32°C

பறவைகள்

தாவரங்களை மட்டும் உண்ணும் மெகல்லன் வாத்துக்கள் செய்திகள்

தாவரங்களை மட்டும் உண்ணும் மெகல்லன் வாத்துக்கள்

சிலி, அர்ஜென்டினா மற்றும் போல்க் லேண்ட் தீவுகளின் புற்கள் நிறைந்த பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக மெகல்லன் வாத்துக்கள் வாழ்கின்றன. இவற்றிற்கு மேட்டு நில வாத்து (Upland Goose) என்றொரு பெயரும் உண்டு. இவற்றின் விலங்கியல் பெயர்  குளோயிபேகா பிக்டா (Chloephaga picta). இவை ஆறு, கடல் மற்றும் குளங்களின் அருகே தங்கள் கூடுகளை அமைக்கின்றன. இவ்வகை வாத்துக்களில் ஆண், பெண் வேறுபாட்டினை மிக தெளிவாக காண இயலும். ஆண் வாத்துக்களின் தலை மற்றும் மார்பு பகுதி […]

June 30, 2023 vanathi
மரத்தவளையை போன்று குரலெழுப்பும் அமேசான் பறவை- பாம்படார் கோட்டிங்கா பறவைகள்

மரத்தவளையை போன்று குரலெழுப்பும் அமேசான் பறவை- பாம்படார் கோட்டிங்கா

கோட்டிங்கிடே குடும்பத்தைச் சார்ந்த இந்த அழகிய பறவைகள், அமேசான் மழைக்காடுகளில் வாழ்கின்றன. தென் அமெரிக்க கண்டத்திலுள்ள பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, கயானா, சூரிநேம் ஆகிய நாடுகளில் இந்த பாம்படார் கோட்டிங்கா (Pampadour Cotinga) பறவைகளை பரவலாக காண முடியும். இவற்றின் விலங்கியல் பெயர் சைஃபோலினா புனிசியா (Xipholena punicea), 1764 ஆம் ஆண்டு டச்சு இயற்கை ஆர்வலர் ஆட்ரியன் விராக் என்பவர், முதன் முதலில் இப்பறவைகளை ஆவணப்படுத்தினார். மனித நடமாட்டம் அதிகமில்லாத பகுதிகளில் உள்ள, மரங்களின் […]

April 18, 2023 vanathi
பறவை பேருயிர் – நெருப்புக் கோழி பறவைகள்

பறவை பேருயிர் – நெருப்புக் கோழி

விலங்கு வகைகளில் பேருயிர் என்று யானைகளை கூறுவது போல, பறவைகளில் பேருயிர் என்று பார்த்தால் அவை நெருப்புக் கோழிகள்(Ostrich) தான். இன்று உலகில் வாழும் பறவைகளில் மிகப்பெரியவை இவை மட்டும் தான். மிகப்பெரிய கண்களை கொண்டுள்ள தரைவாழ் உயிரினமும் இவையே. மிகப்பெரிய முட்டையை (1500 கிராம்) இடும் பறவைகளும் இவையே. விலங்குகளைப் போல வண்டியிழுக்க பயன்படுத்தப்பட்ட ஒரே பறவையினமும் இவைதான்.               நெருப்புக் கோழிகள் மணிக்கு 55 முதல் […]

April 7, 2023 Editor
மான்டைரோவின் இருவாச்சி பறவைகள்

மான்டைரோவின் இருவாச்சி

ஆப்பிரிக்க கண்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடுகளான நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளின் வறண்ட புல்வெளிகள் மற்றும் பாறைப்பகுதிகளில் பரவலாக வாழும் பறவை இது. அங்கோலாவில் இப்பறவைகளை கண்டறிய உதவிய சுரங்க பொறியாளர் ஜோஅகீம் மான்டைரோ பெயராலேயே, இப்பறவைகள் மான்டைரோவின் இருவாச்சி (Monteiro’s Hornbill) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலங்கியல் பெயர் டோக்கஸ் மான்டைரி (Tockus monteiri).   உருவமைப்பு மான்டைரோவின் இருவாச்சிகளில் ஆண் பறவைகளை விட பெண் பறவைகள் சிறியவையாக இருக்கும். பொதுவாக வளர்ந்த பறவைகள் […]

