Skip to content

ஏற்றதித்தில் மஞ்சள் விலை !!!!

தமிழகத்தில் இருந்து உற்பத்தியாகும் மஞ்சள் இந்தியாவின் பல மாநி­லங்­க­ளுக்­கும், வெளி­நா­டு­க­ளுக்­கும் ஏற்­று­மதி அதி­க­ரிப்­பால், ரூ.1,000 ரூபாய் வரை விலை உயர்ந்­துள்­ளது,இச்செய்தியை மஞ்­சள் வணி­கர்­கள் மற்­றும் கிடங்கு உரி­மை­யா­ளர்­கள் சங்க செய­லர் சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­தார்.

இந்திய அளவில் பிப்­ர­வரி முதலே புதிய மஞ்­சள் வரத்து இருப்­பி­னும், ஏப்ரல்., 14க்குப்­பின், புதிய மஞ்­சள் வரத்து அதி­க­ரித்­துள்­ளது. விரலி மஞ்­சள், குவிண்­டால், 7,000 ரூபாய் முதல், 9,000 ரூபாயை கடந்­துள்­ளது. ஈரோடு மார்க்­கெட்­டுக்கு, கர்­நா­டகா மஞ்­சள் வரத்து முடிந்து, தற்­போது தர்­ம­புரி பகு­தி­யில் இருந்து புதிய மஞ்­சள் வரத்­தா­கிறது.

அதே­நே­ரம், நிஜா­மா­பாத், சாங்ளி மார்க்­கெட்­களில் ஜன­வரி முதல், மார்ச் மாதம் வரை­யி­லும், மஹா­ராஷ்­டிரா மாநி­லத்­தி­லும், அதிக அள­வில் புதிய மஞ்­சள் வரத்­தா­னது. இத­னால் விலை குறை­யும் என எதிர்­பார்த்­த­னர். அதே­நே­ரம், வளை­குடா நாடு­கள், சிங்­கப்­பூர் உள்­ளிட்ட தமி­ழர்­கள் மற்­றும் இந்­தி­யர்­கள் அதி­கம் வாழும் நாடு­க­ளுக்கு, அதி­க­மாக மஞ்­சள் ஏற்­று­ம­தி­யா­னது. அத்­து­டன், மஞ்­சள் விளை­யாத பிற மாநி­லங்­க­ளுக்­கும், அதி­க­மாக மஞ்­சள் ஏற்­று­ம­தி­யா­னது.மேலும், ‘ஆன்­லைன்’ வர்த்­த­கம் மூலம் மஞ்­சளை அதி­க­மாக கொள்­மு­தல் செய்து, இருப்பு வைக்­கின்­ற­னர்.
கடந்த, 20 நாட்களில், மஞ்­சள் விலை படிப்­ப­டி­யாக, 1,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்­துள்­ளது.இதே நிலை, இன்­னும் சில மாதங்­க­ளுக்கு நீடிக்­கும். தவிர, புதிய மஞ்­சள்இருப்பு அதி­கம் உள்­ள­தால், விலை குறைய வாய்ப்­பில்லை.வரும் ஆண்­டில், புதிய மஞ்­சள் சாகு­படி செய்­வ­தற்கு ஏற்ப, விலை­யில் மாற்­றம் ஏற்­ப­ட­லாம்.

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj