Skip to content

கழனியும் செயலியும் (பகுதி-2)

பயிர் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் நில மற்றும் கள வேறுபாட்டினால் தங்களது குறிப்பிட்ட மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக விவசாயிகளுக்கு பல்வேறு தகவல்கள் தேவைப்படுகின்றன. இதனை சாத்தியமாக்கும் ஒருவகை காரணிகளே வேளாண் செயலிகள். சென்ற கட்டுரையின் தொடா்ச்சியாக மேலும் சில வேளாண் செயலிகளும் அவற்றின் பயன்களும்….

e-NAM

இச்செயலி சிறு விவசாயிகள் வேளாண்வணிக கூட்டமைப்பு, வேளாண் மற்றும் விவசாய நலத்துறையினரால் அறிமுகம் செய்யப்பட்டது. NAM (National Agricultural Market) அதாவது தேசிய வேளாண் சந்தை. இச்செயலியின் நோக்கமானது விவசாயிகள் விலை நிலவரங்களை அறிந்து கொண்டு தங்கள் பொருட்களை விற்பனை செய்யவும், வியாபாரிகள் ஏலம் கேட்கவும் வழிவகை செய்வதே. பொருட்களின் வரத்து மற்றும் விலை, வாங்க மற்றும் விற்க ஏதுவாக தகவல்களையும் உள்ளடக்கி உள்ளது. இச்செயலியானது நாடு முழுவதும் ஒற்றை சாளரமாய் திகழ்ந்து பொருட்களின் நேரடி கொள்முதல் விலையினை விவசாயிகளே தீா்மானிக்க வழி செய்கிறது. ஒவ்வொரு மண்டியிலும் வேளாண் பொருட்களின் தர நிர்ணய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விவசாயிகளுக்கு :

  • இடைத்தரகர்கள் இன்றி தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு தாங்களே நேரடியாக விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யலாம். இதனால் அவர்களின் முதலீட்டிற்கு ஏற்ற இலாபத்தினை பெற இயலும்.
  • விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்களின் வரத்தினை அறிந்து கொள்ளலாம்.
  • பொருட்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலையினை தெரிந்து கொள்ளலாம்.
  • விவசாயிகள் தாங்கள் நிர்ணயித்த விலையில் பொருட்களை விற்பனையாகும் வரை அவற்றை குறைந்த வாடகையில் அந்த சேமிப்பு கிடங்கிலேயே வைத்துக்கொள்ளலாம்.வியாபாரிகளுக்கு :
    • விற்பனைக்கு உள்ள வேளாண் பொருட்களை ஏலம் கேட்கலாம்.
    • ஏலம் கேட்ட தொகையினை மாற்றம் செய்து கொள்ளலாம்.
    • திறந்தநிலை ஏலத்தில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஏலத்தொகையினை அறிந்து கொள்ளலாம்.
    • ஏலம் வென்றவர், ஏலத்தின் விபரங்களை தெரிந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்..

    விற்பனையாளா்கள்

    • விற்பனையாளா்கள், ஏற்றுமதியாளர்கள், சிறு மற்றும் குறு வணிகா்கள், மதிப்பு கூட்டுவோர் போன்றோரும் பொருட்களை எந்த சந்தையிலிருந்தும் பெற்றுக் கொள்ள இயலும்.
    • அவர்களது இருப்போ அல்லது அவர்கள் சார்ந்த இடைத்தரகா்கள் இருப்போ அவசியமில்லை.
    • வியாபாரிகள் அதிகமாகும் பட்சத்தில், சரியான விலைக்கான போட்டியும் அதிகமாகும். இதனால் சரியான விலையினை பொருட்களுக்கு நிர்ணயம் செய்திடலாம்.பொதுப்பயன்கள்
      • வெளிப்படையான வர்த்தகம்
      • பொருட்களுக்கு சரியான விலை வழங்குதல்
      • தர நிர்ணயம், சேமிப்பு வசதி
      • நிலைத்த விலை, நுகர்வோர் பயன்பாடு
      • சீரான பணபரிவா்த்தனைகள்
      • சந்தைகளுக்கான மேம்படுத்தப்பட்ட அணுகுமுறை

      -தொடரும்…

      கட்டுரையாளர்: ச. ஹரிணி ஸ்ரீ, முதுநிலை வேளாண் மாணவி, உழவியல் துறை,  அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: agriharini@gmail.com

Leave a Reply

editor news

editor news