தலா மூன்று கிலோ சோற்றுக்கத்தாழை, பிரண்டை, தலா இரண்டு கிலோ வேப்பிலை, பப்பாளி, நொச்சி இலை, ஆமணக்கு இலை, ஊமத்தம் இலை, எருக்கன் இலை, ஆவாரை இலை, சுண்டைக்கய் இலை, ஆடு தொடா பாலை இலை ஆகியவற்றைப் பொடிப்பொடியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட வேண்டும்.
இஞ்சி ஒரு கிலோ, பூண்டு அரைக் கிலோ, பச்சை மிளகாய் இரண்டு கிலோ ஆகியவற்றை எடுத்து உரலில் இடித்து, இலைகளுடன் கலந்துகொள்ள வேண்டும். இவை மூழ்கும் அளவிற்கு பசு மாட்டுச் சிறுநீரைச் சேர்க்க வேண்டும்.
பிறகு பாத்திரத்தை மூடி, அடுப்பிலேற்றி கொதிக்க வைக்க வேண்டும். நங்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து 20 நிமிடம் ஆறவிட்டுத் திரும்பவும் அடுப்பிலேற்றிக் கொதிக்க விட வேண்டும். இப்படி நான்கு முறை தொடர்ந்து கொதிக்க வைத்துப் பாத்திரத்தை இறக்கி, நிழலில் வைத்துக் காற்று புகாதவாறு மூடியின் மேல் துணி சுற்றிக்கட்ட வேண்டும்.
இரண்டு நாட்கள் கழித்து இக்கரைசலை வடிகட்டி பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தலாம். 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும்.
எ.செந்தமிழ்,
இளங்கலை வேளாண் மாணவர்.
அக்ரிசக்தியின் வேளாண் விழுது திட்டம்