32°C

விவசாய கட்டுரைகள்

மண்பானை பாசனம்..! இயற்கை விவசாயம்

மண்பானை பாசனம்..!

தனது பண்ணையில் ஏராளமான மரங்களை நட்டு வைத்துள்ள கண்ணன், அவற்றுக்கு மண் பானை பாசனம் அமைத்துள்ளார். இதைப்பற்றிப் பேசிய கண்ணன், “வேலி ஓரமா இருக்கிற மரங்களுக்கு அடிக்கடி பாசனம் செய்ய முடியாது. அதனால் ஒவ்வொரு செடி பக்கத்திலேயும் அஞ்சு லிட்டர் கொள்ளளவுள்ள மண்பானையைப் புதைத்து வைத்திருக்கிறோம்.. பானையை புதைப்பதற்கு முன்னால், பானைக்கு அடிப்பக்கம் பக்கவாட்டில் சின்னதாக ஒரு துளை போட்டுவிடுவோம். அதோட வாய்ப்பகுதி மட்டும் கொஞ்சம் சாய்வா இருக்கிற மாதிரி புதைத்துவிடுவோம். வாய்க்காலில் தண்ணீர் பாய்ச்சும்போது, பானைக்குள்ளேயும் […]

March 4, 2017 Editor
புதினா சாகுபடி செய்யும் முறை..! கீரை வகைகள்

புதினா சாகுபடி செய்யும் முறை..!

வடிகால் வசதியுடைய செம்மண், மணல் கலந்த செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். தண்ணீர் தேங்கி நிற்கும் நிலம் மற்றும் களிமண் நிலங்களில் இதை சாகுபடி செய்வதைத் தவிர்க்கலாம். இதற்குத் தனியாக பட்டம் இல்லை. அனைத்துப் பட்டங்களிலும் நடவு செய்யலாம். ஒரு முறை நடவு செய்தால், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். முழுக்க, வெயிலோ அல்லது முழுக்க நிழலோ உள்ள இடத்தில் சரியாக வளராது. நிழலும், வெயிலும் கலந்த இடங்களில் மட்டுமே புதினாவை நடவு செய்ய […]

March 1, 2017 Editor
சுழற்சி முறையில் கீரை சாகுபடி..! கீரை வகைகள்

சுழற்சி முறையில் கீரை சாகுபடி..!

”பொதுவாக கீரை சாகுபடிக்குப் பட்டம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம். அதிக மழைப் பொழியும் சமயத்தில் விதைப்பைத் தவிர்க்க வேண்டும். விதைக்கப்போகும் நிலத்தின் அளவை முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை நன்கு உழுது, 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 10 கிலோ வீதம் தொழுவுரத்தைத் தூவி சமப்படுத்த வேண்டும். பிறகு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு கிலோ வீதம் கனஜீவாமிர்தம் இட வேண்டும். ஒவ்வொரு பாத்தியிலும் 100 கிராம் […]

February 20, 2017 Editor
செம்பருத்திச்செடி பராமரிப்பு முறைகள்..! விவசாய கட்டுரைகள்

செம்பருத்திச்செடி பராமரிப்பு முறைகள்..!

அளவான ஊட்டம் கொடுத்தால் போதும் நடவு செய்த இரண்டாம் மாதத்தில் இருந்து, மாதம் ஒருமுறை 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து பாசன நீரில் கலந்து கொடுக்க வேண்டும். செம்பருத்திக்கு அதிக ஊட்டம் கொடுத்தால், இலைகள் சிவப்பு நிறத்துக்கு மாறுவதோடு பூக்கள் பூக்காது. அதனால் அளவாகக் கொடுத்தால் போதுமானது. பருவமழைக்கு முன் கவாத்து கன்று நடவு செய்து இரண்டு […]

February 18, 2017 Editor
திரமி நொதித்த தாவரசாறு தயாரிப்பு இயற்கை உரம்

திரமி நொதித்த தாவரசாறு தயாரிப்பு

நுண்ணூட்டச்சத்து குறைபாடு சரி படுத்துவதற்கான திரமி – நொதித்த தாவரசாறு (TFPE) தேவையானபொருட்கள் : பின்வரும் இலைகள்: (அ) புளிஅல்லது துத்தநாகம், (ஆ) அவரை, செம்பருத்தி, அல்லது வல்லாரை (செம்பு), (இ) கறிவேப்பிலை, முருங்கை இலை, அல்லது வேறு எந்த கீரை இலைகள் (இரும்பு ), (ஈ) எருக்கு (போரான்), (உ)அனைத்து வகையான மலர்கள் (மாலிப்டினம்), (ஊ) துத்தி (கால்சியம்), (எ) எள்அல்லது கடுகு தாவரங்கள் (கந்தகம்), (ஏ) வெண்டை இலை (அயோடின்), (ஐ) லாண்டானா காமரா, […]

February 4, 2017 Editor
15 சென்ட் நிலத்தில் சொட்டுநீர் பாசனத்தில் தக்காளி… இயற்கை விவசாயம்

