திண்டுக்கல்லில் வாழை, வெங்காயம், மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்ய நாளை (பிப்.28) கடைசி நாள்’ என, தோட்டக்கலை துணை இயக்குனர் சுரேஷ் ஸ்ரீராம் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது: மாறி வரும் சூழ்நிலை, இயற்கை இடர்பாடுகள், வெள்ளம், வறட்சியால் வேளாண், தோட்டக்கலை பயிர்களில் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க பயிர் காப்பீடு திட்டம் நடைமுறையில் உள்ளது. விவசாயிகள் காப்பீடு செய்ய மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.
இந்தாண்டு வாழை, வெங்காயம், மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்ய நாளை (பிப்.28) கடைசி நாள். விருப்பமுள்ள விவசாயிகள் வெங்காயத்திற்கு ரூ.1,265, மிளகாய் ரூ.935, வாழைக்கு ரூ.2,318 பிரிமியம் தொகை செலுத்தி, அந்தந்த வட்டார தோட்டக்கலை அலுவலகம், இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம், என அவர் தெரிவித்தார்.
நன்றி
தினமலர்