32°C

டெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறப்பு

Editor Tamilnadu Published: August 13, 2019 1 நிமிட வாசிப்பு செய்திகள்
எழுத்து அளவு:

கர்நாடகவில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பொழியும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருகிவருகிறது. இந்நிலையில் இன்று காலை 13-08-2019 அன்று மேட்டூர் அணை 65வது முறையாக 100 அடியை எட்டியது. இதனையடுத்து பொதுப்பணிதுறை அதிகாரிகள் காவிரி நீருக்கு பூஜை செய்தனர்.

தஞ்சை டெல்டா பாசனத்திற்காக இன்று மேட்டூர் அணையை முதல்வர் இபிஎஸ் திறந்து வைத்தார். தற்போது 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது மேலும் பத்தாயிரம் கன அடி வரை உயர்த்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் தற்போது அணைக்கு வினாடிக்கு நீர் வரத்து 2.53 லட்சம் கன அடியாக உள்ளது.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க