April 1, 2023 vanathi
நீலக்காது நெடுவால் வண்ணக்கோழி பறவைகள்

நீலக்காது நெடுவால் வண்ணக்கோழி

திபெத் மற்றும் மத்திய சீன பகுதிகளிலுள்ள, ஊசியிலை காடுகள் மற்றும் இலையுதிர் காடுகள் நிறைந்த மலைச்சரிவுகளில் (11,500 அடி) இப்பறவைகள் வாழ்கின்றன. அனைத்துண்ணியான நீலக்காது நெடுவால் வண்ணக்கோழிகள் (Blue Eared Pheasant) பெர்ரி பழங்கள், காய்கள், வேர்கள், கிழங்குகள்,  பூச்சிகள் மற்றும் தரையை மிக வேகமாக கிளறி புழுக்களையும் உண்கின்றன. கோழிகளைப் போலவே இப்பறவைகளும் மிக அத்தியாவசியமான தேவை வந்தால் மட்டுமே சிறிது தூரம் பறக்கின்றன. இந்த வண்ணக்கோழிகளில் ஆண் பறவைகள் உருவத்தில் சிறிது பெரியவையாக இருப்பதோடு, […]

March 24, 2023 vanathi
டிஸ்னி திரைப்படங்களில் வரும் கலிபோர்னிய காடைகள் பறவைகள்

டிஸ்னி திரைப்படங்களில் வரும் கலிபோர்னிய காடைகள்

அழகிய கொண்டை வைத்துள்ள இந்த சிறிய காடைகளை, கலிபோர்னிய பள்ளத்தாக்கு காடை மற்றும் பள்ளத்தாக்கு காடை என்றும் அழைக்கின்றனர். ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை உயிர் வாழும் இக்காடைகளின் விலங்கியல் பெயர்  கேலிபெப்லா கலிபோர்னிகா (Callipepla californica). அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த காடைகள் இப்போது கொலம்பியா, ஹவாய், சிலி, உருகுவே, பிரேசில், அர்ஜென்டினா, பெரு, தென் அமெரிக்கா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலுள்ள சில தீவுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஊசியிலை காடுகள், புதர்காடுகள், புல்வெளிகள், விளைநிலங்கள் மற்றும் […]

March 22, 2023 Editor
டிஸ்னி திரைப்படங்களில் வரும் கலிபோர்னிய காடைகள் பறவைகள்

டிஸ்னி திரைப்படங்களில் வரும் கலிபோர்னிய காடைகள்

டிஸ்னி திரைப்படங்களில் வரும் கலிபோர்னிய காடைகள் அழகிய கொண்டை வைத்துள்ள இந்த சிறிய காடைகளை, கலிபோர்னிய பள்ளத்தாக்கு காடை மற்றும் பள்ளத்தாக்கு காடை என்றும் அழைக்கின்றனர். ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை உயிர் வாழும் இக்காடைகளின் விலங்கியல் பெயர்  கேலிபெப்லா கலிபோர்னிகா (Callipepla californica). அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த காடைகள் இப்போது கொலம்பியா, ஹவாய், சிலி, உருகுவே, பிரேசில், அர்ஜென்டினா, பெரு, தென் அமெரிக்கா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலுள்ள சில தீவுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஊசியிலை […]

March 10, 2023 vanathi
உலகின் மிகப்பெரிய கௌதாரி பறவையினம் – காட்டு கௌதாரி பறவைகள்

உலகின் மிகப்பெரிய கௌதாரி பறவையினம் – காட்டு கௌதாரி

  கௌதாரி இனங்களிலேயே மிகப்பெரியவை இந்த காட்டு கௌதாரிகள் (Wood Grouse) தான். இதனை மேற்கு கேப்பர்கேலி, யுரேஷிய கேப்பர்கேலி, காட்டுச் சேவல் மற்றும் புதர் சேவல் என்று பல பெயர்களால் அழைக்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் டெட்ராவோ உரோகேலிஸ் (Tetrao urogallis) ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டத்தின் வடக்கு பகுதியிலுள்ள ஊசியிலை காடுகளில் பரவலாக காணப்படும் வலசை போகாத பறவை இது. கற்களை தின்னும் விசித்திர பறவை காட்டு கௌதாரிகளின் விருப்பமான உணவு மொட்டுகள், இலைகள், […]

March 6, 2023 Editor
சூரியக் கிளிகள் – மனிதனின் பறவை காதலினால் அழியும் உயிர்கள்..! பறவைகள்

சூரியக் கிளிகள் – மனிதனின் பறவை காதலினால் அழியும் உயிர்கள்..!

வளர்ப்புப் பறவை சந்தையில் சன் கானுயர் (Sun Conure) என்றழைக்கப்படும், பிரபலமான இந்ததங்க நிறப் பறவைகள் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. அமேசான் நதியினை ஒட்டியுள்ள பகுதிகளில் இவை பரவலாக காணப்படுகின்றன… கூண்டுகளில் ஜோடிப் பறவைகளாக அடைபட்டுள்ள சூரியக் கிளிகள் (Sun Parakeet), இயற்கையில் 20 முதல் 30 பறவைகள் இணைந்த கூட்டமாகவே காணப்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா…? 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும் சூரியக் சுற்றுச்சூழல் கிளிகளின் விலங்கியல் பெயர் அரடிங்கா ஸ�ோல்ஸிடலிஸ் […]

January 13, 2023 Editor