சாகுபடி முறைகள்(cultural methods):
1.கோடை உழவு மேற்கொள்வதால் மண்ணுக்கு அடியில் வாழும் பூச்சிகள், புழுக்கள், நோய்க்கிருமிகள் வெளியே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன.
2.அறுவடைக்குப்பின் எஞ்சிய பயிர் பாகங்களை சேகரித்து அழித்து மறைந்து வாழும் தண்டுக்கூன் வண்டு, மாவுப்பூச்சி, அசுவினி ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
3.தொடர்ந்து பருத்தியைப் பயிரிடாமல் மாற்றுப் பயிரிட்டு பூச்சிகளின் பெருக்கத்தைத் தடுக்கலாம். உம். பருத்திக்குப் பின் நிலக்கடலை.
4.பருவத்தே பயிரிடுவதன் மூலம் அதாவது ஒரு பகுதியில் 15 நாள் காலவரையரைக்குள் விதைத்து பூச்சி நோய் தாக்குதலை கண்காணித்து பயிர்பாதுகாப்பு செய்யலாம்.
5.வயல் வரப்புகளில் உள்ள களைகளை சேகரித்து அழிப்பதால் பூச்சி மற்றும் நோய்க் காரணிகளை தவிர்க்கலாம்.
6.கவர்ச்சிப்பயிராக பருத்தியைச் சுற்றி வெண்டை பயிரிட்டு புள்ளிக்காய் புழுக்களை கவர்ந்தழிக்கலாம்.
7.ஆமணக்கு செடிகளை வரப்புப் பயிராக பயிரிட்டு அதிலுள்ள புரொடீனியா முட்டை குவியல்களையும், புழுக்களையும் சேகரித்து அழித்துவிடலாம்.
8.ஊடுபயிராக தட்டைப்பயிறு, உளுந்து முதலியவற்றை பயிரிடுவதால் பருத்தியை தாக்கும் பூச்சிகளின் இயற்கை எதிரிகள் பெருகி பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.
9.விதைத்த 30-45 நாளில் மண் அணைத்து பருத்தி தண்டு கூன்வண்டின் சேதத்தை தடுக்கலாம்.
10.நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறன் கொண்ட இரகங்களை பயிரிடலாம்.
உம். Bt பருத்தி- புள்ளிகாய்ப்புழு, பச்சை காய்ப்புழு
சுஜாதா, சுவின் –கருங்கிளை நோய்