முன்னுரை
விவசாய ஜோதிடம்
சோதிடங்கள் பல வகைகள் இருந்தாலும் இவ்வகை கொஞ்சம் புதியது.அன்றாட வாழ்க்கையில் இயற்கை மற்றும் கோள்களின் தன்மை, அதன் பொருட்டு கண்ணுக்குத் தெரிகின்ற கிரகங்களான சூரியன் சந்திரன் இவைகளைக்கொண்டு பருவ கால மாற்றங்களைக் கொண்டு நம் முன்னோர் விவசாயம் செய்துவந்தனர்
கோள்களின் சஞ்சாரத்திற்கேற்றவாறு நாள், திதி, நட்சத்திரம்,தமிழ் மாதங்கள் இவைகளைக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயிர்களை விலைவிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற்றும் பயிர்களுக்கு நோய் வராமல் காக்கும் வழிகளும், பூச்சிகள் தாக்காவண்ணம் இயற்கையின் போக்கில் விவசாயத்தினை செய்துவந்தனர்
இதனடிப்படையில் இயற்கையை சார்ந்து வானியல் கோள்களை அடிப்படையாக்கொண்டு விவசாயம் சார்ந்த பணிகளை செய்தால் நிச்சயம் மகசூல் அதிகமக கிட்டும் என்பதோடு சுந்தரானந்தர் எழுதிய சோதிட காவியம் என்ற நூலில் உள்ள மையப்பொருளையும், ஐந்து தலைமுறையாக சித்த மருத்துவமுறைகளை செய்துவரும் பாரம்பரிய குடும்பத்தினைச் சேர்ந்த மருத்துவர் திரு.பாலாஜி கனகசபை எம்பிபிஎஸ், அரசு மருத்துவர், கிருஷ்ணகிரி மாவட்டம் இதற்கான விளக்கத்தினை நமக்கு கொடுக்கிறார்.
இவற்றினை நீங்கள் பயன்படுத்திப்பார்த்து கருத்துக்களை எங்களுக்கு எழுதலாம். அடிப்படையில் இதை நாங்கள் ஆரம்பித்ததன் நோக்கம் பழைய வழிமுறைகளை இக்கால தொழில்நுட்பத்திற்கு ஏற்றாவறு ஒருங்கிணைக்கவேண்டும் என்பதே, இதற்காகவே இந்த தொடர் நம் அக்ரிசக்தி விவசாயத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
நில உழுவதற்கு ஏற்ற நாள்
சித்த பாடல்
வந்ததொரு திங்கள் புதன் வியாழன் வெள்ளி
வாரமதிற் பூர்வபட்சந் துதிகை யோடு
சிந்தனைபஞ் சமிதசமி திரயோதேசி
திரிதிகைசத் தமியேகா தசி நன்றாகும்
அந்தமுள்ள புனர்பூசம் மனுஷமூலம்
அஸ்தமூன்றுத்திரங்கள் பூச மோடு
சந்தமுள்ள ரேவதிரோ கணியீ ரைந்தும்
தானாகும் நிலமுழுக நாளிதாமே.
உரியதொரு கன்னியுடன் தனுசு மீனம்
உற்றமிது னங்கடகம் யிடபத் தோடு
பெரியதொரு துலாம் சிம்ம ராசி தன்னிற்
பிறங்குபா தாளயோ கினியில்லாமல்
தெரியவிந்தக் காலமெல்லாஞ் சரியாய்ப் பார்த்துச்
சிறப்பான கலப்பையதைத் தானெ டுத்துப்
பிரியமாய்ப் பூமியில்வைத் ததனைப் போற்றிப்
பெருமையுட னுழுதாக்கால் விளைவுண் டாமே.
விளக்கம் :
திங்கள், புதன் , வியாழன், செவ்வாய் கிழமைகளில்
திதிகை : பஞ்சமி, தசமி, திரியோதசி ஆகிய திதிகளில்,
புனர்பூசம், அனுசம், மூலம், அஸ்தம், உத்திரம், உத்திரட்டாதம், பூசம், ரேவதி , ரோகிணி ஆகிய கூடிய நட்சத்திரங்களில்
கன்னி, தனசு, மீனம், மிதுனம், கடகம், ரிசபம், துலாம், சிம்மம் ஆகிய இலக்கினங்களில் உங்கள் நிலத்தினை உழுவது சிறப்பு
எடுத்துக்காட்டாக
வரும் 22.01.2020 அன்று
புதன்கிழமை, மூல நட்சத்திரம், திரியோதசி திதி அமைந்துள்ளது. லக்கினத்தினை பஞ்சாங்கத்தில் வைத்து கணக்கிடலாம்
விரைவில் விவசாயத்திற்கான நாள்காட்டியையும் அக்ரிசக்தி வெளியிட உள்ளது
உங்கள் கருத்துக்களை மறவாமல் எங்களுக்கு அனுப்பவும்
விவசாய பஞ்சாங்கம்
சித்திைைரை மாதம் நாள் ஏர் கெட்டும் நாள் நேரம் சர்வாரி வருடம் 2020