மழைக்காலம் துவங்க உள்ள சூழ்நிலையில் இப்போதாவது தமிழகமெங்கும் உள்ள முக்கிய ஏரி, குளங்களை தூர்வாரவேண்டும் என்று விவசாயிகள் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிகமான தேவையற்ற செடி , கொடிகள் ஏரிகளில் வளர்ந்துள்ளதால் நீரை தேக்கிவைக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள், அதோடு தண்ணீரை தேக்கி வைக்க இயலாத சூழ்நிலையில் பயிர்களை பாதுகாக்க அனைவரும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்போதாவது அரசாங்கம் முயற்சி எடுத்து ஏரி, குளங்களை தூர்வாரவேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்