32°C

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்

மழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் ! இயற்கை உரம்

மழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் !

மழைக்காலம், பூச்சிகளின் பெருக்கத்துக்கு ஏற்ற உகந்த சூழ்நிலையாக உள்ளது. இந்நிலையில் நெல்லில் இலைச்சுருட்டுப்புழு, இளம் நெற்பயிர், தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களில், இலைகளில் உள்பக்கமாகச் சுருட்டி, உள்ளிருந்து பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். இதனால், பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் தண்டுத் துளைப்பான் தாக்கப்பட்ட பயிர்களில் தண்டுப் பகுதி பல இடங்களில் காய்ந்து காணப்படும். ஒற்றை நாற்று நடவு செய்த நிலங்களில், போதுமான அளவுக்குக் காற்று, சூரிய ஒளி கிடைப்பதால், புகையான் தாக்குதல் குறைவாகவே இருக்கும். ஆனால், […]

July 4, 2016 Editor
பட்டன் ரோஜா சாகுபடி ! இயற்கை விவசாயம்

பட்டன் ரோஜா சாகுபடி !

ஏக்கருக்கு 2,500 செடிகள் ! ”பட்டன் ரோஜா பதியன் (கன்று) ஊன்ற கார்த்திகைப் பட்டம் சிறப்பானது. களியும் மணலும் கலந்த இருமண் பாடு மற்றும் செம்மண் ஆகியவை ஏற்றவை. தேர்வு செய்த சாகுபடி நிலத்தில்.. 3 சால் உழவு ஓட்டி பிறகு, ஏக்கருக்கு 3 டன் மாட்டு எரு இட்டு ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். 8 அடி இடைவெளியில் ஓர் அடி அகலமும் அரையடி உயரமும் கொண்ட நீளமான பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்தியின் […]

July 1, 2016 Editor
எள் சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

எள் சாகுபடி செய்யும் முறை

எள், மணல் கலந்த நிலத்தில் நல்ல மகசூல் கொடுக்கும். நவம்பர், டிசம்பர், மார்ச், ஜூன் ஆகிய மாதங்களில் விதைக்கலாம். அனைத்துப் பட்டங்களுக்கும் விதைக்கக்கூடிய எள் ரகங்களும் இருக்கின்றன. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 2 டன் மாட்டு எருவைத் தூவ வேண்டும். பிறகு, 15 நாட்களுக்குள் இரண்டு உழவு ஓட்ட வேண்டும். நிலம் புழுதியான பிறகு, 10 அடிக்கு 8 அடி அளவில் பாத்தி எடுத்து, பாத்திகளில் எள்ளைத் தூவ வேண்டும். ஏக்கருக்கு அரைகிலோ விதை […]

June 30, 2016 Editor
கோடை உழவுதான் மகசூலுக்கு அடிப்படை ! இயற்கை விவசாயம்

கோடை உழவுதான் மகசூலுக்கு அடிப்படை !

இயற்கை முறையில் சிறுதானியங்களை சாகுபடி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்… “சித்திரை மாத ஆரம்பத்தில் இரண்டு நாள் செம்மறி ஆட்டுக்கிடை போட்டு, ஒரு வாரம் நிலத்தைக் காயவிட வேண்டும். பிறகு கோடை உழவு அடிக்க வேண்டும். கோடை உழவு அடிப்பதால் மண் இறுக்கம் நீங்கி பொலபொலப்பாக மாறி விடும். இதனால், மழை பெய்யும்போது நிலத்தில் விழும் மழை நீர் ஆவியாகாமல் தடுக்கப்படுவதோடு மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும். மண் இறுகலாக இருந்தால் மகசூல் குறையும். உளுந்து வைகாசி […]

June 29, 2016 Editor
உளுந்து சாகுபடி இயற்கை விவசாயம்

உளுந்து சாகுபடி

ஏக்கருக்கு 5 கிலோ விதை “உளுந்தை அனைத்துப் பட்டத்திலும் விதைக்கலாம். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை உழுது இரண்டு நாட்கள் காய விட வேண்டும். 200 கிலோ சலித்த சாணத்தூளுடன், 20 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரைச் சேர்த்து பிசைந்து ஒரு நாள் முழுவதும் நிழலில் காய வைத்து அதை நிலத்தில் கொட்டிக் கலைத்து ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு, வசதிக்கேற்றவாறு பாத்திகள், வாய்க்கால்கள் அமைத்து, 5 கிலோ உளுந்தை உழவு ஓட்டிக்கொண்டே விதைக்க வேண்டும். […]

