Skip to content

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளும், இதர செடிகளும் ஆக்கிரமித்துள்ளன. இதை சரி செய்யுமா மாவட்ட நிர்வாகம்

கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி ஏரிக்கு, கே.ஆர்.பி.,அணை கால்வாயில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஏரி நிரம்பி உள்ளது. ஏரியில் இருந்து பாசனத்திற்கு கால்வாய் மூலம் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஏரி முழுவதும், ஆகாயத் தாமரை வளர்ந்துள்ளது. இதனால் நீர் மாசடைவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் தண்ணீர் வெளியே செல்லும் பகுதியில் ஆகாயத் தாமரையால் அடைத்துள்ளதால், தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
இதே போல் இருமத்தூரில் உள்ள நீர்நிலையும் மாசடைந்த நிலையில் தான் உள்ளது. ஒரு புறம் நான்கு சக்கர வாகனங்களையும் கழுவும்போது மறுபுறம் மக்கள் அதே நிரீல் குளித்தும் வருகின்றனர், ரோட்டுக்கு மறுபறம் உள்ள ஆற்றில் இருகரையிலும் ஏராளமான செடிகளும், புல்லும் முளைத்துள்ளன, அதோடு மாவட்டத்தில் உள்ள ஒரே நீர் ஆதாரம் தென் பெண்ணை ஆறு, இந்த ஆற்றக்கரையோரங்களை முழுமையாக சுத்தம் செய்து சீரமைக்கவேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு
இதையெல்லாம் சரி செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj