Skip to content

நஞ்சில்லா விவசாயத்தில் நெல் வேளாண்மை: அனுபவம் உள்ளவர்கள் தேவை

சரவணன் எனும் நண்பர் அனுப்பியுள்ள தகவல்

ஐயா, வணக்கம் எங்கள் கிராமத்தில் BBT,45,குண்டு நெல் என நெல் சாகுபடி செய்கிறார்கள் ஆனால் அது இரசாயன மருந்துகள் (uria,DAP,20:20…) மட்டுமே பயன்படுத்துகிறார்கள்… பூச்சிகளையும் திரவ இரசாயன மருந்துகளையே பயன்படுத்தி நஷ்டம் அடைகிறார்கள்… ஆகையால் இயற்கையான முறையில் பயிர் சாகுபடி (விதைத்தல் முதல் அறுவடை வரை)செய்ய வரிவாக உதவங்கள்…

ஏற்கனவே எங்களிடம் இருக்கும் வழிமுறைகளை விட உங்களில் யாரேனும் இந்த நெல் ஐ இயற்கை முறையில் உற்பத்தி செய்திருந்தால் அவர்கள் இந்த நண்பருக்கு உதவி செய்யலாம், அவ்வாறு உதவிசெய்யும் நண்பர்களுக்கு விவசாயம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊதியமாக தரவும் தயாராக உள்ளது
ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்

6 thoughts on “நஞ்சில்லா விவசாயத்தில் நெல் வேளாண்மை: அனுபவம் உள்ளவர்கள் தேவை”

    1. ஐயா அனுப்பிய நபரின் தகவலை அப்படிேயே கொடுத்திருக்கிறேன், அனுப்பும்போது பிழை இருக்கலாம்

  1. பாரம்பரிய நெல் ரகத்தை பட்டத்தில் பயிரிடவும் பல தான்ய விதைப்பு செய்து 55 நாட்களுக்குள் மடக்கி விடவும் விலங்கின கழிவுகளை(எருவு) நிலத்தில்சேர்க்கவும் ஜீவாமிர்தகரைசலை வேர் வழியாகவும் பஞ்சகாவ்யாவை. இலை வழியாகவும் சேர்க்கவும் தேவைபடும்போது

    மூலிகைபூச்சிவிரட்டி பயன்படுத்தவும்

  2. ஐயா நம்மாழ்வாரின் வானகம் வெளியிட்டுள்ள அனைத்து Youtube video க்களும் உங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் நேரிடையான பயிற்சியும் முதல் மற்றும் மூன்றாம் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அவர்களிடத்தில் வழங்கப்படுகிறது.Phone num 9994277505

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj