தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொக்கரப்பட்டி பஞ்., புளுதியூரில், புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இதில், மாடு, ஆடு, நாட்டுக்கோழிகள் அதிகளவில் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று சந்தைக்கு கலப்பின மற்றும் ஜெர்சி வகையைச் சேர்ந்த, 200 மாடுகள் மற்றும் கன்றுகள் விற்பனைக்கு வந்தன. கலப்பின மாடு ஒன்று, 25 ஆயிரம் ரூபாய் முதல், 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. அதே போல், கன்று ஒன்று, 3,000 ரூபாய் முதல், 7,500 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை விட மாடுகளின் வரத்து குறைவாக இருந்ததாகவும், நேற்று நடந்த சந்தையில், 70 லட்சம் ரூபாய்க்கு மாடுகள் விற்பனையானதாகவும் வியாபாரிகள் கூறினர்.
நாட்டு மாடு உற்பத்தியை அதிகரித்தால் விலையும் குறையும், நிறைய பேர் முன்னெடுக்கவும் செய்வார்கள்
நலம் விளையாட்டும்