செங்குன்றம் நெல் வடமாநிலமான குஜராத்திலும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது, சென்னை அடுத்த, திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில், தை பருவ அறுவடைக்கு பின், தற்போது, சித்திரை பருவ நெல் அறுவடை நடந்து வருகிறது. இதன் எதிரொலியாக, சென்னை, செங்குன்றம் நெல் மார்க்கெட்டிற்கு, தினமும், 100க்கும் அதிக மான லாரிகளில், நெல் வரத்து நீடிக்கிறது.
இதனால், தினமும், 1,800 – 2,000 டன் நெல் விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து, தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது, அதோடு வடமாநிலமான, குஜராத்திற்கும், தினமும், 100 – 200 டன் வரை அனுப்பப்பட்டுவருகிறது. தை பருவ விவசாயத்தில், வழக்கமாக, பாபட்லா பொன்னி எனப்படும், பி.பி.டி., ரக நெல், அதிக அளவில் பயிரிடப்படும். ஆனால், கோடை மழையற்ற நிலையில் செய்யப்படும், சித்திரை பருவ விவசாயத்தில், குண்டு நெல் ரகங்களே அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன.