32°C

விலங்குகள்

பிரேசில் மக்கள் விரும்பும் இந்திய மாடுகள் விலங்குகள்

பிரேசில் மக்கள் விரும்பும் இந்திய மாடுகள்

நம் மக்கள் மட்டும் தான் வெளிநாட்டு கலப்பின மாடுகளை விரும்புகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா.? வெளிநாட்டினரும் அதே மோகத்தில் தான் உள்ளனர். அதிலும் குறிப்பாக அதிக பால், நல்ல இறைச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக நம் இந்திய நாட்டு மாடுகளின் கலப்பினங்களை அதிகளவில் விரும்புகின்றனர். அப்படிப்பட்ட ஆர்வத்தில் பிரேசில் மக்களால் உருவாக்கப்பட்டது தான் குஷெரா (Guzera) மாடுகள். இந்தியாவைச் சேர்ந்த கேங்கிரெஜ் (Kankrej) மாடுகளையும், பிரேசிலின் நாட்டு மாடுகளான டாரைன் கிரையுலா (Taurine Crioulo)-வையும் இணைத்து […]

July 13, 2023 vanathi
செம்மறி ஆட்டுக்குட்டிகளை போன்று தோற்றமளிக்கும் பெட்லிங்டன் டெரியர் நாய்கள் விலங்குகள்

செம்மறி ஆட்டுக்குட்டிகளை போன்று தோற்றமளிக்கும் பெட்லிங்டன் டெரியர் நாய்கள்

வடகிழக்கு இங்கிலாந்தின் நார்த்அம்பர்லான்ட் நகரத்திலுள்ள, பெட்லிங்டன் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட நாய்கள் இவை. இதன் காரணமாகவே இவற்றை பெட்லிங்டன் டெரியர் (Bedlington Terrier) என்று அழைக்கின்றனர். அப்பகுதியிலுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் இந்நாய்களை விரும்பி வளர்த்து வந்துள்ளனர். முதன் முதலில் இந் நாய்களை ஜிப்ஸி நாய்கள் என்றே அழைத்துள்ளனர். அதன் பின்னர் இங்கிலாந்தின் ரோத்பரி நகர பிரபு இந்நாய்களை மிகவும் விரும்பி வளர்த்ததால்,  இவற்றை ரோத்பரி டெரியர் என்று அழைத்தனர். இவை பார்ப்பதற்கு செம்மறி ஆட்டுக்குட்டியை போன்று தோற்றமளிப்பதால் இவற்றிற்கு ரோத்பரியின் […]

April 28, 2023 vanathi
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பிரம்மன் மாடுகள் விலங்குகள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பிரம்மன் மாடுகள்

அமெரிக்காவில் 1885 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கலப்பின மாடுகள் இவை. இந்தியாவை சேர்ந்த கிர், குசரெத், நெல்லூர் மற்றும் கிருஷ்ணா பள்ளத்தாக்கு நாட்டு மாடுகளை, அமெரிக்க மாடுகளோடு இணைத்து இந்த கலப்பின மாடுகளை உருவாக்கியுள்ளனர். இப்பொழுதும் அமெரிக்க ஹியர்போர்டு மற்றும் குட்டை கொம்பு மாடுகளோடு கலப்பினம் செய்தே அதிக சக்தி வாய்ந்த அமெரிக்க பிரம்மன் மாடுகளை (American Brahman) உருவாக்கி வருகின்றனர். அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா மற்றும் பிரேசிலுக்கும் இந்த மாடுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பிரம்மன் மாடுகள் அதிக […]

April 11, 2023 Editor
நியாபாலிடன் மஸ்டீஃப் விலங்குகள்

நியாபாலிடன் மஸ்டீஃப்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் வாழ்ந்த காவல் நாய்களின் வழித்தோன்றல்கள் இவை. இந்நாய்களுக்கு மஸ்டினோ நெப்போலிடனோ (Mastino Nepalitano) என்றொரு பெயரும் உண்டு. செல்லமாக மஸ்டினோ அல்லது நியோ மஸ்டீஃப் என்று அழைக்கின்றனர். பேரரசர் அலெக்ஸாண்டரின் செல்ல நாயான பெரிற்றா, நியாபாலிடன் மஸ்டீஃப்  (Neapolitan Mastiff) இனத்தை சார்ந்தது தான் என்று கூறுகின்றனர். உருவமைப்பு மஸ்டிப் வகையை சேர்ந்த இந்நாய்கள் 65 முதல் 75 செ. மீ உயரமும், 60 முதல் 70 கிலோ எடையும் கொண்டவையாக […]

April 1, 2023 vanathi
ஸ்காட்டிஷ் மடிப்பு பூனைகள் உருவான சுவாரஸ்ய வரலாறு விலங்குகள்

ஸ்காட்டிஷ் மடிப்பு பூனைகள் உருவான சுவாரஸ்ய வரலாறு

இன்று உலகிலுள்ள அனைத்து ஸ்காட்டிஷ் மடிப்பு பூனைகளும் (Scottish Fold Cat), சூசி என்னும் ஒரே பூனையின் வழித்தோன்றல்கள் தான். 1961 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் ராஸ் என்பவர், தன்னுடைய அண்டை வீட்டுக்காரரின் பண்ணையிலிருந்து மடிந்த காதுடன் கூடிய வித்தியாசமான ஒரு பூனையை கண்டுபிடித்தார். சூசி என்று பெயரிடப்பட்ட அப்பூனை பிரிட்டிஷ் குட்டை முடி (British Short Hair) பூனையுடன் இணை சேர்ந்து, மடிப்பு காதுடன் கூடிய குட்டிகளை ஈன்றது. மடிந்த காதுகளுடன் […]