15 சென்ட் நிலத்தில் சொட்டுநீர் பாசனத்தில் தக்காளி…

தக்காளி சாகுபடி குறித்துக் கூறிய அஜய், ”நிலத்தை நன்றாக உழவு செய்து, அதற்கு மேலே அரையடி உயரத்துக்குத் தென்னைநார் கழிவைப் பரப்பி, ரெண்டரை அடிக்கு ஒரு லேட்ரல் குழாய் அமைச்சோம். சொட்டுநீர்க் குழாயில் துளையிருக்கிற இடத்திற்கு நேராக இரண்டு பக்கமும் விதையை ஊன்றினோம். சொட்டுநீர் மூலமாக பாசனம் செய்யும்போதெல்லாம் ஜீவாமிர்தம் கலந்து கொடுத்தோம். 15 நாளைக்கு ஒருமுறை பஞ்சகவ்யா கொடுத்தோம். காய் பிடிச்ச பிறகு மூணு முறை மீன் அமினோ அமிலம் தெளிச்சோம். செடிகள் காய்ச்சு தள்ளிடுச்சு. […]

January 27, 2017 Editor
உங்களுக்குத் தெரியுமா? வாழையில் ஊடுபயிராக என்னென்ன பயிரிடலாம்..? இயற்கை விவசாயம்

உங்களுக்குத் தெரியுமா? வாழையில் ஊடுபயிராக என்னென்ன பயிரிடலாம்..?

தட்டைப்பயறு சாகுபடி செய்வது நல்ல பலன் கொடுக்கிறது. செடி முருங்கையை ஒரு வரிசை விட்டு ஒரு வரிசை நடவு செய்யலாம். ஊடுபயிராக தர்மபுரி பகுதியில் தக்காளி சாகுபடி செய்வது நடைமுறையில் உள்ளது. முள்ளங்கி, காலி பிளவர், முட்டைகோஸ், மிளகாய், கத்தரி, கருணைக்கிழங்கு, வெண்டை, கீரை, பூசணி செண்டுமல்லி போன்றவைகளை சாகுபடி செய்யலாம். நன்றி என். மதுபாலன், B.sc (Agri), இயற்கை வேளாண்மை ஆலோசகர், தர்மபுரி. மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

January 26, 2017 Editor
பல தானிய விதைப்பு..! விவசாய கட்டுரைகள்

பல தானிய விதைப்பு..!

சிறு தானிய வகை நாட்டுச் சோளம் 1 கிலோ நாட்டு கம்பு ½ கிலோ தினை ¼ கிலோ சாமை ¼ கிலோ குதிரைவாலி ¼ கிலோ பயிறு வகை உளுந்து 1 கிலோ பாசி பயறு 1 கிலோ தட்டைப் பயறு 1 கிலோ கொண்டைக் கடலை 2 கிலோ துவரை 1 கிலோ கொத்தவரை ½ கிலோ நரிப்பயறு ½ கிலோ எண்ணெய் வித்துக்கள் எள் ½ கிலோ நிலக்கடலை 2 கிலோ சூரியகாந்தி […]

January 25, 2017 Editor
கற்பூரம் இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு..! இயற்கை உரம்

கற்பூரம் இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு..!

தேவையானவை : 1. வேப்பெண்ணெய் -100 மில்லி, 2. கோமியம் – ஒரு லிட்டர் , 3. கற்பூரம் – 10 வில்லை 4. சோப்பு தயாரிப்பு முறை : வேப்பெண்ணெய்யை தண்ணீரில் கரையும் நிலைக்கு கொண்டு வந்த பின்னர், சோப்பு கரைசல் வேப்பெண்ணெய்யுடன் கலந்தால் அடுத்த நிலைக்கு அவை வரும். கற்பூரம் தண்ணீரில் கரையாது என்பதால் கரும்பு கழிவுப் பாகில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் கொண்டும் கரைக்கலாம். நெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக […]

January 18, 2017 Editor
பஞ்சகவ்யா தயாரிப்பு இயற்கை உரம்

பஞ்சகவ்யா தயாரிப்பு

1. பசுமாட்டு கோமியம் – 4 லிட்டர் – பயிர் வளர்ச்சிக்கு தேவையான (நைட்ரஜன்) தழைச்சத்துக்கள் 2. பசும்பால் – 3 லிட்டர் – புரதம்,கொழுப்பு, மாவு அமினோஅமிலம், கால்சியம் சத்துக்கள் 3. நன்கு புளித்த தயிர் – 2 லிட்டர் -ஜீரணிக்கத்தக்க செரிமானத் தன்மையை தரவல்ல நுண்ணுயிரிகள் (லேக்டோபேஸில்லஸ்) 4. பசுமாட்டு நெய் – அரை லிட்டர் – வைட்டமின்-ஏ, -வைட்டமின்பி, கால்சியம், கொழுப்புகள் 5. இளநீர் -2 – சைட்டோசைனின் எனும் வளர்ச்சி ஊக்கி […]

January 10, 2017 Editor