பல செயலிகள் வேளாண்மைக்காக அறிமுகம் செய்யப்படுகின்றன. எனினும் அவை புதுமை, செய்தி தொகுப்பு, எளிய மொழி ஆளுமை, பயன்படுத்தும் முறை, புதுப்பித்துக்கொள்ளுதல் போன்றவற்றில் பின் தங்கி விடுகின்றன. அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ளுதலும் செய்திகளை எளிமையாக சொல்வதோடு விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தல் போன்ற பல்வேறு செயல்களின் கூட்டு முயற்சியே ஒரு செயிலியின் வெற்றியை தீா்மானிக்கும். கழனியும் செயலியும் தொடரில் இந்த வார செயலிகளானது……
விவசாயம் இன் தமிழ்
விரல் நுனியில் விவசாயத் தகவல்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இயற்கை உரம், இயற்கை விவசாயம், காய்கறி வகைகள், கீரை வகைகள், காணொளிகள், கருத்துக்களம், கால்நடைகள் என பல்வேறு தலைப்புகளில் வேளாண் தகவல்களானது தொகுக்கப்பெற்று எளிய நடையில் அனைவருக்கும் புரியுமாறு அமையப் பெற்றுள்ளது. இந்திய அளவில் சந்தை விலை நிலவரங்களை தெரிந்து கொள்ளவும் வசதிகள் உள்ளன. அதுமட்டுமின்றி நாம் தினமும் உண்ணும் உணவுகளின் சத்துப் பட்டியலினை தொகுத்து கொடுத்திருக்கிறார்கள். மேலும் புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வண்ணம் நீங்களும் எழுதலாம் என்ற பகுதி உள்ளது. விவசாயிகள் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற அலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக தமிழ் மொழியில் வேளாண் தொழில் மேம்பாட்டுக்காக துவங்கப்பட்ட செயலி இதுதான். இதற்காக இதன் நிறுவனர் திரு. செல்வமுரளி அவர்கள் 2015ம் ஆண்டிற்கான தமிழக அரசின் கணினித்தமிழ் விருதினை தமிழக முதல்வரிடம் பெற்றார். மேலும் முக்கியமான தகவல் என்னவெனில் நமது அக்ரி சக்தி மின்னிதழை இந்த செயலியில் படிக்கும் வசதி உள்ளதென்பதுதான்.
விவசாயம் இன் தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்ய:
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil
கட்டுரையாளர்: ச. ஹரிணி ஸ்ரீ, முதுநிலை வேளாண் மாணவி, உழவியல் துறை, வேளாண்புலம், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: agriharini@gmail.com