June 28, 2016 Editor
எலுமிச்சை சாகுபடி இயற்கை விவசாயம்

எலுமிச்சை சாகுபடி

ஒரு ஏக்கர் நடவு செய்ய 200 நாற்றுகள் தேவைப்படும். தற்போது ஒரு நாற்று 120 ரூபாய் விலையில் கிடைக்கிறது. 15 அடி இடைவெளியில் 1 கன அடி அளவுக்கு குழிகள் எடுக்க வேண்டும். கட்டிகள் இல்லாத செம்மண் மற்றும் தொழுஉரம் இரண்டையும் சரிசமமாக கலந்து முக்கால் அடி  அளவுக்கு குழிக்குள் கொட்ட வேண்டும். பிறகு, நாற்றுகள் உள்ள பைகளின் அடிப்பகுதியை கிழித்துவிட்டு, நடவு செய்து மேல் மண்ணைக் கொண்டு குழிகளை மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதிகாலை […]

June 25, 2016 Editor
மணத்தக்காளி சாகுபடி இயற்கை விவசாயம்

மணத்தக்காளி சாகுபடி

மணத்தக்காளி விதைக்காக அலையத் தேவையில்லை. சில செடிகளை அறுக்காமல் விட்டால், காய் பிடித்து, பழம் வைக்கும். அந்தப் பழங்களைப் பறித்து, விதைகளை எடுத்து, சாம்பலில் புரட்டி காய வைத்து, பயன்படுத்தலாம். மணத்தக்காளி, களர்நிலம் தவிர மற்ற அனைத்து வகை மண்ணிலும் வளரும். செம்மண் மற்றும் மணல் கலந்த செம்மண் நிலங்களில் சிறப்பாக வளரும். சாகுபடிக்கு தனியாக பட்டம் இல்லை. ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். நிலத்தை புழுதியாக உழவு செய்து, 8 அடிக்கு 8 அடி இடைவெளியில் […]

June 23, 2016 Editor
இயற்கை முறையில் இஞ்சி சாகுபடி இயற்கை விவசாயம்

இயற்கை முறையில் இஞ்சி சாகுபடி

கேரளா மாநிலத்திலத்தில் கள்ளிக்கட்டு மாவட்டத்தில் உள்ள செம்பனோடா கிராமத்தில் இருக்கும் Mrs.OmanaKaithakkulath என்ற பெண்மணியை Ginger Woman’ என்று அழைக்கின்றனர். இவர் அவருடைய நிலத்தில் இஞ்சியை பயிரிட்டு வருகிறார். இவர் கடந்த நான்கு வருடங்களாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ICAR-KrishiVigyan Kendra தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இவர் இஞ்சி விவசாயத்தை இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார். இதற்கென்று செயற்கை உரங்களை பயன்படுத்துவதில்லை. அவர் நிலத்தில் தென்னை நார்க்கழிவு, கால்நடைகள் சாணம் ஆகியவற்றை உரமாகப் பயன்படுத்தி […]

May 25, 2016 Editor
நீர்க்கட்டி நூற்புழு இயற்கை விவசாயம்

நீர்க்கட்டி நூற்புழு

சோயா பீன்ஸின் முதல் எதிரியாக இருப்பது நீர்க்கட்டி நூற்புழு இது தாவரத்தின் வேர்களை உணவாக உட்கொள்கிறது. இதனால் வேர் வளர்ச்சி தடைப்படுகிறது. இந்த நோயின் பாதிப்பால் அயோவா மாகாணத்தில் சோயா பீன்ஸ் உற்பத்தி அதிக அளவிற்கு பாதிப்படைந்துள்ளது. இந்த புழுக்களின் பாதிப்பு பெரும்பாலும் ஈரமான மண் மற்றும் குளிர் காலநிலையினால் அதிகம் ஏற்படுகிறது. இந்த நோய் பாதிப்பிலிருந்து சோயவை பாதுகாக்க மண் பரிசோதனை அவசியம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட பூச்சியியல் வல்லுநர் ஆடம் […]

May 18, 2016 Editor
தக்காளி வளர்ச்சிக்கு உதவும் புல்தரைகள் இயற்கை விவசாயம்

தக்காளி வளர்ச்சிக்கு உதவும் புல்தரைகள்

ஜப்பானிஸ் ஆராய்ச்சி குழு தக்காளி  வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஆற்றலை பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் பச்சை புல்தரைகள் தக்காளி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள கோபே  பல்கலைக்கழகத்தின் Kunishima Mikiko (இளநிலை மாணவர்), உதவி பேராசிரியர் Yamauchi யாசுவோ, இணை பேராசிரியர் Mizutani Masaharu, பேராசிரியர் Sugimoto Yukihiro, இணை பேராசிரியர் Kuse மசாகி, மற்றும் பேராசிரியர் Takikawa Hirosato ஆகியோர் மிக விரிவாக ஆய்வு மேற்கொண்டனர். […]

May 14, 2016 Editor