32°C

vanathi

ஹாலா மரம் மரங்கள்

ஹாலா மரம்

கிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகள் முழுவதும் பரவி காணப்படும் தாழைக் குடும்பத்தை சேர்ந்த மரங்கள் இவை. அங்குள்ள கடற்கரை பகுதிகள் மற்றும் சதுப்பு நிலங்களில் பரவலாக காணப்படும் இம்மரங்கள் கடுமையான வறட்சியையும் தாங்க கூடியவை. இதன் தாவரவியல் பெயர் பென்டானஸ் டெக்டோரியஸ் (Pandanus tectorius). 60 வருடங்கள் வரை உயிர் வாழும் ஹாலா மரங்கள் (Hala Tree), 13 முதல் 46 அடி உயரம் வரை வளர்கின்றன. இவற்றில் ஆண், பெண் என இருவகை மரங்கள் […]

August 20, 2022 vanathi
பெல்டட் கேலவே – ஓரியோ மாடுகள் கால்நடை

பெல்டட் கேலவே – ஓரியோ மாடுகள்

300 ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சிக்காக ஸ்காட்லாந்தில் உருவாக்கப்பட்ட இனம் இது. ஸ்காட்லாந்தின் பூர்வீக மாடாகிய கேலவே மாட்டிலிருந்து இந்த கலப்பின மாட்டை உருவாக்கியுள்ளனர். 1921 ஆம் ஆண்டு இது தனி இனமாக  அங்கீகரிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து, நியூஸிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இன்று அந்த நாடுகளிலும் குறிப்பிட்ட அளவு பெல்டட் கேலவே (Belted Galloway) மாடுகள் உள்ளன. கொம்புகளற்ற இந்த கருநிற […]

August 12, 2022 vanathi
உலகிலேயே மிக நீண்ட கழுத்தினை கொண்ட மான்- ஜெரினக் கால்நடை

உலகிலேயே மிக நீண்ட கழுத்தினை கொண்ட மான்- ஜெரினக்

இரலை வகை மான்களான ஜெரினக் -கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யா, தான்தோனியா, ஜிபூட்டி ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. சோமாலி மொழியில் ஜெரினக் (Gerenuk) என்பதற்கு ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து என்று பொருள். இதனை ஒட்டகச்சிவிங்கி கெசல் (Giraffe Gazelle) என்றும் வல்லரின் கெசல் (Waller’s Gazelle) என்றும் அழைக்கின்றனர்.  இதன் விலங்கியல் பெயர் லிட்டோகிரேனியஸ் வல்லேரி (Litocranius walleri). இம்மான்களில் இரண்டு துணை சிற்றினங்கள் உள்ளன. 28 முதல் 52 […]

August 11, 2022 vanathi
அரசப்புறா கால்நடை

அரசப்புறா

அரசப்புறா உருண்டையான உடல் அமைப்பின் காரணமாக, கோழிகளைப் போன்று தோற்றமளிக்கும் இந்த புறாக்கள் அமெரிக்காவில் (19ஆம் நூற்றாண்டு)  உருவாக்கப்பட்டவையாகும். டச்சஸ், ஹோமர், ரன்ட், மால்டீஸ் ஆகிய நான்கு புறாக்களிலிருந்து உருவாக்கப்பட்ட கலப்பினம் தான் இந்த அரச புறாக்கள் (King Pigeon). இவற்றின் முன்னோர்கள் மாடப்புறாக்கள். பொதுவாக புறாக்களில் இறைச்சியின் அளவு மிக குறைவாக இருக்கும். அதை ஈடு கட்டும் விதமாக, அதிகளவு இறைச்சி மற்றும் முட்டையை கொடுக்கும் புறாக்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த அரசபுறாக்கள் […]

August 11, 2022 vanathi
செம்முக குரங்குகளும் மனிதர்களும் விவசாய கட்டுரைகள்

செம்முக குரங்குகளும் மனிதர்களும்

மனிதர்களுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் பரவியுள்ள குரங்கினம் செம்முக குரங்குகளே. ஆசிய கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இக்குரங்குகள் இப்போது வட அமெரிக்காவிலும் பரவியுள்ளன. மருத்துவ ஆராய்ச்சிக்காகவும், விலங்கியல் பூங்காவுக்காகவும் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட குரங்குகளில் தப்பியவை இன்று அங்கு பெருங்குழுக்களாக வாழ்ந்து வருகின்றன. காடுகள், மலைகள், புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், பாறை பகுதிகள் என பல வகைப்பட்ட சூழலிலும் இவை வாழக் கூடியவை. பெரும்பாலும் மனித குடியிருப்புகளுக்கு அருகில் வாழ்வதையே விரும்புகின்றன. உருவமைப்பும் வாழ்க்கை முறையும் இளம் […]

July 23, 2022 vanathi
எள் வரலாறு பயிர் வகைகள்

எள் வரலாறு

மனிதர்களால் முதன் முதலில் பயிரிடப்பட்ட எண்ணெய் வித்துக்கள் கடுகும், எள்ளுமே. எள்ளினை கண்டறிவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் கடுகு குடும்பத்தைச் சார்ந்த எண்ணெய் வித்துக்களை பயிரிட தொடங்கிவிட்டனர். இந்தியாவில் எள் எள்ளினை முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் சிந்து சமவெளி மக்களே. அவர்கள் 5500 ஆண்டுகளுக்கு முன்னரே எள்ளினை பயிரிட்டுள்ளனர் என்பது ஹரப்பாவில் நிகழ்த்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மெசபடோமியாவுக்கு எள்ளினை ஏற்றுமதி செய்து வந்துள்ளனர். மனித […]

July 15, 2022 vanathi
அழகுக்காக வளர்க்கப்படும் கொண்டை கோழிகள் – போலிஷ் கோழி கால்நடை

அழகுக்காக வளர்க்கப்படும் கொண்டை கோழிகள் – போலிஷ் கோழி

ஏறத்தாழ எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களால் வளர்க்கப்பட்டு வரும் கோழிகள் இவை. 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டை சார்ந்த டச்சு மற்றும் இத்தாலிய ஓவியங்களில் இக்கோழிகளை காண முடிகிறது. போலிஷ் கோழிகள் (Polish Chicken) என்றழைக்கப்பட்டாலும், இவை போலந்து நாட்டை பூர்வீகமாகக் கொண்டவை அல்ல. பழங்கால போலந்து நாட்டு போர் வீரர்கள் அணியும் இறகுகளாலான தொப்பியை போல, இவற்றின் கொண்டை அமைந்துள்ளதால் இவற்றை போலிஷ் கொண்டை கோழிகள் என்று அழைக்கின்றனர். இவற்றின் பூர்வீகம் நெதர்லாந்து என்று கணித்துள்ளனர். […]

July 14, 2022 vanathi