March 28, 2023 vanathi
பிராய்லர் கோழியை போன்று வேகமாக வளரும் சபோல்க் செம்மறியாடுகள் விலங்குகள்

பிராய்லர் கோழியை போன்று வேகமாக வளரும் சபோல்க் செம்மறியாடுகள்

பிரிட்டனைச் சேர்ந்த கருப்பு முகத்துடன் கூடிய நார்போல்க் ஹார்ன் (Norfolk Horn) பெண் செம்மறியாட்டினையும், சிறிய பிரிட்டிஷ் வகை சௌத்டௌன் (SouthDown) ஆண் செம்மறியாட்டினையும் இணைத்து உருவாக்கப்பட்ட கலப்பின ஆடுகள் தான் இவை.18 ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதியில் இங்கிலாந்தின் சபோல்க் பகுதியில் இந்த செம்மறியாடுகள் உருவாக்கப்பட்டன. 1810 ஆம் ஆண்டு இவை தனி இனமாக அங்கீகரிக்கப்பட்டன. 1797 ஆம் ஆண்டிலிருந்து தான் இவற்றை சபோல்க் செம்மறியாடுகள் (Suffolk Sheep) என்று அழைக்கின்றனர். அதற்கு முன்னர் பிளாக்ஃபேசஸ் […]

March 27, 2023 vanathi
தமிழக நாட்டு நாய்கள் இனத்தைச் சேர்ந்த அயர்லாந்து நாய் – ஐரிஷ் வுல்ஃப் ஹௌண்ட் விலங்குகள்

தமிழக நாட்டு நாய்கள் இனத்தைச் சேர்ந்த அயர்லாந்து நாய் – ஐரிஷ் வுல்ஃப் ஹௌண்ட்

அயர்லாந்து நாட்டை பூர்வீகமாகக் கொண்ட நாய் இனம் இது. அங்குள்ள மக்கள் ஓநாய், மான், கரடி போன்றவற்றை வேட்டையாடுவதற்காக ஐரிஷ் வுல்ஃப் ஹௌண்ட் நாய்களை (Irish wolf Hound) பயன்படுத்தியுள்ளனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு வரை அயர்லாந்து ராணுவத்தில் 300 ஐரிஷ் வுல்ஃப் ஹௌண்ட் நாய்கள் பணியில் இருந்துள்ளன. இவை சைட் ஹௌண்ட் (Sight Hound) இனத்தைச் சார்ந்த நாய்களாகும். நம்மூர் நாட்டு நாய்களான சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் அனைத்துமே சைட் […]

March 22, 2023 vanathi
ஐரோப்பிய காடுகளில் அன்னிய ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ள வளையவால் கோட்டிகள் விலங்குகள்

ஐரோப்பிய காடுகளில் அன்னிய ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ள வளையவால் கோட்டிகள்

ரக்கூன் குடும்பத்தை சார்ந்த இந்த விலங்குகளை தென் அமெரிக்க கோட்டிகள் என்றும் அழைக்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் நேசுவா நேசுவா (Nasua nasua). இவை தென் அமெரிக்க கண்டத்திலுள்ள நாடுகளான கொலம்பியா, கயானா, உருகுவே, அர்ஜென்டினா, ஈக்வடார், பொலிவியா, பராகுவே, பெரு, சூரினேம் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் பரவலாக வாழ்கின்றன. அங்குள்ள வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பசுமை மாறா காடுகள், இலையுதிர் காடுகள், வறண்ட புதர் காடுகளில் நாம் இவற்றை பார்க்கலாம். அனைத்துண்ணிகளான வளையவால் […]

March 20, 2023 vanathi
மாலுமிகளுடன் உலகம் சுற்றிய பொம்மை நாய்கள் விலங்குகள்

மாலுமிகளுடன் உலகம் சுற்றிய பொம்மை நாய்கள்

பஞ்சுப் பொதி போன்றிருக்கும் இந்த அழகிய குட்டி நாய்கள், பிஷான் வகையைச் சேர்ந்தவை. இவை 13ம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளிலுள்ள ராஜகுடும்பத்தினரின் செல்லப்பிராணியாக இருந்து வந்துள்ளன. அத்துடன் ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை இவை மிகவும் பிரபலமான சர்க்கஸ் நாய்களாகும்.                 பிஷான் என்றால் குட்டி நாய் என்றும், ஃபிரீசே என்றால் சுருட்டையான முடி என்றும் பொருள். இந்நாய்களின் சுருட்டையான முடியின் காரணமாக இவற்றை பிஷான் ஃபிரீசே (Bichon […]

March 20, 2023 vanathi
நான்கு கொம்புகளை கொண்ட செம்மறியாடுகள் விலங்குகள்

நான்கு கொம்புகளை கொண்ட செம்மறியாடுகள்

கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் வெள்ளை நிற திட்டுக்களுடன், கண்ணைக்கவரும் அழகோடு காணப்படும் இந்த செம்மறியாடுகள் பிரிட்டனை பூர்வீகமாகக் கொண்டவை. 350 ஆண்டுகளுக்கும் மேலாக இவை அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன. ஜேக்கப் செம்மறியாடுகள் பெரும்பாலும் நான்கு கொம்புகளை கொண்டவையாக இருக்கும். ஆண் பெண் இரு ஆடுகளுக்கும் கொம்புகள் உண்டு. பைபிளை (பழைய ஏற்பாடு) பின்பற்றியே இவற்றை ஜேக்கப் செம்மறியாடுகள் என்று அழைக்கின்றனர். பைபிளில் ஜேக்கப் மெசபடோமியாவிலிருந்து எகிப்திற்கு செல்லும் போது தன்னுடன் கருப்பு வெள்ளை திட்டுக்களுடன் கூடிய […]

March 13, 2023 vanathi