Skip to content

இந்தியாவின் மாம்பழ மனிதர்

ஒட்டுக்கட்டுதல் மூலம் ஒரு மரத்தில் இரண்டு வகையான பழங்களை பார்த்திருப்போம். சில இடங்களில் ஐந்து நிற செம்பருத்தி மலர்கள் ஒரே செடியில் பூப்பதை பார்த்திருப்போம். ஆனால் ஒரே மரத்தில் 300 வகையான மா ரகங்களை பார்த்ததுண்டா. ஆம் அப்படி ஒரு மாமரத்தை உருவாக்கியவர்தான் இந்தியாவின் மாம்பழ மனிதர் என்று… இந்தியாவின் மாம்பழ மனிதர்

தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதலும் மேலாண்மை முறைகளும்

தென்னை வளர்ப்பில் பூச்சி, நோய்த் தாக்குதல் உழவர்கள் நெடுங்காலமாகச் சந்தித்து வரும் பிரச்சினை. சுமார் 800 பூச்சியினங்கள் தென்னையைத் தாக்கிச் சேதத்தை விளைவித்து வந்தாலும் காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன் வண்டு, கருந்தலைப் புழு, எரியோபிட் சிலந்தி, சுருள் வெள்ளை ஈ போன்றவை தென்னைச் சாகுபடியில் பெரும் சேதத்தை… தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதலும் மேலாண்மை முறைகளும்

விலை உயர்ந்த முதல் ஐந்து மாம்பழ ரகங்கள்

சர்வதேச சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் முதல் ஐந்து மாம்பழ ரகங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்தியாவில் மாம்பழம் என்று சொன்னால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அல்போன்சா மாம்பழமாகத்தான் இருக்கும். இதுவே ஐந்தாவது இடத்தில் உள்ளது. குங்குமப்பூ நிறமுடைய இந்த ரக மாம்பழங்கள் மகாராஸ்ட்ராவின் தேவகட், ரத்னகிரி ஆகிய பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிக அளவில் போர்சுகீசிய காளனிகளை உருவாக்கிய அபோன்சா டீ ஆல்புகுர்கீ (Alponso de Albuquerque) என்பவரின் நினைவாக இந்த மாம்பழத்திற்கு அல்போன்சா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவருடையை காலத்தில் பல மாங்கன்றுகளை அல்போன்சா ரக மரங்களுடன் ஒட்டுக்கட்டி அதே சுவையுடன் மாம்பழங்களை உற்பத்தி செய்துள்ளனர். ஒரு டஜன் மாம்பழம் 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ரக மாம்பழங்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேற்கு வங்கத்தின் முர்சிதாபாத் என்னும் இடத்தில் பயிரிடப்படும் கோகித்தூர் மாம்பழம் நான்காம் இடத்தில் உள்ளது. நவாப் ஆட்சி காலத்தில் 18ஆம் நூற்றாண்டில் சிராஜ் உட் டெளலா என்பவரின் ஆட்சியில் செல்வந்தர்களுக்கும் வசதிப்படைத்தவர்களுக்குமாகவே இந்த மாரகம் பயிர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மாம்பழங்களை மூங்கில் அல்லது யானைத் தந்தத்தால் செய்த கத்தியை வைத்தே நறுக்க வேண்டும் என்றும் தங்க ஸ்பூன் கொண்டு சாப்பிட்டால்தான் அதன் உண்மை சுவை தெரியும் என்றும் கூறுகின்றனர். ஒரு மாம்பழத்தின் விலை 1500 ரூபாய். இந்த மாம்பழத்தின் புவிசார் குறியீடுக்காக மேற்கு வங்க அரசு விண்ணப்பித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ளது மத்திய பிரதேசத்தின் அலிராஜப்பூர் மாவட்டத்தில் கத்திவாடா என்ற இடத்தில் வளர்க்கப்பட்டு வரும் நூர்ஜஹான் என்னும் மா ரகம். இதன் ஒரு மாம்பழம் 11 இன்ச் உயரமும் 2 முதல் 5 கிலோ வரை எடையும் கொண்டுள்ளது. இந்த மா ரகம் அதிக சுவையுடையதாகும். இதன் தாயகம் ஆப்கானிஸ்தான். பலவகையான மாரகங்களை சேகரிக்கும் ஆர்வம் கொண்ட டாகூர் பர்வேந்திர சிங் என்பவர் 1968ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டுவந்து இந்த மரங்களை நடவு செய்ததாக கூறுகின்றனர். ஒரு பழத்தின் விலை ஆயிரம் ரூபாய். முன்னரே ஆர்டர் செய்பவருக்கு மட்டுமே இந்த மாம்பழங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் மியாசாகி என்னும் இடத்தில் பயிரிடப்படும் மியாசாகி என்ற மாரகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில் 15% சர்க்கரை உள்ளதால் இதன் பழம் மிகவும் இனிப்புச்சுவை கொண்டுள்ளது. இந்த மாம்பழம் பழுப்பு கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இதனை ஜப்பான் மொழியில் டையானோ டமாகோ என்று அழைக்கின்றனர். இந்த மாஞ்செடிகளை பசுமைகுடிலுக்குள் மிகுந்த பாதுகாப்புடன் பயிரிடுகின்றனர். சூரியனின் முட்டை என்று அழைக்கப்படும் இந்த மாம்பழத்தின் விலை ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய் வரை சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

