Skip to content

மண்ணை காக்க காப்பு வேளாண்மை

ஒரு மண்ணின் வளம் என்பது, அதற்கான சூழ்நிலை மற்றும் பயன்பாட்டு வரையறையில் நிலைத்த உற்பத்தியுடன் சூழ்நிலையை பாதுகாத்து தாவரங்கள் மற்றும் அதை சார்ந்த விலங்குகளின் நலனை பாதுகாக்க வேண்டும். ஆனால் கடந்த இருபது வருடங்களாக விவசாயிகள் இரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியதன் விளைவால் மண்ணிற்கு அங்கக உரங்களை இடுவதை முற்றிலுமாக மறந்துவிட்டனர். இதனால் மண்ணில் அங்கக தன்மை குறைந்து ஊட்டச்சத்துக்களை தேக்கி வைக்க முடியாமல் வளமற்ற மண்ணாக மாறி வருகின்றது. இதனை சரிசெய்து மண்ணின் வளத்தை காத்து உற்பத்தியில் தன்னிறைவு அடைய நவீன வேளாண்மை தொழில்நுட்பமான காப்பு வேளாண்மையை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும். எனவே இந்த கட்டுரையில் எவ்வாறு காப்பு வேளாண்மையின் மூலம் மண் வளத்தை காப்பது என விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வளமான மண்ணின் தன்மைகள்

மண்ணின் மிதமான பதம், அதிக ஆழம், சீரான ஊட்டம், குறைந்த எண்ணிக்கையில் தீமை செய்யும் பூஞ்சாணம் மற்றும் பூச்சிகள், அதிக அளவிலான நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், குறைந்த களைச்செடிகள், மண்ணில் இரசாயனத்தின் பாதிப்பு குறைவாக இருத்தல், மண் அரிமாணத்திற்கு உட்படாமல் இருத்தல் மற்றும் நல்ல வடிகால் வசதியினை பெற்றிருத்தல் முறையே வளமான மண்ணின் தன்மைகள் ஆகும். இத்தன்மைகள் அனைத்தும் மண்ணின் பௌதீக தன்மை, வேதியல் தன்மைகள் மற்றும் உரியல் தன்மைகளின் ஒருங்கிணைந்த வெளிப்பாடாகும். எனவே இதனை முறையாக மேலாண்மை செய்வதன் மூலம் மண்ணின் வளத்தை எளிதில் உயர்த்தலாம்.

மண் வளத்தின் முக்கியத்துவம்

இந்தியாவில் 1960 களில் தொடங்கிய பசுமை புரட்சியின் காரணமாக விவசாயிகள் அதிகப்படியான அளவில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தினர். மேலும் அதிநவீன உழவு இயந்திரங்களை பயன்படுத்த தொடங்கினர். அதே சமயம் மண்ணிற்கு அளித்துவந்த அங்கக உரங்களை அளிக்க மறந்தனர். இதன் விளைவாக மண்ணின் நுண்ணுயிரிகள் அழிந்தும் மண் அரிமானத்தினாலும் மண்ணின் ஊட்டம் குறைந்து உற்பத்தியும் தொடர்ந்து குறையத்தொடங்கியுள்ளது.

மண் வளத்தை பெருக்கும் உத்திகள்

மண் வளத்தை பெருக்குவது என்பது மண்ணின் சூழ்நிலையை மண்ணில் வாழும் உயிரினங்களின் உணவு சங்கிலியினை சீராக்குவதற்கு ஏதுவாக செய்ய வேண்டும். இதற்கு பின்வரும் மூன்று அடிப்படை உத்திகளை வயலில் செயல்படுத்துவதன் மூலம் மண் வளத்தை எளிதில் அதிகரிக்கச் செய்யலாம்.

  1. உழவுகளின் எண்ணிக்கையை குறைத்தல்
  2. பல்வகை பயிர்களை சாகுபடி செய்தல்
  3. வயலில் எப்பொழுதும் பயிர் இருக்குமாறு செய்தல்

 

இந்த உத்திகள் அனைத்தையும் தனித்தனியாக செயல் படுத்துவதற்கு மாறாக காப்பு வேளாண்மை உத்திகளை கடைப்பிடிப்பதில் மூலம் மண்ணை எளிதாக மண்ணை வளமானதாக மாற்றலாம்.

காப்பு வேளாண்மை

காப்பு வேளாண்மை வழிமுறைகள், சுற்றுசூழல் மாசுபடுதலை குறைத்து அதனை காத்து, உயிரியல் சுழற்சியையை மேம்படுத்தி, குறைவான இடுபொருட்களை மட்டுமே பயன்படுத்தி உற்பத்தியையை உயர்த்தி நீடித்த தன்னிறைவான வேளாண்மைக்கு வழிவகை செய்கிறது.

காப்பு வேளாண்மை வரையறைகள்

  1. நவீன உழவியல் உத்திகள் (குறை உழவு)
  2. பல்வகை பயிர்சாகுபடி
  3. நிரந்தர பயிர் மூடாக்கு

Leave a Reply

editor news

editor news