார்பன் பெட்ரோலியம் அல்லது கனிம எண்ணெய் என்றழைக்கப்படுகிறது. அதேபோல வாயு நிலையில் பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரோகார்பன் இயற்கை எரிவாயு என்றழைக்கப்படுகிறது.  பாறைப் படிம எரிவாயு (ஷேல் காஸ்) போன்ற எரிவாயுக்கள் மூலம் மரப சார ஆதாரங்களில் இருந்து கிடைக்கும். எரிசக்தி நுகர்வில் இந்தியா உலகின் மூன்றாவது நாடாக இருக்கிறது. இந்தியாவில் எரிசக்திகளுக்கான ஆதாரம் […]

July 30, 2017 Editor