32°C

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்

இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி..! இயற்கை விவசாயம்

இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி..!

ஏக்கருக்கு 5 டிப்பர் எருவைக் கொட்டி களைத்து, ஐந்து சால் உழவு செய்து மண்ணைப் பொல பொலப்பாக மாற்றி 5 அடி இடைவெளியில் வாய்க்கால்களை அமைத்துக் கொள்ள வேண்டும். வாய்க்காலின் மையப்பகுதியில் 3 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழிகளை எடுத்து, ஒரு வாரம் ஆறவிட்டு.. ஒவ்வொரு குழியிலும் அரைக் கூடை எருவையும், மேல் மண்ணையும் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். பிறகு, ஒரு குழிக்கு நான்கு விதைகள் வீதம் ஊன்றிவிட வேண்டும். அசுவினியை […]

November 27, 2016 Editor
கரும்பை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி? இயற்கை விவசாயம்

கரும்பை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி யோசனை ! கரும்பை தாக்கும் பூச்சி வகைகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஆசைத் தம்பி கூறியதாவது: இந்தியாவில் விளையும் முக்கிய பணப்பயிர்களில் கரும்பு முக்கிய பங்கு வகிப்பதுடன், இந்திய பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளவில், 60 சதவீதம் அளவுக்கு சர்க்கரை கரும்பில் இருந்து தான் பெறப்படுகிறது. கரும்பு உற்பத்தி மற்றும் சர்க்கரை கட்டுமானத்தை குறைக்கும் காரணிகளில் பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், […]

November 5, 2016 Editor
வெண்டை சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

வெண்டை சாகுபடி செய்யும் முறை

வெண்டைக்கு வைகாசி, ஆனி, ஆடி ஆகிய பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த 75 சென்ட் நிலத்தைச் சட்டிக்கலப்பையால் உழுது, இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழவு செய்து 150 அடி நீளம், 4 அடி அகலம், 2 அடி உயரம் என்ற அளவில் பாத்தி எடுக்க வேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி 2 அடி இருக்க வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொறுத்து நீளத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். 15 டன் தொழுவுரம், 400 கிலோ […]

October 5, 2016 Editor
இயற்கை முறை பந்தல் சாகுபடி இயற்கை விவசாயம்

இயற்கை முறை பந்தல் சாகுபடி

இயற்கை முறையில் பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விதம் குறித்து பந்தல் சாகுபடியில் நெடிய அனுபவம் வாய்ந்த கேத்தனூர் பழனிச்சாமியிடம் கேட்டோம். புடலையில் பீர்க்கனை சேர்த்து சாகுபடி செய்றது சரியான முறையில்லை. பீர்க்கனுக்கு அடி சாம்பல், மேல் சாம்பல், வைரஸ்னு பல பிரச்சனை வரும். அது பக்கத்து பயிரையும் பாதிச்சுடும். அதனால பந்தல்ல தனியா ஒரு மூலையில பீர்க்கன் சாகுபடி செய்றதுதான் சரியான முறை. வைரஸ் நோய்க்கு 250 மில்லி புளிச்ச மோர், 100 கிராம் சூடோமோனஸ், […]

September 15, 2016 Editor
உயர்வுக்கு வழிவகுக்கும் இயற்கை பண்ணையம் இயற்கை விவசாயம்

உயர்வுக்கு வழிவகுக்கும் இயற்கை பண்ணையம்

படிக்கவேண்டும், படித்து முடித்து நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்த்து செட்டிலாக வேண்டும் என்பதுதான் இன்றைய இளைஞர்களின் கனவு, குறிக்கோள் எல்லாமே. ஆனால் விவசாயத்தில் பட்டம் பெற்று சென்னையில் உலகத்தரமான தனியார் பள்ளியொன்றில் நல்ல ஊதியம் பெற்று வந்த இளைஞர் ஒருவர் அதையெல்லாம் ஒரேநாளில் உதறித் தள்ளிவிட்டு விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டு களமிறங்கி, அதிலும் முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வெற்றிமேல் வெற்றி பெற்று வருகிறார். அந்த சாதனை இளைஞரின் பெயர் கு.ஜெயக்குமார். […]

