பெங்களூரைச் சார்ந்த Climate Trends, என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வில் இந்தியாவின் பல மாநிலங்கள் பெரும் தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்கவுள்ளதாக தெரிவிக்கிறது.
இந்த ஆண்டில் மே 18, 2018-ம் தேதியில் இருந்து சுற்றுலா தளங்களில் ஒன்றான சிம்லாவில் பெரும் தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கியிருந்தது. இமாச்சல பிரதேசத்தின் மொத்த பொருளாதாரத்தில் சுற்றுலாவின் வருவாய் மட்டும் 7.2%.
இமாச்சல பிரதேசம் மட்டும் அல்லாமல் பல இந்திய மாநிலங்களும் பருவநிலை மாற்றத்தால் நாட்டில் பருவ நிலை மாற்றம் காரணமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
“நாடு முழுவதும், மக்கள், காய்ந்து கிடக்கும் கிணறுகள், ஆறுகளை எதிர்நோக்கியுள்ளனர்; சமீப காலமாக சில இடங்களில் மீண்டும் வறட்சி ஏற்பட்டுள்ளது, ‘ ‘ என, காலநிலை போக்குகள் அறிக்கை வெளியிட்டது. இந்த நிலைமை மோசமாகி இந்தியாவில் பல மாநிலங்களுக்கு இடையே நீர் மோதல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அத ஆய்வு தெரிவிக்கிறது
தமிழ்நாட்டில் பெரிய நீர்த்தேக்கங்கள் சாதாரண நிலையை விட 67% குறைந்தே காணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு முக்கிய நீர்த்தேக்கமும் ஆண்டு சராசரி அளவுக்கு கீழே உள்ளது. 2016-17 ல், நெருக்கடியை சமாளிக்க ரூ 200 கோடியை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து அரசு ஒதுக்கியுள்ளது. வரும்காலங்களில் தமிழகம் கடும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கவேண்டியதிருக்கிறது. எனவே இப்போதாவது அரசாங்கம் தமிழகத்தில் உள்ள ஏரி , குளம் , குட்டைகளையும், ஆற்றுப்பாதைகளையும் சுத்தப்படுத்தி, தண்ணீரை சேமிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அரசாங்கத்தையே நம்பியிராமல் மக்களும் தங்களால் ஆன முயற்சிகளையும் மேற்கொண்டு அவரவர்களின் ஊர்களில் உள்ள குளம், குட்டை, ஏரிகளை பாதுகாக்கவேண்டும்.
ஆய்வு முடிவுகள்
https://drive.google.com/file/d/11IQ2lnvt-QONLlZ9M-DYJNyL7vOsCGcL/view