முதலாவது இடத்தில் இருப்பது ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாகானத்தில் பயிரிடப்படும் உயர் முனை மாம்பழங்கள் (Top end Mangoes). 2010ஆம் அண்டு 12 பழங்கள் கொண்ட ஒரு பெட்டி மாம்பழங்கள் 50,000 டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. 2001ஆம் ஆண்டு பிரிஸ்பேன் உற்பத்தியாளர் சந்தையின் மூலம் தொண்டுக்காக விடுக்கப்பட்ட ஏலத்தில் 16 மாம்பங்கள் கொண்ட ஒரு பெட்டி 20565 டாலருக்கு ஏலம்விடப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

கட்டுரையாளர்கள்:
1. எ. செந்தமிழ்,
முதுநிலை வேளாண்மை மாணவர் (உழவியல் துறை),
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர் – 608 002.
2. பூ. நந்தினி,
முதுநிலை வேளாண்மை மாணவி (தாவர நோயியல் துறை),
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர் – 608 002

விலை உயர்ந்த முதல் ஐந்து மாம்பழ ரகங்கள்

ஆனிப்பட்டத்தில் நிலக்கடலை பயிரிட ஏற்ற ரகங்கள்

எண்ணெய் வித்துக்களின் ராஜா என்றழைக்கப்படும் நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஆனிப்பட்டம் மிகச்சிறந்த பட்டமாகும். தமிழகத்தில் இந்த பட்டத்தில் நிலக்கடலை மானாவாரியாக பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தை பொருத்த வரை கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், சேலம்,… ஆனிப்பட்டத்தில் நிலக்கடலை பயிரிட ஏற்ற ரகங்கள்

கத்திரிக்காய் பயிரில் கொழுந்து மற்றும் காய்ப்புழு மேலாண்மை

உலகளவில் கத்தரிக்காய் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த வருடம் 7.3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கத்தரிக்கய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கத்தரிக்காய் இல்லாத விருந்து கலைகட்டுவதில்லை என்பது சான்றோர் வாக்கு. கல்யாணம், திருவிழாக்கள் முதல் நாம் வீட்டில் தினசரி சாப்பிட்டும் சாம்பார் வரை கத்திக்காய் முக்கிய இடத்தில்… கத்திரிக்காய் பயிரில் கொழுந்து மற்றும் காய்ப்புழு மேலாண்மை