September 12, 2016 Editor
பசுமைக்குடில் தொழில்நுட்பம் இயற்கை விவசாயம்

பசுமைக்குடில் தொழில்நுட்பம்

இன்று எங்கு பார்த்தாலும் பசுமைக்குடில் மூலம் விவசாயம் நடக்கிறது. வருடம் முழுவதும் காய்கறிகள், காளான் வளர்ப்பு, நாற்று உற்பத்தி செய்து சம்பாதிக்கின்றனர். அது பற்றி அறிவோம். எதையும் உயர்த்திட, தரமான தொழில்நுட்பம் தேவை. கிணற்றில் நீர் இறைக்க மாட்டை பயன்படுத்தினர். மோட்டார் தொழில்நுட்பம் வந்து 300 அடிகளில் இருந்து கூட நீரை இறைத்து விவசாயம் செய்கின்றனர். அப்படிப்பட்ட தொழில்நுட்பம் தான் பசுமை கூடாச விவசாயம் ஆகும். 90 முதல் 95% பயிர்கள் வயல்வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் வருடம் […]

September 12, 2016 Editor
பனிவரகு சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

பனிவரகு சாகுபடி செய்யும் முறை

பனி வரகு, அனைத்து மண்ணிலும் வளரும். சாகுபடி நிலத்தை, புழுதி பறக்க மூன்று முறை கோடை உழவு செய்ய வேண்டும். கார்த்திகைப் பட்டத்தில் கிடைக்கும். மழையில் மண் ஈரத்தன்மையோடு இருக்கும். தொடர்ந்து மீண்டும் ஒரு முறை உழவு செய்து மண்ணைப் புரட்டி போடவேண்டும். அரை ஏக்கர் நிலத்துக்கு 4 கிலோ விதையை விதைத்து உழவு செய்ய வேண்டும். வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. தேவையைப் பொறுத்து ஒரு களை எடுக்கலாம். மார்கழிப் பனியில் நன்றாக வளர்ந்து வந்து […]

September 1, 2016 Editor
குள்ளகார் சாகுபடி நுட்பங்கள் இயற்கை விவசாயம்

குள்ளகார் சாகுபடி நுட்பங்கள்

ஒரு ஏக்கர் நிலத்தில் குள்ளகார் சாகுபடி செய்யும் முறை பற்றி காண்போம். குள்ளகார் 100 நாள் பயிர். அனைத்து வகையான மண்ணிலும் விளையும். இது குறுவை பட்டத்துக்கு ஏற்றது. மோட்டா ரகம். பயிர் 4 அடி உயரம் வளரும். ஒரு ஏக்கர் நிலத்தில், ஒற்றை நாற்று முறையில் குள்ளகார் சாகுபடி செய்ய 8 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலில் மண் தெரியாத அளவுக்கு உளுந்து, பச்சைப்பயறு சக்கைகள், வேம்பு, புங்கன் இலைகள் ஆகியவற்றை பரவலாகப் […]

September 1, 2016 Editor
புடலை மற்றும் பீர்க்கன் சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

புடலை மற்றும் பீர்க்கன் சாகுபடி செய்யும் முறை

ஒரு ஏக்கர் நிலத்தில் புடலை, பீர்க்கன் சாகுபடி செய்யும் விதம் பற்றி காண்போம். புடலை, வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் வளரும். வீரிய ரக புடலைக்கு பட்டம் தேவையில்லை. புடலை வயது 160 நாட்கள், பீர்க்கன் வயது 180 நாட்கள், இவற்றை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். தொழுவுரம் கொட்டி, உழவு செய்து தயாராக உள்ள, 6 அடி இடைவெளியில் ஓர் அடி அகலத்தில் நீளமான பார் எடுத்துக்கொள்ள வேண்டும். பாரின் மத்தியில் ஓர் அடிக்கு ஒரு […]

August 30, 2016 Editor
வெள்ளைப் பொன்னி ரகநெல் சாகுபடி செய்யும் முறை! இயற்கை உரம்

வெள்ளைப் பொன்னி ரகநெல் சாகுபடி செய்யும் முறை!

ஒரு ஏக்கர் நிலத்தில் வெள்ளைப் பொன்னி ரக நெல்லை எப்படி சாகுபடி செய்வது என்று பார்ப்போம். மண்ணை வளமாக்க தக்கைப்பூண்டு..! மண்வளம் குறைந்த நிலத்திலும் பாரம்பர்ய ரக நெல் வகைகள் வளரும் தன்மை கொண்டவை. வெள்ளைப் பொன்னிக்கு ஆடிப் பட்டமும், மாசிப் பட்டமும் ஏற்றவை. இதன் வயது 135 முதல் 150 நாட்கள். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு சால் உழவு ஓட்டி மூன்று நாட்கள் காயவிட்டு.. 15 கிலோ தக்கைப்பூண்டு விதையை விதைத்து, […]

August 18, 2016 Editor