சூரியகாந்தி பயிரில் அதிக மகசூல் பெற ஐந்து வழிகள்

தமிழகத்தின் பலபகுதிகளில் பரவலாக இறவையிலும் மானாவாரியிலும் சூரியகாந்தி பயிரிடப்படுகிறது. சூரிய காந்தி அஸ்டரேசியே குடும்பத்தை சேர்ந்த ஒரு எண்ணெய் வித்துப்பயிராகும். அனைவரையும் கவர்ந்து எழுக்கும் வண்ணமும் தனமையும் கொண்டது சூரியகாந்தி பூக்கள். தமிழகத்தில் சூரியகாந்தியின் சாகுபடி பரப்பளவு குறைந்து வந்ததாலும் சில விவசாயிகள் சூரிய காந்தியை தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர். முக்கியமான எண்ணெய்வித்துப் பயிரான சூரியகாந்தியில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் இருதய நோயாளிகளுக்கு சூரியகாந்தி எண்ணெய்யை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தேனீக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதிலும் சூரியகாந்தி பூக்களுக்கு நிகர் வேறு எந்த பூக்களும் இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த எண்ணெய் வித்துப்பயிரான சூரியகாந்தி சாகுபடியில் அதன் மகசூலை அதிகரிக்க செய்ய வேண்டிய உழவியல் நுட்பங்கள் குறித்து பார்க்கலாம்.

சூரியகாந்தி பயிரில் அதிக மகசூல் பெற ஐந்து வழிகள்

நிலக்கடலையில் தண்டழுகல் நோய் மேலாண்மை

  உலகில் பயிரிடப்படும் நிலக்கடையின் மொத்த பரப்பளவில் 25% இந்தியாவில் பயிரிடப்படுகிறது. உலக மொத்த உற்பத்தியில் 19% நிலக்கடலை இந்தியாவில்தான் உற்பத்தியாகின்றது. 2019-20 பயிர் ஆண்டில் இந்தியாவில் 8.24 மில்லியன் டன் நிலக்கடலை எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலையானது எண்ணெய் வித்துகளின் அரசன் என அறியப்படுகிறது. நிலக்கடலை… நிலக்கடலையில் தண்டழுகல் நோய் மேலாண்மை

நெல் திருவிழா : தேசிய அளவிலான விவசாயிகள் ஒன்றுகூடும் விழா

தமிழகத்தில் அழிந்துவரும் 160ற்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து அவற்றை அழிவில் இருந்து தடுத்து ஆண்டுதோறும் அதற்கான தேசிய நெல் திருவிழாவை 2006ஆம் ஆண்டுமுதல் திருத்துறைப்பூண்டியில் நடத்தி வந்தார் கட்டிமேடு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன். அதனால் அவருக்கு நெல் ஜெயராமன் என்ற பட்டத்தினை வழங்கினார் நம்மாழ்வார். புற்றுநோயால்… நெல் திருவிழா : தேசிய அளவிலான விவசாயிகள் ஒன்றுகூடும் விழா

மாதுளை பழத்துளைப்பான் நோய் மேலாண்மை

Pomegranate fruit borer Conogethes punctiferalis Lepidoptera பூச்சி தாக்கிய அறிகுறிகள்: இளம் பழங்களை புழுக்கள் துளைக்கும். பழங்களின் உள்ளே உள்ளவற்றை உண்ணும். முதிராமலேயே வாடி, உதிர்ந்துவிடும். பூச்சியின் விபரம்: புழு : இளம் பச்சை நிறத்தில், இளஞ்சிவப்பு புள்ளியுடன், நுண்ணிய ரோமங்களுடன், அடர் நிற தலை மற்றும்… மாதுளை பழத்துளைப்பான் நோய் மேலாண்மை

திசுமுறை பயிர் வளர்ப்பு பயன்கள்

Ø உள்கட்டமைப்பில் தாவர வளர்ப்பு பாரம்பறிய வளர்ப்பு முறையை விட வேகமாக உள்ளது. Ø கடுமையான பாரம்பறிய முறையால் பேறுப்பெருக்கம் செய்யமுடியாத பயிரை திசு வளர்ப்பு மூலமாஅக செய்யலாம். Ø ஒருவகை படுத்தப்பட்ட குத்துசெடியை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம். Ø நோய்களற்ற அல்லது பூச்சிகளற்ற விதைகளை துளிற… திசுமுறை பயிர் வளர்ப்பு பயன்கள்